TRB - தமிழ்
தமிழர்களின் வீரவிளையாட்டு
தமிழர்களின் வீரவிளையாட்டு
ஏறுதழுவுதல்
ஏறு தழுவுதல்' என்ற வீர விளையாட்டு முல்லை மற்றும் மருதநிலங்களில் கால் கொண்டு தமிழர்தம் வாழ்வோடு பின்னிப் பிணைந்ததாகும்.
பல நூற்றாண்டுகளாக தமிழர்தம் அடையாளமாகவே இவ்வீரவிளையாட்டு அறியப்படுகிறது.
இலக்கிய இலக்கண நூல்கள் :
சிலப்பதிகாரம் என்ற இலக்கியத்திலும், புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்து கூறப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல்
“எழுந்தது துகள்,
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு,
கலங்கினர் பலர்'' (கலித்தொகை 102 : அடி 21-24)
பொருள்: எங்கணும் புழுதித் துகள் எழுந்தது. ஆயர் மார்புகளைக் காட்டி நின்றனர்; ஏறுகளின் கொம்புகளும் குத்துவதற்குக் கீழே தாழ்ந்தன. தழுவினார் பலரும் கலங்கிப் போயினர்.
0 Comments