சாகித்திய அகாதமி விருதாளர் தீபம் நா.பார்த்தசாரியின் இலக்கியச் சாதனைகள் / WRITER DEEPAM.NA.PAARTHA CHARATHI

 


சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்  நா • பார்த்தசாரதி பிறந்த தினம்

           18 • 12 • 2022


இலட்சியவாத எழுத்துக்கள் வழியாக இளைஞர்களுக்கு  புதிய பாதை வகுத்தவர் .சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்.நா.பார்த்தசாரதி அவர்கள் 1932 -திசம்பர் 18 - ஆம் நாள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் நரிக்குடி என்னும் சிற்றூரில் பிறந்தார். நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் நா.பா  இறுதிவரை நடுத்தர குடும்ப வாழ்க்கையே  வாழ்ந்துச் சென்றது சிறப்பு. தமிழை முறையாகக் கற்றார். பின்பு மதுரை தமிழ்ச்சங்கத்தில் படித்து பண்டிதர் பட்டம் பெறினார்.இவரது மொழி ஈர்ப்பும் புலமையும் சமூகத்திற்காக சே க்கப்படுகிறார். இவரது கதைகள் சமகால சமூகப் பிரச்சனைகளைப் பற்றியதாக அமைந்துள்ளது.


ஆற்றிய பணிகள்:

பாரதியார் ஆசிரியராகப் பதவிவகித்த மதுரை சேதுபதிப் பள் ளியில் நா. பார்த்தசாரதி அவர்களும் ஆசிரியராகப் பணியா ற்றினார்.பின்பு கல்கி இதழின் ஆசிரியரான சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அந்த உதவி ஆசிரியராகச் சேர்ந்தார்.கல்கி இதழில் அவர் எழுதிய முதல் புதினம் "குறிஞ்சி மலர் " ஆகும்.1965 -ஆம் ஆண்டு கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக ' தீபம் ' என்ற மாத இதழைத் தொடங்கினார்.1979 - லகப் பொறுப்பேற்று நடத்தினார்.' சாயங்கால மேகங்கள் ',நிசப் த சங்கீதம், ராணி மங்கம்மாள் போன்ற நாவல்களை தினமணிக் கதிரில் எழுதினார்.தினமணிக் கதிர் பத்திரிக்கையில்றை எழுதினார். மேலும் சாகித்ய அகாதமியின் உறுப்பினராக ச் சேர்க்கப்பட்ட தமிழ்ப் படைப்புகளை தேசிய அளவில் பிரபலப்படுத்த முழு முயற்சியாக உழைத்தார்.சிறுகதை , நெடுங்க

பயண இலக்கியம் :

    பயணக் கட்டுரைகளும் நிறைய எழுதினார். ரஷ்யா , இங்கிலாந்து, போலந்து , பிரான்ஸ் , ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி , எகிப்து, குவைத் போன்ற பல நாடுகளுக்குச் சென்று பல பயணக்கட்டுகரைகள் எழுதியது குறிப்பிடத்தக்கது. புது உலகம் கண்டேன், ஏழு நாடுகளில் எட்டு வாரங்கள் போன்றவை வை பயணக் கட்டுரைகளைப் படைத்தார்.


நா.பாரதசாரதியின் படைப்புகள்:

நா.பா படைப்புகளில் சுயமுன்னேற்றச் சிந்தனைகள் மற்றும்  சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள் மிகுந்துக் காணப்படும்.

நெடுங்கதைகள் - குறிஞ்சி மலர், பொன்விலங்கு, நிசப்த சங்கீதம் , கபாடபுரம்,

கவிதை கட்டுரை மற்றும் ஆராய்ச்சி நூல்கள் :

நெடுங்கதையும் .சிறுகதையும் மற்றுமன்றி பல கவிதைகள் கட்டுரைகள் , ஆராய்ச்சி நூல்கள் போன்றவற்றையும் படிப்பவர் வியந்து மகிழும் வண்ணம் எழுதியுள்ளார். அவை மொழியின் வழியே ,கவிதைக் கலை , நானூற்றில் நல்லக் காட்சிகள் ,சரத் ​​சந்திரர் ( மொழிபெயர்ப்பு ),வீரேசலிங்கம் ( மொழிபெயர்ப்பு ), பூமியின் புன்னகை ( கவிதை ),புதிய பார்வை, கடற்கரை நினைவுகள் , சிந்தனை மேடை , புது உலகம் கண்டேன் ,-சிந்தனை வளம் ,ஏழு நாடுகளில் எட்டு வாரங்கள் , திறனாய்வுச் செல்வம் போன்றவற்றையும் எழுதி மொழி வளத்தையும், கலை வளத்தையும் உயர்த்துகிறார். 

பெற்ற விருதுகள்:

* சமுதாய வீதி என்னும் நெடுங்கதைக்கு சாகித்திய அகாதமி பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

* துளசி மாடம் என்னும் நெடுங்கதைக்கு ராஜா சர் அண்ணாமலை விருது வழங்கப்பட்டது .

* தமிழ் நாடு பரிசு

* கம்பராமாயணம் தத்துவக் கடல் போன்ற விருதுகளும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப் பட்டார்.

