எட்டாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 2 , சொற்களை உருவாக்குதல் - வினா விடை / 8th TAMIL - ACTIVITY 2 - QUESTION & ANSWER

 

எட்டாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 2 

2 . சொற்களை உருவாக்குதல்

வினாக்களும் விடைகளும்

************  ***************   **************

திறன்/கற்றல் விளைவு

மொழிப்பயிற்சி :

சொற்களை உருவாக்குதல், சொற்களஞ்சியம் பெருக்குதல்,

6.19 பல்வேறு சூழல்களில் / நிகழ்வின் போது மற்றவர்கள் கூறியவற்றைத் தமது சொந்த மொழியில் எழுதுதல்,

6. 20 சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள் (phrases) போன்றவற்றைப் பயன்படுத்தி பல இதழ்களுக்ககாகவும் நோக்கங்களுக்காகவும் எழுதுதல்,

கற்பித்தல் செயல்பாடு

அறிமுகம்

     நாம் நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பிறரிடம் நம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் மொழியைக் கையாளும் திறன் பெற்றிருத்தல் அவசியம்.

           மொழியின் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய திறன்களை நாம் பெற்றிருப்பது இன்றியமையாதது ஆகும். பிறர் பேசுவதைக் கேட்டுப் புரிந்து கொள்ள அவர்கள் பயன்படுத்தும் சொற்களை நாம் அறிந்திருத்தல் வேண்டும். இதேபோல நூல்கள் பலவற்றைக் கற்று, அதிலிருந்தும் புதிய சொற்களை அறிந்துகொள்ள வேண்டும்.

        கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் போன்ற திறன்களின் வளர்ச்சிக்கு அடிப்படையானது, 'சொற்களஞ்சியப் பெருக்கமே'. மாணவர்களே! நமது கருத்துகளைப்   பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்த வேண்டுமானால் சொற்களஞ்சியம் மிகவும் அவசியம்.

சொற்களஞ்சியம் பெருக்கும் செயல்களைச் செய்து கற்போம் வாருங்கள்.

கற்பித்தல் செயல்பாடு

கொடுக்கப்பட்ட ஓர் எழுத்தினைக் கொண்டு சொற்களை உருவாக்குதல்,

(எ.கா.)

      எழுத்தானது முதலிலோ இடையிலோ இறுதியிலோ வருமாறு சொற்களை எழுதுக.

தை - தைமாதம், புதையல், விடுகதை, கவிதை, தையல், விதை, கதை


    எழுத்தானது முதலிலோ இடையிலோ இறுதியிலோ வருமாறு சொற்களை எழுதுக.

மா - மாமரம் , மானமா ( கவரிமான் )

மை - மைனா , புதுமை 

கை - கையுறை , நம்பிக்கை 

சொல்லைக் கண்டுபிடித்தல்

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு சொல்லைக் கண்டுபிடித்தல்.

(எ.கா.) பூக்கள் சேர்ந்தது ஆரம்
பொழுது சாயும் நேரம்

விடை  - மாலை

(வினா) புதிர்

பஞ்சிலிருந்து கயிறாக வருவது.

படிக்கும் அறையில் இருப்பது,

விடை : நூல்

ஆற்றின் ஓரம்.

விடை : கரை 

ஏணியில் ஏறப் பயன்படுவது.

அரிசி அளக்கப் பயன்படுவது.

விடை  : படி 

சொல்லுக்குள் சொல்

ஒரு சொல்லுக்குள் இயல்பாய் அமைந்த, அமைந்திருக்கின்ற மற்றொரு
சொல்லைக் கண்டுபிடியுங்கள்.

(எ.கா.) வெங்காயம்  - (காயம்) புண்

இடையூறு  -  ( இடை) உறுப்பு

கோபுரம் - கோ - அரசன்

தலைநகரம் - தலை - உடலின் பகுதி 

பள்ளிக்கூடம்  - பள்ளி - அறை 

தீவினை  -  தீ - நெருப்பு 

கடையெழு - கடை - அங்காடி

மதிப்பீட்டுச் செயல்பாடு

தொகைச் சொல்லை விரித்து எழுதுக.

(எ.கா.) மூவேந்தர் - சேர, சோழ, பாண்டியர்

நானிலம் - குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல 

ஐந்திணை -  குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை 

முக்கனி - மா , பலா , வாழை 

அறுசுவை - இனிப்பு , புளிப்பு , கசப்பு , உவர்ப்பு , துவர்ப்பு , கார்ப்பு 

நவதானியங்கள் - நெல் , கோதுமை , பாசிப்பயறு , துவரை , மொச்சை , எள் , கொள்ளு , உளுந்து

ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்கச் செய்க.

(எ.கா.) குதிரை - குதி, திரை, குரை

புதுவயல் - புல் , புயல் , வயல்

பணிமனை - பணி , பனை , மனை 

பூங்காவனம் - பூ , வனம் , கானம்

கழுகுமலை - கலை , கழுகு , குலை , மலை

தலைநகரம் - தலை , தகரம் , தரம் , நகம்

ஒரு பொருள் தரும் பல சொற்களைக் எழுதுக.

(எ.கா.) திரு - தெய்வம், செல்வம்

- தலைவன் , அழகு , வியப்பு 

திங்கள் - நிலவு , கிழமை 

ஒளி - வெளிச்சம் , அறிவு , புகழ் 

ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களைத் தொகுத்துப் பொருள் எழுதிச் சொற்றொடரில் அமைக்க.

(எ.கா) பூ - மலர் - பெண்கள் தலையில் மலர்களைச் சூடிக்கொள்வார்கள்.

கா  - சோலை - சோலையில் பல வண்ண மலர்கள் பூத்தன.

வா - அழைத்தல் - அம்மா , மகனை உணவு உண்ண அழைத்தாள்.

போ - செல்லுதல் - மாணவர்கள் மாலையில் வீட்டிற்குச் சென்றனர்.

பா - பாடல் - அனைவரும் விரும்பிக் கேட்பது பாடல் ஆகும்.

****************   ***************   **********

விடைத்தயாரிப்பு :

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***************   ***************   ************

Post a Comment

0 Comments