PG TRB - தமிழ் - சங்க இலக்கியம்
6 , கலித்தொகை
நாடகவழக்கிலும் உலகியல் வழக்கிலும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரியதாகும் என்மனார் புலவர் (தொல்காப்பியம் அகத்திணையியல்)
கருத்து : தமிழுக்கே உரிய தனி இலக்கணமான அகப்பொருள் இலக்கணத்தைக் கலிப்பாவினாலும் பரிபாடலாலும் பாடுவது வழக்கம் என்பது தொல்காப்பியர் கருத்தாகும்.
நூற்குறிப்பு:
திணை பாடியவர் பாடல்கள்
குறிஞ்சி கபிலர் 29
(முல்லை சோழன் நல்லுருத்திரன் 17
மருதம் மருதன் இளநாகனார் 35
நெய்தல் நல்லந்துவனார் 33
பாலை பெருங்கடுங்கோ 35
எட்டுத்தொகையுள் ஒன்றான கலித்தொகை கலிப்பாக்களால் அமைந்தது.
* இது நாடகப்பாங்கில் அமைந்துள்ளது. இசையோடு பாடுவதற்கேற்றது.
* கலித்தொகையில் கடவுள்வாழ்த்தையும் சேர்த்து நூற்றைம்பது பாடல்கள் உள்ளன.
* கலித்தொகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐம்பெரும் பிரிவுகளை உடையது.
* கலிப்பா துள்ளல் ஓசையை உடையது.
* இப்பாடல்கள் கருத்தாழமும் ஓசையின்பமும் உடையது. எனவே இதனைத் தமிழ்ச் சான்றோர் 'கற்றறிந்தார் ஏத்தும் கலி' எனச் சிறப்பித்துக் கூறுவர்.
* எட்டுத்தொகை நூல்களுள் யாப்பு வகையால் பெயரமைந்தவை பரிபாடல், கலித்தொகை இரண்டுமாம்.
* கலிப்பாக்கள் பல வகைப்படும். அவற்றுள் ஒத்தாழிசை யாப்பு வகையில் அமைந்தது கலித்தொகை.
* இதற்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர் மதுரையாசிரியர் நல்லந்துவனார்.
* சங்க அகப்பாடல்களுள் கைக்கிளைத் திணையிலும், பெருந்திணையிலும் அமைந்த பாடல்கள் கலித்தொகையில் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
"கைக்கினை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக்கிளந்த எழுதிணை என்ப”
என்ற தொல்காப்பிய இலக்கணத்திற்குச் சான்றாகத் திகழ்வது கலித்தொகை மட்டுமே இதற்கு உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் எழுதிய உரை தலைசிறந்ததாகும்.
இந்நூலை நச்சினார்க்கினியர் உரையுடன் 1887-இல் முதன்முதலாகம்
பதிப்பித்தவர் பேரறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் ஆனார்
*************** ************* *************
கல்விப் பணியில் ,
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் . மதுரை - 97861 41410
YOU TUBE - GREEN TAMIL
************** *********** **************
0 Comments