TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி
பகுதி - அ : 2
தொடரும் தொடர்பும் அறிதல்
ஆசிரியர்கள் , வேறுபெயர்கள்
ஆசிரியர்கள் வேறு பெயர்கள்
1. திருவள்ளுவர் - வள்ளுவ நாயனார், தேவர்,. முதற்பாவலர்,மாதாநுபங்கி, தெய்வப் புலவர், நான்முகன், செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர்
2. அகத்தியர் - குடமுனி, தமிழ்முனி, பொதிகைமுனிவன்
3. திருஞானசம்பந்தர் - இயற்பெயர் ஆளுடைய பிள்ளை. திராவிடசிசு, வேதநெறி தழைத்தோங்க வந்தவர், மிகுசைவத்துறை விளங்கத் தோன்றியவர்.
4. திருநாவுக்கரசர் - இயற்பெயர் மருள்நீக்கியார், வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர்.
5. சுந்தரர் - இயற்பெயர் ஆரூரர்/ நம்பியாரூரர், வன்தொண்டர், தம்பிரான் தோழர்
6. மாணிக்க வாசகர் - இயற்பெயர். தெரியவில்லை, திருவாதவூரார், அருள் வாசகர், மாணிக்கவாசகப் பெருமான்
7. சேக்கிழார் - இயற்பெயர் அருண்மொழித் தேவர். வேறுபெயர்கள்: உத்தமசோழப் பல்லவர், தொண்டர்சீர்பரவுவார்
8. பெரியாழ்வார் - இயற்பெயர் விஷ்ணு சித்தர், பட்டர்பிரான், இறைவனுக்கு பல்லாண்டு பாடியவர்
9. ஆண்டாள் - பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள், கோதை,சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, நாச்சியார்
10. குலசேகராழ்வார் - சேரமன்னர். கொல்லிக்காவலன், கூடல் நாயகன்,கோழிக்கோ
11. திருமங்கையாழ்வார் - கலியன், கலிநாடன், மங்கையர்கோன், மங்கையர்வேந்தன், பரகாலன், கலிகன்றி (துன்பம் நீக்குபவன்)
12 . நம்மாழ்வார் - சடகோபன், மாறன், பராங்குசர், ஆழ்வார்கள் அவையவி
13 . சீத்தலைச் சாத்தனார் - தண்டமிழ்ச் சாத்தன், தண்டமிழ்ப் புலவன்,
14 . பாரதியார் - இயற்பெயர் சுப்பிரமணியர். வேறுபெயர்கள்: ஷெல்லி சன், தேசியகவி, விடுதலைக்கவி, மகாகவி,செந்தமிழ்த்தேனி, சிந்துக்குத் தந்தை, கவிக்குயில், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, கற்பூரச் சொற்கோ, புதிய அறம்பாட வந்த அறிஞன், பாட்டுக்கொரு புலவன்.
15 . பாரதிதாசன் - இயற்பெயர் சுப்புரத்தினம். வேறுபெயர்கள்: புரட்சிக்கவி,புதுமைக்கவி, இயற்கைக்கவி, கருப்புக்குயில்
16 . இராமலிங்க அடிகள் - வள்ளலார்; வடலூர் சன்மார்கக் கவி,
17 . ஈ.வெ.ரா. - இயற்பெயர் ராமசாமி. வேறுபெயர்கள்: பெரியார், சுயமரியாதைச் சுடர், பகுத்தறிவுப் பகலவன், தமிழர் தலைவன், தன்மான இயக்கத் தந்தை, வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர்
0 Comments