எழுத்தின் பெருமை :

ஞானரடியார் மன்றம் என்ற அமைப்பின் மூலமாக ,நா.பா வின் பரம ரசிகரான அ.ந.பாலகிருஷ்ணன் என்பவர் ,நாபார்த்தசாரதி அவர்களின் மறைவிற்குப் பின் , ஆண்டு தோறும் ,பல ஆண்டுகளாக நினைவுக் கூட்டம் நடத்தினார்.இது ஒரு ரசிகர் தம் சொந்தச் செலவில் இவ்வாறாக ஆண்டு தோறும் நினைவுக் கூட்டம் நடத்துவது என்பது கண்டிராத அரிய செயலாகவே உள்ளது. இவற்றைக் கண்டது ஆசிரியரின்  எழுத்தின் இனிமை, இன்றியமையாமையைக் காட்டுகிறது   புகழ்பெற்ற எழுத்தாளர். தற்கால இலக்கியவாதிகளில் நா• பார்த்தசாரதி அவர்களின் தனித்தன்மை மிளிர்கிறது. இவரது படைப்புகளுக்கு அணிசேர்ப்பவை,எழில் கொஞ்சும்  நடையாகும்.எழுத்துக்களைக் கோர்த்து , வார்த்தைகளைப் பின்னி மடக்கிய வாக்கியங்கள் அழகு மிகுந்தவை.உவமை நலங்களும் அழகிய தீபங்களாக அணிசெய்கின்றன. சான்றாக அழகிய கையெழுத்துப் பற்றிக் கூறும் போது " தேர்ந்து பழகிய கை பூத்தொடுத்த மாதிரி " என்று மகிழ்கிறார். இது போன்ற உவமை பயன்படுத்திய விதம் புதுமையாக சிந்தனையாக மிளிர்கிறது.இந்த ரசனை மிக்க வரிகள் பலரையும் ஈர்த்தது. இவரது எழுத்துகள் இலட்சிய வாதம் சார்ந்த வை .சுயமுன்னேற்றம் சார்ந்த சிந்தனைகள் காணப்பட்டதால் இவை இளைஞர்களை கவர்ந்ததால், இளைஞர்கள் கொண்டாடும் எழுத்தாளராக வளம் வந்தார் இவரது கதைகள் சமகால சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கை கொண்ட கதைமாந்தர்களைக் கொண்டதாக உள்ளது அனைவரையும் கவர்கின்ற அம்சமாக விளங்குகின்றன. '  குறிஞ்சி மலர் ' நாவலின் அரவிந்தன் , பூரணி கதாபாத்திரங்களின் பெயர்கள் காண்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு இன்றளவும் இன்பம் சேர்க்கின்றன. தங்கள் வீட்டுப்  பிள்ளைகளுக்கு இக் கதாபாத்திரங்களின் பெயர்களை வைக்கும் அளவிற்கு மேன்மை மிகுந்ததாகக் கருதப்பட்டது. '  குறிஞ்சி மலர் ' தொலைக்காட்சித் தொடரில் அரவிந்தனாக நடித்த இன்றைய முதல்வர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின்அவர்கள் ,இத்தொடரில் நடித்தபோது தன் மனம் மென்மை பட்டதாகக் கூறி மகிழ்ந்தார் என்பது பெருமைக்குரியதாகும். 

இவரது ' சாயங்கால மேகங்கள் ' என்னும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 - ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகை முதல் பரிசைப் பெற்றது. கல்வி கற்க வயதில்லை என்பதை மெய்ப்பிக்கும் தமது 45 - ஆவது வயதுக்குப் பிறகு தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார்.அதாவது  சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து தமிழ் இலக்கியம் கற்று முதுகலைப் பட்டம் பெற்றார்.பின்பு பைந்தமிழர் நாகரிகம் அறியும் ஆர்வத்தில் கட்டடக் கலையும் , நகரமைப்பும் என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தார்.


அமுசுரபியைத் தந்த அமுதசுரபி :

அமுதசுரபி என்னும் பத்திரிக்கையின் ஆசிரியரான விக்கிரமனின் வேண்டுதலுக் கிணங்க தம் சுயசரிதையை எழுதத் தொடங்கி , அமுதசுரபிக்காக எழுதும் போது , எழுதிய பேனா எழுதியபடியே இருக்க 1987 - ம் ஆண்டு டிசம்பர் 13 - ஆம் நாள் இந்த மண்ணுலகம் நீங்கி , விண்ணுலகப் பயணம் அடைந்ததார்.எழுதுவதில் தொடங்கிய பயணம் ,தாம் எழுதும் போதேதன்னுயிரை நீத்தார்.இந்த அரிய வரம் இறைவனால் அளிக்கப்பட்டதாகும். இவரது அரிய, இனிய படைப்புகளை நாம்நேசித்து வாசிப்பதே அவருக்குக் கூறும் நன்றியாகும். இத்தகைய எழுத்தாளரை , படைப்பாளியை என்றும் போற்றுவோம்.!

Post a Comment

0 Comments