மாணிக்கவாசகரின் திருவாசகம் - 4 , போற்றித் திரு அகவல் - பகுதி 4 / MANIKKAVASAKARIN THIRUVASAKAM - POTRITH THIRU AKAVAL - PART - 4

 

மாணிக்கவாசரின் திருவாசகம்

4 , போற்றித் திரு அகவல்

பகுதி - 4


உரை விளக்கம்: 

பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி , 

தலைமையாசிரியர் , ( ப.நி )

கோகிலாபுரம் , இராயப்பன் பட்டி , தேனி


இடை மருது உறையும், எந்தாய் போற்றி!

சடையிடைக் கங்கை தரித்தாய், போற்றி!

ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி!

சீரார் திருவையாறா, போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா, போற்றி!

கண்ஆர் அமுதக் கடலே, போற்றி!

ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி!

பாகம் பெண்உரு ஆனாய், போற்றி!

பராய்த்துறை மேவிய பரனே, போற்றி!

சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி!

மற்று ஓர் பற்று இங்கு அறியேன், போற்றி!

குற்றாலத்து எம் கூத்தா, போற்றி!

கோகழி மேவிய கோவே, போற்றி!

ஈங்கோய்மலை எம் எந்தாய், போற்றி!

பாங்கு ஆர் பழனத்து அழகா, போற்றி!

கடம்பூர் மேவிய விடங்கா, போற்றி!

அடைந்தவர்க்கு அருளும் அப்பா, போற்றி!

இத்தி தன்னின்கீழ் இருமூவர்க்கு

அத்திக்கு அருளிய அரசே, போற்றி!

தென்னாடு உடைய சிவனே, போற்றி!

என்னாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

ஏனக் குருளைக்கு அருளினை, போற்றி!

மானக் கயிலை மலையாய், போற்றி!

அருளிட வேண்டும் அம்மான், போற்றி!

இருள்கெட அருளும் இறைவா, போற்றி!

தளர்ந்தேன், அடியேன், தமியேன், போற்றி!

களம் கொளக் கருத அருளாய், போற்றி!

'அஞ்சேல்' என்று இங்கு அருளாய், போற்றி!

நஞ்சே அமுதா நயந்தாய், போற்றி!

அத்தா போற்றி! ஐயா, போற்றி!

நித்தா, போற்றி! நிமலா, போற்றி!

பத்தா, போற்றி! பவனே, போற்றி!

பெரியாய், போற்றி! பிரானே, போற்றி!

அரியாய், போற்றி! அமலா, போற்றி!

மறையோர் கோல நெறியே, போற்றி!

முறையோ? தரியேன்! முதல்வா, போற்றி!

உறவே, போற்றி! உயிரே, போற்றி!

சிறவே போற்றி! சிவமே, போற்றி!

மஞ்சா, போற்றி! மணாளா, போற்றி!

பஞ்சுஏர் அடியாள் பங்கா, போற்றி!

அலந்தேன், நாயேன், அடியேன், போற்றி!

இலங்குசுடர் எம்ஈசா, போற்றி! +


Post a Comment

0 Comments