TNPSC - GROUP 2 , 2A
போட்டித் தேர்வில் வெற்றி
தமிழ் இலக்கியம் - பகுதி - 1
வினாக்களும் விடைகளும்
1. எட்டுத்தொகை நூல்களில் 'நாடகப் பாங்கில்' அமைந்துள்ள நுாலினைத் தேர்ந்தெடுக்க.
(A) குறுந்தொகை
(B) அகநானுாறு
(C) கலித்தொகை
(D) ஐங்குறுநுாறு
விடை : (C) கலித்தொகை
2. பொருந்தா இணையைச் சுட்டுக.
(A) குறிஞ்சி - யாமம்
(B) முல்லை - மாலை
(C) மருதம் - நண்பகல்
(D) நெய்தல் - ஏற்பாடு
விடை : (C) மருதம் - நண்பகல்
3. 'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே' இப்பாடல் இடம்பெறும் நுால்
(A) அகநானுாறு
(B) புறநானுாறு
(C) நற்றிணை
(D) பரிபாடல்
விடை : (B) புறநானுாறு
4. அகநானுாற்று செய்யுளின் அடிவரையறை
(A) 4 - 8 அடிகள்
(B) 9 - 12 அடிகள்
(C) 3 - 6 அடிகள்
( D ) 13 - 31 அடிகள்
விடை : ( D ) 13 - 31 அடிகள்
5, கலித்தொகையைத் தொகுத்தவர் யார்?
(A) உக்கிரப் பெருவழுதி
(B) பாண்டியன் மாறன் வழுதி
(C) நல்லந்துவனார்
(D) நன்னன் சேய் நன்னன்
விடை : (C) நல்லந்துவனார்
6. 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி' என்ற பாடலை இயற்றியவர்
(A) நக்கீரர்
(B) நம்பி
(C) இறையனார்
(D) யாருமில்லை
விடை : (C) இறையனார்
7. இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நுால்
(A) திருவருட்பா
(B) திருக்குறள்
(C) மகாபாரதம்
(D) ராமாயணம்
விடை : (B) திருக்குறள்
8. திருக்குறளில் 'ஏழு' என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
(A) 11
(B) 9
C ) 8
(D) 10
விடை : C ) 8
9. 'நான்மணிக்கடிகை' என்னும் சொல்லில் கடிகை என்பதன் பொருள்
(A) தோள் வளை
(B) கை வளை
(C) கால் வளை
( D ) கழுத்தணி
விடை : ( D ) கழுத்தணி
10. ‘முறைக்கு மூப்பு இளமை இல்' என்ற அடி இடம் பெறுவது கீழ்க்கண்டவைகளில் எவற்றில்?
A ) பழமொழிநானுாறு
(B) ஆசாரக் கோவை
(C) சிறுபஞ்சமூலம்
(D) ஏலாதி
விடை : A ) பழமொழிநானுாறு
11. 'கல்வி கரையில் கற்பவர் நாள்சில' என்ற பாடல் அடி இடம் பெற்ற நுால் எது?
(A) திருக்குறள்
(B) பழமொழி நானூறு
C ) நாலடியார்
(D) நான்மணிக்கடிகை
விடை : C ) நாலடியார்
12. அடி நிமிர்பு இல்லாச் செய்யுள் தொகுதியால் அறம் பொருள் இன்பத்தைப் பாடுவது என்று இதன் இலக்கணத்தைப் பன்னிருபாட்டியல் கூறுகிறது
(A) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
(B) பதினெண் மேல்கணக்கு நூல்கள்
(C) A மற்றும் B
(D) எதுவுமில்லை
விடை : (A) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
13. கீழ்க்கண்டவைகளில் 'காப்பியம்' என்பதன் பொருளைக் குறிப்பது
(A) தனிப்பாடல்
(B) பொருட் தொடர்நிலைச் செய்யுள்
(C) தொகைநுால்
(D) எதுவுமில்லை
விடை : (B) பொருட் தொடர்நிலைச் செய்யுள்
14. போருக்குக் காரணம் பொறாமை என்று கூறும் காப்பிய நுால் எது?
(A) சூளாமணி
(B) சிலப்பதிகாரம்
(C) மணிமேகலை
(D) நீலகேசி
விடை : (A) சூளாமணி
15. சக்கரவாளக் கோட்டம் என்பதன் பொருள் என்ன?
(A) அமுத சுரபி
(B) தரும சாலை
(C) புத்த பீடிகை
(D) சுடுகாடு
விடை : (D) சுடுகாடு
16. முதன் முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நுால் செய்தவர் இளங்கோவடிகள் என்று கூறியவர் யார்?
(A) பாரதியார்
(B) மு.வரதராசனார்
(C) சீத்தலைச்சாத்தனார்
(D) பாரதிதாசன்
விடை : (B) மு.வரதராசனார்
17. உதயணனுக்கு 'விச்சை வீரன்' என்ற வேறு பெயரும் உண்டு. 'விச்சை வீரன்' என்பதன் பொருள் என்ன?
(A) இசைக்கலையில் வல்லவன்
(B) போர்க்கலையில் வல்லவன்
(C) பலகலை வல்லவன்
(D) ஓவியக்கலையில் வல்லவன்
விடை : (C) பலகலை வல்லவன்
18. கண்ணகிக்குக் கோயில் உள்ள ஊர் எது?
(A) திருவாஞ்சிக்களம்
(B) கலிங்க நாடு
(C) சிங்கபுரம்
(D) கோவலன் பொட்டல்
விடை : (A) திருவாஞ்சிக்களம்
19. சைவத்திருமுறைகளைத் தொகுத்தவர் யார்?
(A) சதாசிவப் பண்டாரத்தார்
(B) முதலாம் ஆதித்தன்
(C) நம்பியாண்டார் நம்பி
(D) நாதமுனி
விடை : (C) நம்பியாண்டார் நம்பி
20. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று புகழ்ந்தவர் யார்?
(A) ஆதிசங்கரர்
(B) அப்பர்
(C) சேக்கிழார்
( D ) சுந்தரர்
விடை : ( D ) சுந்தரர்
நன்றி - தினமலர் நாளிதழ்.
0 Comments