TRB - தமிழ்
தமிழரின் கப்பற்கலை
நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழைமையானது, தொல்காப்பியம். அந்நூல் 'முந்நீர் வழக்கம்' என்று கடற்பயணத்தைக் குறிப்பிடுகிறது.
கடற்பயணத்திற்கான சான்றுகள் :
கடலோடா கால்வல் நெடுந்தேர் கட
நாவாயும் ஓடா நிலத்து
- இக்குறள் மூலம் திருவள்ளுவர் காலத்திலேயே பெரிய கப்பல்கள் இருந்ததை அறிய முடிகிறது.
* பட்டினப்பாலையில் பூம்புகார் துறைமுகத்திலிருந்து பெரிய கப்பல்கள் மூலமாக ஏற்றுமதி, இறக்குமதி நடந்ததை அறிய முடிகிறது.
நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி இடம்பெற்றுள்ளது. கடல் கடந்து தமிழர்கள் கப்பல்கள் மூலம் சென்றதற்கு இது ஒரு சான்றாகும்.
பிற்காலச் சோழர்களில் முதலாம் இராஜராஜசோழனும், முதலாம் இராஜேந்திர சோழனும் பெரிய கப்பற்படையைக் கொண்டு பல நாடுகளை வென்றனர்.
* 'உலகு கிளர்ந்தன்ன உருகெழுவங்கம்' என அகநானூறு
குறிப்பிடுகிறது.
(அடுங்கலம் தாஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்'
என்ற பதிற்றுப்பத்து பாடல் (52) கூறுகிறது.
சேந்தன் திவாகரம் என்ற நிகண்டு நூலில் பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தொடக்காலத்தில் தமிழர் மரங்கள் பலவற்றை இணைத்துக்கட்டி,அதன்மீது ஏறி நீரில் பயணம் செய்ததால் அவை கட்டுமரம்எனப்பட்டது.
. பின்னர் எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியை குடைந்து எடுத்துவிட்டு தோணியாகப் பயன்படுத்தினர். உட்பகுதி தோண்டப்பட்டதால் அவை தோணிகள் எனப்பட்டன.
- சிறிய நீர்நிலைகளைக் கடக்க தமிழர்கள் தோணி, ஒடம், படகு,புணை, மிதவை, தெப்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தினர்.
- கடல்வழிப் பயணத்திற்கு அளவில் பெரிய கலம், வங்கம், நாவாய் முதலியவற்றைப் பயன்படுத்தினர்.
0 Comments