ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு
வினாத்தாள் - 2013 - 2014
வினாக்களும் விடைகளும் - பகுதி - 2
50 முதல் 100 வரை - வினாக்களும் விடைகளும்
பிஜி - டிஆர்பி - தமிழ்
அசல் வினாத்தாள் - 2013 - 2014
கேள்வி பதில் - பகுதி - 2
**************** ************* **********
51. கட்டளைக் கலித்துறையில் அமைந்த யாப்பு நூல்
A) இலக்கண விளக்கம்
B) யாப்பருங்கலம்
C) யாப்பருங்கல விருத்தியுரை
D) யாப்பருங்கலக் காரிகை
52. அணியிலக்கணம் கூறும் நூல்களுள் முதன்மையானது
A) தண்டியலங்காரம்
B) மாறனலங்காரம்
C) இந்திர காளியம்
D) மாறனகப் பொருள்
53. தண்டியலங்கார பொருளணியலில் தன்மையணி முதல் பாவிக அணி வரை உள்ள மொத்த அணிகள்
A) 25 அணிகள்
B) 27 அணிகள்
C) 35 அணிகள்
D) 37 அணிகள்
54. 'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு' இதில் இடம் பெறும் அணி
A) உவமையணி
B) வேற்றுமையணி
C) அதிசய வணி
D) சிலேடை அணி
55. ஐந்திலக்கணம் கூறும் முதல் இலக்கண நூல்
A) வீரசோழியம்
B) முத்துவீரம்
C) நேமிநாதம்
D) பிரயோக விவேகம்
56. பன்னாட்டுக் கூட்டமைப்பு நாடுகளின் பொதுச்சபை 1974 -ஆம் ஆண்டினை என அறிவித்தது.
A) உலக ஒற்றுமை ஆண்டு
B) உலக சுற்றுச்சூழல் ஆண்டு
C) உலக மக்கள்தொகை ஆண்டு
D) உலகக் கல்வி ஆண்டு
57. கற்போர் கட்டுப்பாட்டு கற்பித்தல் முறை (LCI) --------- என்பவரால் உருவாக்கப்பட்டது.
A) இராபர்ட் மேகர்
B) BE ஸ்கின்னர்
C) சிட்னி - பிரஸ்ஸி
D) நார்மென் A. கௌடர்
58. பெண்களுக்காக 'மனவியல்' பாடத்தை பரிந்துரை செய்த கமிட்டி
A) தாராசந்த் கமிட்டி
B) கோத்தாரி கமிட்டி
C) AL முதலியார் கமிட்டி
D) டாக்டர் இராதாகிருஷ்ணன் கமிட்டி
59. 'புத்தக திரிபுக்காட்சி' உருவ விளக்கப்படம் பின்வருவனவற்றுள் எதனைக் குறிப்பதாக அமைகிறது?
A) பகுப்புக் கவனம்
B) கவன வீச்சு
C) கவன வகுப்பு
D) கவன ஊசல்
60. மனவெழுச்சி வளர்ச்சியில் 'ஹெடானிசக்' என்ற கருத்து எதனை மையமாகக் கொண்டு அமைகிறது?
