9 ஆம் வகுப்பு - தமிழ்
இயல் - 4 , விரிவானம்
விண்ணையும் சாடுவோம்
இயங்கலைத் தேர்வு
வினா உருவாக்கம் :
' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************** ************* ***********
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வு எழுதி சான்றிதழ் பெற விரும்புவோர் தங்கள் பெயர் , வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எனண்ணிற்கு அனுப்பி இணைப்பைப் பெறலாம்.
****************** ************* **********
1) இஸ்ரோவின் ( ISRO ) ஒன்பதாவது தலைவராகப் பொறுப்பேற்ற தமிழர் யார்?
அ ) அப்துல்கலாம்
ஆ) மயில்சாமி அண்ணாதுரை
இ) அருணன் சுப்பையா
ஈ) சிவன்
விடை : ஈ ) சிவன்
2) விக்ரம் சாராபாய் எவ்வாறு அழைக்கப்படுகிறார் ?
அ) இந்திய வானவியலின் தந்தை
ஆ) இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை
இ) ஏவுகணை நாயகன்
ஈ) அணு விஞ்ஞானி
விடை : ஆ ) இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை
3) விக்ரம் சாராபாய் விண்வெளி
மையம் எங்கே உள்ளது?
அ) திருவனந்தபுரம்
ஆ) திருச்சி
இ) பெங்களூர்
ஈ) கொச்சி
விடை : அ ) திருவனந்தபுரம்
4) ஆரியபட்டா என்ற முதற்
செயற்கைக்கோள் ஏவுதலுக்குக்
காரணமானவர் -----
அ) மாதவன் நாயர்
ஆ) அப்துல்கலாம்
இ ) மயில்சாமி அண்ணாதுரை
ஈ) விக்ரம் சாராபாய்
விடை : ஈ ) விக்ரம் சாராபாய்
5) இஸ்ரோவின் தலைவராக இருந்த சிவன் அவர்கள் பிறந்த சரக்கல்விளை கிராமம் ----- மாவட்டத்தில் உள்ளது.
அ) மதுரை
ஆ) கன்னியாகுமரி
இ) தூத்துக்குடி
ஈ) திருநெல்வேலி
விடை : ஆ ) கன்னியாகுமரி
6) பி.எஸ்.எல்.வி. திட்டம் தொடங்க அரசு இசைவு தந்த ஆண்டு ------
அ) 1983
ஆ) 1986
இ ) 1989
ஈ ) 1992
விடை : அ ) 1983
7) அறிவியலாளர் சிவன் அவர்கள் உருவாக்கிய செயலியின் பெயர் ------
அ) வித்தாரா
ஆ) சித்தாரா
இ) வான் நண்பன்
ஈ) இந்திய அறிவியல்
விடை : ஆ ) சித்தாரா
8) இந்திய ஏவுகணை நாயகன்
அப்துல்கலாம் ----- வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்.
அ) எட்டாவது
ஆ) ஒன்பதாவது
இ) பத்தாவது
ஈ) பதினொன்றாவது
விடை : ஈ ) பதினொன்றாவது
9) அப்துல்கலாம் அவர்களுக்கு
இந்தியாவின் உயரிய விருதான
----- வழங்கப்பட்டது.
அ) துரோணாச்சார்யா விருது
ஆ) பத்ம விருது
இ ) பாரத ரத்னா விருது
ஈ) நல்லாசிரியர் விருது
விடை : இ ) பாரத ரத்னா
10) தமிழ்நாடு அரசின் கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் ------
அ ) அருணன் சுப்பையா
ஆ) சிவன்
இ) மயில்சாமி அண்ணாதுரை
ஈ) வளர்மதி
விடை : ஈ ) வளர்மதி
11) நேவிக் என்ற செயலி -------- பயணத்திற்காக உருவாக்கப்பட்டது.
அ ) கடல்
ஆ) வான்
இ) சாலை
ஈ) மேலே உள்ள மூன்றிற்கும்
விடை : அ ) கடல்
12) ' இளைய கலாம்' என்று
அழைக்கப்படுபவர் யார்?
அ) அருணன் சுப்பையா
ஆ) மாதவன் நாயர்
இ) குமாரசாமி
ஈ) மயில்சாமி அண்ணாத்துரை
விடை : ஈ ) மயில்சாமி அண்ணாதுரை
13) ' கையருகே நிலா ' என்னும்
நூலை எழுதியவர் யார்?
அ) அப்துல்கலாம்
ஆ) பொன்ராஜ்
இ) சிவன்
ஈ) மயில்சாமி அண்ணாதுரை
விடை : ஈ ) மயில்சாமி அண்ணாதுரை
14) அறிவியலாளர் அருணன் சுப்பையா ----- மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
அ ) திருச்சி
ஆ) தஞ்சாவூர்
இ) கடலூர்
ஈ) திருநெல்வேலி
விடை : ஈ ) திருநெல்வேலி
15 ) சந்திராயன் - 1 திட்டத்தின் திட்ட இயக்குநர் யார் ?
அ) விக்ரம் சாராபாய்
ஆ) ஆரியபட்டா
இ) அப்துல்கலாம்
ஈ) மயில்சாமி அண்ணாதுரை
விடை : ஈ ) மயில்சாமி அண்ணாதுரை
0 Comments