12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
இயங்கலைத் தேர்வு - 2
வினாக்களும் விடைகளும்
1) செய்யுளின் அழகையும் , நயத்தையும் எடுத்து மொழிவது ------- இலக்கணம்.
அ) எழுத்து
ஆ) சொல்
இ ) அணி
ஈ) பொருள்
விடை : இ ) அணி
2) அணி இலக்கணத்தைச் சிறப்பாகக் கூறும் நூல்
அ) தண்டியலங்காரம்
ஆ) தொல்காப்பியம்
இ ) இலக்கண விளக்கம்
ஈ) தொன்னூல் விளக்கம்
விடை : அ) தண்டியலங்காரம்
3) உவமானம் ஒரு தொடராகவும் , உவமேயம்
மற்றொரு தொடராகவும் அமைய , இடையில்
உவம உருபு வெளிப்படையாக வருவது
அணி.
அ) உருவக அணி
ஆ) உவமையணி
இ) வேற்றுமையணி
ஈ) எதுவுமில்லை
விடை : ஆ) உவமையணி
4) " இரவென்னும் ஏமாப்பில் தோணி
கரவென்னும் பார்த்தாக்கப் பக்கு விடும் " -
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி ---
அ) உவமை அணி
ஆ) வேற்றுமை அணி
இ ) உருவக அணி
ஈ ) எதுவுமில்லை
விடை : இ ) உருவக அணி
5) இரு பொருள்களின் ஒற்றுமையை
முதலில் கூறி , பின் அப்பொருள்களுக் கிடையே வேற்றுமை தோன்றக் கூறுவது
அணி
அ) சொற்பொருள் பின்வருநிலையணி
ஆ) உருவக அணி
இ) வேற்றுமை அணி
ஈ) உவமை அணி
விடை : இ) வேற்றுமை அணி
6) பாடலில் கவிஞர் கூறும் கருத்தே (பொருள்)
-------
அ) மையக்கருத்து
ஆ) திரண்ட கருத்து
இ) மோனை
ஈ) சந்த நயம்
விடை : அ) மையக்கருத்து
7) செய்யுளில் அடிதோறும் அல்லது
சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது ----
- தொடை
அ) மோனை
ஆ) எதுகை
இ) இயைபு
ஈ) முரண்
விடை : அ) மோனை
8) செய்யுளில் அடிதோறும் அல்லது
சீர்தோறும் முதலெழுத்துத் தம்முள்
அளவொத்து ( மாத்திரை அளவில்)
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
அ) மோனை
ஆ) இயைபு
இ) முரண்
ஈ) எதுகை
விடை : ஈ) எதுகை
9) வஞ்சிப்பாவின் ஓசை -----
அ) செப்பலோசை
ஆ) தூங்கலோசை
இ) அகவலோசை
ஈ) துள்ளலோசை
விடை : ஆ) தூங்கலோசை
10 ) ' தன்மை அணி' எனப்படுவது ----- அணி
அ) உவமை அணி
ஆ) உருவக அணி
இ) இயல்பு நவிற்சி அணி
ஈ) வேற்றுமை அணி
விடை : இ) இயல்பு நவிற்சி அணி
11) Conjuction word என்ற ஆங்கிலச்சொல்
தமிழில் ---- எனப் பொருள்படும்
அ) சந்தி
ஆ) சாரியை
இ) விகாரம்
ஈ) இடைநிலை
விடை : அ) சந்தி
12) நல்ல + கதை - சேர்த்து எழுதுக.
அ) நல்ல கதை
ஆ) நன்கதை
இ) நல்லக்கதை
ஈ) நன்மைக்கதை
விடை : அ) நல்ல கதை
13) ' அணல் என்பதன் பொருள் -----
அ) நெருப்பு
ஆ) தாடி , கழுத்து
இ ) உணவு
ஈ) காடு
விடை : ஆ) தாடி , கழுத்து
14) 'ண' என்ற எழுத்தை ----- என்பர்.
அ) தந்நகரம்
ஆ) டண்ணகரம்
இ) றன்னகரம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை : ஆ) டண்ணகரம்
15 ) மேல்நோக்கிய லகரம்
என்றழைக்கப்படுவது -----
அ)ழ
ஆ)ல
இ) ள
ஈ) ழ
விடை : ஆ)ல
16) அவனும் அவளும் வந்தது - இதில் உள்ள
வழு
அ) எண்
ஆ) திணை
இ ) பால்
ஈ) இடம்
விடை : ஆ) திணை
17) ' மூணு' என்பன் திருந்திய வடிவம்
அ) மூன்று
ஆ) 3
இ) மூனு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை : அ) மூன்று
18) 'கான்' என்பதன் பொருள் ------
அ) காடு
ஆ) பார்வை
இ ) காண்
ஈ) நோக்கு
விடை : அ) காடு
19) ' ஏராளம்' என்பது
அ) குறைவு
ஆ) மிகுதி
இ) வரி
ஈ) வரம்பு
விடை : ஆ) மிகுதி
20) visa என்பதன் தமிழாக்கம்
அ) நுழைவு இசைவு
ஆ) கடவுச்சீட்டு
இ) உற்பத்தி
ஈ) மதிப்பு
விடை : அ) நுழைவு இசைவு
************** ************** *************
வினா உருவாக்கம்
திருமதி.இரா.மனோன்மணி ,
முதுகலைத்தமிழாசிரியை ,
அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி , திண்டுக்கல்.
************* ************** ***************
0 Comments