A) இனிமை
B) முதிர்ச்சி
C) கற்பித்தல் முறைகள்
D) அடைவு
61. கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம்
A) நீதி நூல் காலம்
B) பக்தி இலக்கிய காலம்
C) சிற்றிலக்கிய காலம்
D) நாடக இலக்கிய காலம்
62. காப்பிய விதிகள் பற்றிக் குறிப்பிடும் இலக்கண நூல்
A) தண்டியலங்காரம்
B) யாப்பருங்கலக் காரிகை
C) நன்னூல்
D) தொல்காப்பியம்
63. உலக நிலையாமையை எடுத்துக்காட்டும் நீதிநூல்
A) திரிகடுகம்
B) ஆசாரக்கோவை
C) ஏலாதி
D) முதுமொழிக்காஞ்சி
64. இலத்தீன் மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர்
A) இராஜாஜி
B) ஜி.யூ. போப்
C) வீரமாமுனிவர்
D) வ.வே.சு. ஐயர்
65. புகார் காண்டத்தின் இறுதி காதை
A) நாடுகாண் காதை
B) காடுகாண் காதை
C) கொலைக்களக் காதை
D) வரம் தரும் காதை
66. "The God of Small Things' என்ற நூலின் ஆசிரியர்
A) அருந்ததிராய்
B) சல்மான் ருஷ்டி
C) ஆர்.கே. நாராயணன்
D) கே.ஆர். நாராயணன்
67. சோடியம் குளோரைடு (உப்பினை) நீரில் சேர்க்கும் போது, கரைசலின் கொதிநிலை
A) சரியாக 100°C
B) 100° C விட அதிகம்
C) 100° C விட குறைவு
D) சரியாக 0°C
68. NH 7 பின்வருவனவற்றை இணைக்கிறது
A) டெல்லி மற்றும் கன்னியாகுமரி
B) காஷ்மீர் மற்றும் கன்னியாகுமரி
C) ஆக்ரா மற்றும் கன்னியாகுமரி
D) வாரணாசி மற்றும் கன்னியாகுமரி
69. நோபல் அமைதி பரிசிற்காக மிக இளம் வயதில் பரிந்துரைக்கப்பட்ட, பெண் கல்வி உரிமைக்காக அறியப்படுபவர்
A) நூர்-உல்-பாத்திமா
B) மலாலா
C) யாஸ்மின்
D) நூர்-உல்-ஃபரிதா
70. ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றது?
A) ஷாஜகான்
B) ஜஹாங்கீர்
C) பகதூர் ஷா
D) ரங்கசீப்
71 ஒலியை ஆராயும் முறையை எத்தனை பிரிவாக வகுக்கிறார்கள் ?
B) நான்கு
A) இரண்டு
D) ஆறு
C) மூன்று
72. அரேபியா, எகிப்து போன்ற பகுதிகளில் பேசப்படும் மொழியினம்
B) உலாப் இனம்
A) அன்னமியினம்
C) நீக்ரோ இனம்
D) செமிட்டிக் இனம்
73. குவிழொழி எந்த மாநிலத்தில் பேசப்படுகிறது ?
A) ஒடிசா
B) மத்தியப்பிரதேசம்
C) பீகார்
D) மைசூர்
74. திராவிட மொழிகளிலுள்ள திணை பால் பாகுபாடு சிறந்தது என்று கூறியவர்
A) வீரமாமுனிவர்
B) குண்டர்ட்
C) கால்டுவெல்
D) எமனோ
75. 'தமிழ்மொழி பெருமை மிக்க பழைய வரலாறு உடையதாகும்' என்று உரைத்தவர்
A) தீட்சிதர்
B) தெ.பொ.மீ.
C) ஹீராஸ்
D) சாட்டர்ஜி
76. 'மதுரையைத் தென்தமிழ் மதுரை' எனக் குறிப்பிடும் நூல்
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) வளையாபதி
D) குண்டலகேசி
77. பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெறும் அகநூல்கள் :
A) 4
B) 5
C) 6
D) 7
78. சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை இடம் பெறும் நூல்
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) சீவகசிந்தாமணி
D) குண்டலகேசி
79. வைரவியாபாரி இடம்பெறும் காப்பியம்
A) மணிமேகலை
B) சீவகசிந்தாமணி
C) வளையாபதி
D) சிலப்பதிகாரம்
80. “பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை
செத்தும்” என்ற வரிகள் இடம் பெறும் நூல்
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) வளையாபதி
D) குண்டலகேசி
81 'தாண்டகவேந்தர்' என்றழைக்கப்பெறுபவர் யார்?
A) திருநாவுக்கரசர்
B) திருஞானசம்பந்தர்
C) மாணிக்கவாசகர்
D) சுந்தரர்
82 சைவத் திருமுறைகள் முதல் மூன்று திருமுறைகள் ஆசிரியர் யார்?
A) திருநாவுக்கரசர்
B) மாணிக்கவாசகர்
C) திருஞானசம்பந்தர்
D) சுந்தரர்
83. பன்னிரு ஆழ்வார்களுடன் கடவுளைப் பாடாது அடியாராம் நம்மாழ்வாரைப் பாடியது யார்?
