வகுப்பு 8 - தமிழ்
வினாடி வினா - 1
அக்டோபர் - 2021
கவிதைப் பேழை - தமிழ்மொழி வாழ்த்து
1. ' சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க' - என்னும் பாடலடியில் 'கலி' என்பதன் பொருள் என்ன என்பதைக் கண்டறிந்து எழுதுக.
அ) இரவு
ஆ ) அறியாமை இருள்
இ) இருட்டு
ஈ ) அறிவுச்சுடர்
விடை : ஆ ) அறியாமை இருள்
2. 'சிந்துக்குத் தந்தை' எனப் பாரதியாரைப் புகழ்ந்த கவிஞர் யார் எனத் தெரிவுசெய்க.
அ) வாணிதாசன்
ஆ )சுப்புரத்தினதாசன்
இ) பாரதிதாசன்
ஈ ) கவிமணி தேசிகவிநாயகம்
விடை : இ ) பாரதிதாசன்
3. சரியா? தவறா? என எழுதுக.
அ) 'இசைகொண்டு வாழியவே' - இவ்வடியில் 'இசை' என்னும் சொல் புகழைக் குறிக்கிறது.
விடை - சரி
ஆ) தொல்லையகன்று - என்பதனைப் பிரித்து எழுதக் கிடைப்பது
தொல்லை +யகன்று ஆகும்.
விடை - தவறு
இ) பாரதியார், தேசபக்திப்பாடல்கள் மூலம் விடுதலை உணர்வினை மக்களிடையே ஏற்படுத்தினார்.
விடை : சரி
ஈ ) மொழி, மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது.
விடை : சரி
4. கோடிட்ட இடங்களை நிரப்புக.
அ)"வான மளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி வாழியவே!"
ஆ) 'வைப்பு' என்பதன் பொருள் நிலப்பகுதி ஆகும்.
5. பொருத்தமான நிறுத்தக்குறியிடுக.
பாரதியார் ' எட்டயபுரம் ' என்னும் ஊரில் பிறந்தார். இவரது இயற்பெயர்
' சுப்பிரமணியன் ' ஆகும். இவர் பதினோரு வயதில் தமது கவித்திறமையால் ' பாரதி '
என்ற பட்டத்தைப் பெற்றார் . மேலும் , இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்திருத்தவாதி , விடுதலைப் போராட்ட வீரர் எனப் பல்திறன் பெற்ற வித்தகர் ஆவார்.
6. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.
அ) பாரதியார் நடத்திய இதழ்களின் பெயரினை எழுதுக.
விடை: இந்தியா , விஜயா
ஆ) தமிழ்மொழி வாழ்த்துப்பாடலில் இடம்பெற்றுள்ள தமிழின் சிறப்புகள்
இரண்டனைக் கூறுக.
விடை:
(1) தமிழ் மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழும் மொழி .
(2) ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான மொழி தமிழ் மொழி.
7. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.
அ) பாரதியார் எத்தகைய ஆற்றலைப் பெற்றிருந்தார்?
விடை:
பாரதியார் கவிஞர் , எழுத்தாளர் , இதழாளர் , சமூகச் சீர்திருத்தவாதி , சிந்தனையாளர் , விடுதலைப் போராட்ட வீரர் எனப்பன்முக ஆற்றல் பெற்றிருந்தார்.
ஆ) தமிழ்நாடு எவ்வாறு ஒளிர வேண்டுமெனப் பாரதியார் கூறினார்?
விடை:
பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர வேண்டும் என பாரதியார் கூறினார்.
8. பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
"செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்கனைய நாயகியே! - முந்தை
மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!
எழில்மகவே! எந்தம் உயிர்".
- து. அரங்கன்
வினாக்கள்
அ) பிரித்து எழுதுக.
செந்தமிழ் - செம்மை + தமிழ்
செங்கரும்பு - செம்மை + கரும்பு
ஆ) தொகைச்சொல்லை விரித்தெழுதுக.
மூவேந்தர்
விடை - சேர , சோழ , பாண்டியர்
இ) முந்தை மொழிக்கெல்லாம் மூத்தவள் யார்?
விடை: தமிழ் மொழி
9. நீ அறிந்த கவிஞர் ஒருவரைப் பற்றி அரைப்பக்க அளவில் கட்டுரை வரைக.
(குறிப்பேட்டில் எழுதுக.)
( மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த கவிஞர் ஒருவரைப் பற்றி எழுதவும் )
10. உனக்குத் தெரிந்த பாரதியார் பாடல் ஒன்றனை எழுதுக.
விடை:
ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
சரணங்கள்
1. பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
ஏய்ப்போருக் கேவல் செய்யும் காலமும் போச்சே (ஆடு)
2. எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு;
சங்கு கொண்டே வெற்றி ஊது வோமே - இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே
3. எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
நயவஞ்சக் காரருக்கும் நாசம் வந்ததே.
( ஆடு)
4. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் - வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்.
( ஆடு)
5. நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் - இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் - இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் - பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.
( ஆடு)
0 Comments