பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - வினாடி வினா - 3 - வினாக்களும் விடைகளும் / 10th TAMIL - QUIZ - 3 , QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

வினாடி வினா - பகுதி - 3

வினாக்களும் விடைகளும்

**************   ***************   ***********

1) ஒலி மயக்கம் உடைய எழுத்துகளை ------என்கிறோம்.

அ) உயிரெழுத்துகள்

ஆ) சார்பெழுத்துகள்

இ) இன எழுத்துகள்

ஈ) மயங்கொலி எழுத்துகள்

விடை : ஈ ) மயங்கொலி எழுத்துகள்

2) தமிழில் உள்ள மயங்கொலி எழுத்துகளின் எண்ணிக்கை -----

அ) 3

ஆ) 5

இ) 8

ஈ) 12

விடை : இ ) 8 ( ண , ந , ன  / ல , ள , ழ /  ர , ற )

3) வாசனையைக் குறிக்கும் சொல் -----

அ) மணம்

ஆ) மனம்

இ) மநம்

ஈ) மகம்

விடை : அ ) மணம் 

4) உடற்கட்டுடன் இருப்பவரைக் குறிக்கும்
சொல் ------

அ) பழமுடையவர்

ஆ) பலமுடையவர்

இ) பளமுடையவர்

ஈ) பாவமானவர்

விடை : ஆ ) பலமுடையவர்

5) நயம் என்ற சொல்லின் பொருள் -----

அ) அற்புதம்

ஆ) அழகு

இ ) சிறப்பு

ஈ) பெருமை

விடை : ஆ ) அழகு 

6) பாடல் எழுதப்பட்ட அடிப்படை
நோக்கத்தைக் குறிப்பது -----

அ) மையக்கருத்து

ஆ) திரண்ட கருத்து

இ) தொடை

ஈ) அணி

விடை : அ ) மையக்கருத்து 

7)' தொடை' என்பதன் பொருள் -----

அ) தொடுத்தல்

ஆ) எடுத்தல்

இ) விடுத்தல்

ஈ) படுத்தல்

விடை : அ ) தொடுத்தல்

8) செய்யுளின் அடிகளிலோ சீர்களிலோ
முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது -----
தொடை ஆகும்.

அ) மோனைத்தொடை

ஆ) எதுகைத்தொடை

இ) முரண் தொடை

ஈ) இயைபுத்தொடை

விடை : அ ) மோனைத்தொடை

9) செய்யுளின் அடிகளிலோ சீர்களிலோ
இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ------  தொடை ஆகும்.

அ) மோனை

ஆ) முரண்

இ) சந்தம்

ஈ ) எதுகை

விடை : ஈ ) எதுகை

10) ஒரு செய்யுளைச் சொல்லாலும்
பொருளாலும் அழகுபடக் கூறுவது ----- 

அ ) சந்தம்

ஆ) அணி

இ) மையக்கருத்து

ஈ) திரண்ட கருத்து

விடை : ஆ) அணி 

11) செய்யுளின் அடிகளிலோ சீர்களிலோ
எதிர்ச்சொற்கள் அமைய வருவது -----

அ) எதுகைத்தொடை

ஆ) இயைபுத்தொடை

இ) முரண்தொடை

ஈ) மையக்கருத்து

விடை : இ ) முரண்தொடை

12 ) மரபுக் கவிதைக்கு  ------- இலக்கணம்
மிகவும் இன்றியமையாதது.

அ) எழுத்து

ஆ) சொல்

இ) பொருள்

ஈ) யாப்பு

விடை : ஈ ) யாப்பு 

13) எழுத்துகள் ஒன்றோ , இரண்டோ சேர்ந்து வருவது -----

அ) அசை

ஆ) சொல்

இ) வார்த்தை

ஈ) சீர்

விடை : அ ) அசை

14 ) ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட
அசைகளின் சேர்க்கை -----

அ) சொற்றொடர்

ஆ) வார்த்தை

இ) பதம்

ஈ) சீர்

விடை : ஈ ) சீர் 

15 ) சீர்கள் ------- வகைப்படும்.

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 6

விடை : இ ) 4 ( ஓரசை , ஈரசை , மூவசை , நாலசை ) 

16) வெண்பாவின் ஈற்றுச்சீர் நிரையில்
முடிந்தால் வாய்பாடு ------ஆகும்.

அ) நாள்

ஆ) மலர்

இ) காசு

ஈ) பிறப்பு

விடை : ஆ ) மலர்

17) ஈரசைச் சீரில் நிரை நேர் வந்தால் அதன் வாய்பாடு ------

அ) தேமா

ஆ) கூவிளம்

இ) கருவிளம்

ஈ) புளிமா

விடை : ஈ ) புளிமா 

18) ஈரசைச்சீருடன் மூன்றாவதாக நிரையசை சேர்ந்தால் அது ----- சீர் ஆகும்.

அ) மாச்சீர்

ஆ) விளச்சீர்

இ) காய்ச்சீர்

ஈ) கனிச்சீர்

விடை : ஈ ) கனிச்சீர் 

19 ) ஒரு துறைசார்ந்த வல்லுநர்கள்
அத்துறை சார்ந்த செய்திகளைச்
சுருக்கமாகவும் , துல்லியமாகவும் பரிமாறிக் கொள்வதற்கு ---- சொற்களைப்
பயன்படுத்துகிறார்கள்.

அ) பெயர்ச்சொற்கள்

ஆ) கலைச்சொற்கள்

இ) வினைச்சொற்கள்

ஈ) உரிச்சொற்கள்

விடை : ஆ ) கலைச்சொற்கள்

20 ) ஒரு பொருளைப் பற்றி நன்கு
சிந்தித்து , கருத்துகளைத் திரட்டி,
அவற்றை முறைப்படுத்தி
எழுதுவது ஆகும்.

அ ) கவிதை

ஆ) கடிதம்

இ) கட்டுரை

ஈ) வினாடி வினா

விடை : இ ) கட்டுரை 

***************   ***********   ***************

வாழ்த்துகள் 

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*************   **************   **************

Post a Comment

0 Comments