B) திருமங்கை ஆழ்வார்
C) ஆண்டாள்
D) திருப்பணாழ்வார்
A) மதுரகவி ஆழ்வார்
84. தஞ்சைவாணன் கோவையின் ஆசிரியர் பெயர் தருக
A) பொய்யாமொழிப் புலவர்
B) பொய்கையார்
C) சேக்கிழார்
D) ஒட்டக்கூத்தர்
85. திருமந்திரத்தின் உட்பிரிவாக எத்தனை தந்திரங்கள் இடம் பெற்றுள்ளன?
A) 7
B) 8
C) 9
D) 6
86. 'போர்க்குறிக்காயமே புகழின் காயம்
யார்க்கது வாய்க்கும்! ஆ! ஆ! நோக்கிமின்' - என்று கூறிய கதாபாத்திரம் :
A) குடிலன்
B) நடராசன்
C) சீவகவழுதி
D) நாராயணன்
87. 'பவளக்கொடி' நாடக ஆசிரியர்
A) பரிதிமாற் கலைஞர்
B) பம்மல் சம்பந்த முதலியார்
C) டி.கே. சண்முகம்
D) சங்கரதாஸ் சுவாமிகள்
88. 'தமிழ் நாடகத் தந்தை' எனப் போற்றப்படுபவர்
A) பெ. சுந்தரம்பிள்ளை
B) பம்மல் சம்பந்த முதலியார்
C) பரிதிமாற் கலைஞர்
D) இராசமாணிக்கம்
89. 'வாசகர் தாள் பனுவலுக்கான அர்த்தங்களை வெளிக்கொணர்கிறார்' என்று கூறும் கோட்பாடு
A) சோசலிச எதார்த்தவாதம்
B) பின் காலனியம்
C) பின் நவீனத்துவம்
D) அமைப்பியல்
90. 'சிட்டுக்குருவி எனது பலகணியின் வழியே வரின் யான் என்னை மறந்து சித்தாகவே மாறி விடுகிறேன்' என்று
கூறிய கவிஞர் :
A) ஷெல்லி
B) கீட்ஸ்
C) காட்டே ரூஸ்
D) டி.எஸ். எலியட்
91. தமிழ் உரைநடையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
A) சீகன் பால்கு ஐயர்
B) ஜி.யூ. போப்
C) வீரமாமுனிவர்
D) இவர்களுள் எவருமில்லை
92. பாரதியாரின் 'சின்ன சங்கரன் கதை' என்னும் நூல்
A) கதைக் கவிதை
B) உரைநடை நூல்
C) குறுங்காவியம்
D) சுயசரிதம்
93. 'வரலாற்றுக் களஞ்சியம்' என்று யாருடைய நாட்குறிப்பைக்
குறிப்பிடுவர்?
A) ஆனந்தரங்கம் பிள்ளை
B) சி.வை. தாமோதரம் பிள்ளை
C) கதிரைவேற் பிள்ளை
D) அ. குமாரசாமிப் பிள்ளை
94. 'காட்டு வாத்து' தொகுப்பினை வெளியிட்ட பதிப்பகம்
A) கசடதபற
B) மணிக்கொடி
C) எழுத்து
D) வானம்பாடி
95. உ.வே. சாமிநாதையர் முதன் முதலில் பதிப்பித்த நூல்
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) சீவகசிந்தாமணி
D) பெருங்கதை
96. மூன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ் (1887) நடைபெற்ற இடம்
A ) டெல்லி
B) பம்பாய்
C) சென்னை
D) கல்கத்தா
97. 'கங்கை கொண்ட சோழன்' என அழைக்கப்படுபவர்
A) முதலாம் பராந்தக சோழன்
B) முதலாம் இராஜராஜ சோழன்
C) இரண்டாம் இராஜராஜ சோழன்
D) முதலாம் இராஜேந்திர சோழன்
98. 2013 ICC சாம்பியன் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றவர்
A) தோனி
B) விராட் கோலி
C) ஷிகர் தவான்
D) ரவீந்திர ஜடேஜா
99. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் பிரிவு :
A) பிரிவு 340
B) பிரிவு 360
C) பிரிவு 370
D) பிரிவு 390
100. NCTE என்பது :
A ) National Council for Technical Education
B ) National Centre for Teacher Education
C ) National Council for Teacher Education
D ) National Centre for Technical Education
************* ***************---*--*******
0 Comments