ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் - 3 , உரைநடை உலகம்
பண்பாடு - ஏறுதழுவுதல்
இயங்கலைத்தேர்வு - ONLINE TEST
வினா & விடை - QUESTIN & ANSWER
வினா உருவாக்கம்
பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் ,மதுரை.
**************** ************** ***********
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வு எழுத விருப்பமுள்ளோர் தங்கள் பெயர் படிப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி லிங்க் பெற்றுக்கொள்ளலாம்.
*************** **************** ************
1) வீரத்திற்கும் , விளைச்சலுக்கும் செழிப்பிற்கும், செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படுபவை --
அ) மாடுகள்
ஆ) ஆடுகள்
இ) நாய்கள்
ஈ) பூனைகள்
விடை : அ ) மாடுகள்
2) தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு -----
அ) கபடி
ஆ) குத்துச்சண்டை
இ) ஏறுதழுவுதல்
ஈ) வேட்டையாடுதல்
விடை : இ ) ஏறுதழுவுதல்
3) பண்பாட்டுத்தொன்மையும் இலக்கிய வளமையும் வாய்ந்தது ------ வரலாறு.
அ) இந்தியர்
ஆ) பாண்டியர்
இ) சோழர்
ஈ) தமிழர்
விடை : ஈ ) தமிழர்
4) எழுந்தது துகள் , ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு , கலங்கினர் பலர் என
ஏறுதழுவுதல் பற்றி சங்க இலக்கியமான ------ யில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அ) புறநானூறு
ஆ) முல்லைப்பாட்டு
இ) கலித்தொகை
ஈ) மதுரைக்காஞ்சி
விடை : இ ) கலித்தொகை
5 ) ஏறுதழுவுதல் பற்றிய செய்திகள் உள்ள நூல் -------
அ) கலித்தொகை
ஆ) சிலப்பதிகாரம்
இ) புறப்பொருள் வெண்பாமாலை
ஈ) மேலே உள்ள மூன்றும்
விடை : ஈ ) மேலே உள்ள மூன்றும்
6 ) எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வை ------ பதிவு செய்துள்ளது.
அ ) முக்கூடற்பள்ளு
ஆ) கண்ணுடையம்மன் பள்ளு
இ) உலா
ஈ) பிள்ளைத்தமிழ்
விடை : ஆ ) கண்ணுடையம்மன் பள்ளு
7) சேலம் மாவட்டம் ------- எனும் ஊரில்
எருது பொருதார் கல் உள்ளது.
அ) வாழப்பாடி
ஆ) அயோத்தியாப்பட்டினம்
இ) கருவந்துறை
ஈ) அருநூத்துமலை
விடை : இ ) கருவந்துறை
8) நீலகிரி மாவட்டம் கோத்தகிரி
அருகே ------- ல் எருதுகளை பலர் விரட்டும்
ஓவியம் காணப்படுகிறது.
அ) கரிக்கையூர்
ஆ) மசினகுடி
இ) ஊட்டி
ஈ) தொட்டபெட்டா
விடை : அ ) கரிக்கையூர்
9) ------ நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப்பங்கு வகிக்கிறது.
அ) சிந்து சமவெளி
ஆ) வைகை நதி
இ) ஹரப்பா மொகஞ்சதாரோ
ஈ ) பொருணை
விடை : அ ) சிந்து சமவெளி
10 ) ஏறுதழுவுதல் நிலத்து ------
மக்களின் அடையாளம்.
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) நெய்தல்
விடை : ஆ ) முல்லை
11) ஏறுதழுவுதல் நிலத்து
வேளாண்மக்களின் தொழில்
உற்பத்தியோடு பிணைந்தது.
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ ) மருதம்
ஈ) பாலை
விடை : இ ) மருதம்
12) ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் ------- என்று அழைக்கப்பட்டன.
அ ) ஏர் மாடுகள்
ஆ) எருதுகள்
இ) ஏறுகள்
ஈ) மேலே உள்ள மூன்றும்
விடை : ஈ ) மேலே உள்ள மூன்றும்
13 ) மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏறுபடுத்திய விழாவே -------
அ ) மாட்டுப்பொங்கல்
ஆ) காணும் பொங்கல்
இ) திருவள்ளுவர் திருநாள்
ஈ) போகிப்பண்டிகை
விடை : அ ) மாட்டுப்பொங்கல்
14 ) சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் ---- ஐக் குறிக்கும்.
அ) கயறு
ஆ) வளையம்
இ) மணி
ஈ) மாலை
விடை : ஆ ) வளையம்
15 ) ஏறுதழுவுதல் ------- ஆண்டுகாலத்
தொன்மையுடையது.
அ) 500
ஆ) 1000
இ ) 1500
ஈ) 2000
விடை : ஈ ) 2000
0 Comments