ஜனவரி 26 - இந்திய குடியரசு தினவிழா - பாரதநாட்டின் சிறப்புகள் / JANUARY 26 - REPUBLIC DAY - INDIAN LEADERS

 

         குடியரசு தினம்

           Republic day

          26 • 01 • 2022

பாரத நாடு பழம் பெரு நாடு நீரதன் புதல்வர் 

இந்த நினைவகற்றாதீர் "

                   -- மகாகவி சுப்பிரமணிய பாரதி 

     பாரத நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த பல குறுநில மன்னர்கள் பாரதநாட்டை  ஆண்டனர் .எனினும் இவர்களிடையே இருந்த போட்டியும், சண்டை சச்சரவுகளுமே வெள்ளையனை பாரதத்தில் வேரூன்ற  வைத்தது. அடிமைப்படுத்தியவர்களை , எதிர்த்த இந்தியரை , ஆங்கிலேயர் தன் இராணுவ வலிமையால்அடக்கினர். இவையனைத்தையும் தம் உறுதியால் வென்று சுயராஜ்ஜியம் கண்டு , பின் தங்களை ஆள தாங்களே ஒரு வழிகண்டு , தனக்கென ஒரு அரசியலமைப்பை உருவாக்கி , இறுதிப்படுத்தப் பட்டு நமக்கு நாமே - என்ற இந்த முறையை ஏற்றுக் கொண்ட நாளே குடியரசு நாள்.

  குடியரசு என்னும் மக்களாட்சி மலர்ந்த நாள் குடியரசு நாள்.மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அம்மக்களை ஆட்சி செய்வதையே மக்களாட்சி முறையாகும்.இந்த மக்களாட்சியில், இந்தியா ஒரு குடியரசாக மாறிய நாளே நாட்டுக்கும் , நாட்டு மக்களுக்கும் மிக முக்கியமான நாளாகவும் , இந்திய சுதந்திரத்திற்காகப்  பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து போற்றும் சிறப்பான நாளாகவும் விளங்குகின்றன. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட இந்திய விடுதலை இயக்கத்தினர் ' பூர்ண சுவராஜ் ' என்ற அறைகூவலை நினைகூர1930 -  ஆம் ஆண்டு ஜனவரி 26 - ம் நாளை விடுதலை நாளாக காந்தியடிகள் தேர்ந்தெடுத்தார்.இதன்படி காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று கூடி காந்தியடிகள் பரிந்துரைத்த விடுதலைநாள் உறுதிமொழியை  எடுத்துக்கொண்ட னர்.இதன் படி 1947 - ஆம் ஆண்டு ஆகஸ்டு 28 - ம் நாள் ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு வை உருவாக்கினர்.

இதன்படி 1947 - ஆம் ஆண்டு ஆகஸ்டு 28 - ம் நாள் ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழுவை உருவாக்கினர். இதன் தலைவராக டாக்டர் .பீ .ஆர் .அம்பேக்கர் நியமிக்கப்பட்டார். அந்த வரைவுக் குழுவானது ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 - ஆம் ஆண்டு நவம்பர் 4 -ஆம் நாள் அரசியலமைப்பு சட்டமாக்கி சமர்ப்பித்தது.

இந்திய அரசியலமைப்பு : ( constitution of India 🇮🇳)

    உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பானது உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது நெகிழாத் தன்மையும் ,நெகிழ்ச் சித்தன்மையும் உடையது.இது கூட்டாட்சி மற்றும் ஒரு முகத்தன்மையும் கொண்டது. பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது.

1947 - ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 - ம் ஆண்டு அரசியல் நிர்ணயமன்றத்தின் தீர்மானத்தின் படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை டாக்டர். பீ.ஆர் அம்பேத்கர் தலைமையில் ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு ( Drafting Committee)   உருவாக்கப்பட்டது. 

இந்த அரசியலமைப்புச் சட்டம் 2- ஆண்டுகள் , 11 மாதங்கள் , 166- நாட்கள் நீண்ட சட்ட அமைப்பாகும். 1950 - ஆம் ஆண்டு 308 - பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர   அரசியலமைப்பாக கையெழுத்திட ப்பட்டது.


இந்திய அரசியலமைப்பு உலகிலேயே மிக நீண்ட அரசியல் அமைப்பாகும்.இதில் மொத்தம் 25 - பிரிவுகள் , 12 - அட்டவணைகள், 104 - திருத்தங்கள் , 448 - உட்பிரிவுகள் மற்றும் 1, 17 , 369 - சொற்களை உடையது.கூட்டாட்சி தத்துவம் கொண்டது.


இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஒரு இஸ்லாமிய பெண் ஆவார். ஹுரையா தியாப்ஜி ( Suraia thiapji ) என்பவராவார்.அவருக்கு துணையாக இருந்தவர்  அவரது கணவர் ஃபக்ருதீன் தியாப்ஜி .

கடன்களின் பொதி ;

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க உலக நாடுகள் பலவற்றின், அரசியலமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவை கூட்டாட்சி முறை - கனடா,அடிப்படை உரிமைகள் - அமெரிக்க ஐக்கிய நாடுகள் , அடிப்படை கடமைகள் - சோவியத் யூனியன் ,அரசியல் சட்டத்திருத்த முறை - தென்னாப்பிரிக்கா, மாநிலங்களவை நியமன எம் .பி.க்கள் முறை - அயர்லாந்து போன்ற நாடுகளிடம் இருந்து பெறப்பட்டது. இதன்காரணமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக்" கடன்களின் பொதி "என்று கூறுவர்.

இந்திய மக்களின் நன்மையைக் காக்கும் விதமாக முடியாட்சி கலைக்கப்பட்டு , குடியாட்சி  அமைத்தலால், நாடு சுதந்திரத்து டனும் , பாதுகாப்பு டனும், வலிமையுடனும்  விளங்கும் என எண்ணியதன் விளைவாகவே அரசியல் சாசனம் கொண்டுவரப்பட்டது. எனவே இந்திய அரசியலமைப்பின் நோக்கம் , இந்தியாவின் நோக்கம் அதை அடைவதற்கு ஒவ்வொருவரும்   உண்மையாக இருப்பது அவசியமாகின்றது.இந்த நோக்கத்தை எக்காரணத்திற்காகவும், சிதைக்கவோ , மாற்றவோ செய்யாமல் , பாதுகாப்போம் என உறுதிக் கொள்ள வேண்டும் . இதை இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட தினமான இன்றைய நாளில் ஒவ்வொரு இந்தியரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறுதி மொழியாகும் .எனவே இந்த நன்  நாளில்  நாட்டின் உறுதியையும் , இறையாண்மையையும் மதித்து ,போற்றி ,காத்துப் பின்பற்றுவது நமது கடமையாகும்.!

Post a Comment

0 Comments