எட்டாம் வகுப்பு - தமிழ் - வினாடி வினா - 1 , வினாக்களும் விடைகளும் / 8th TAMIL - QUIZ 1 - QUEZTIN & ANSWER

 


எட்டாம் வகுப்பு - தமிழ்

வினாடி வினா - 1

1 ) ' சூழ்கலி நீங்க தமிழ் மொழி ஓங்க' - என்னும் பாடலடியில் ' கலி' என்பதன் பொருள்

அ ) இரவு

ஆ) அறியாமை இருள்

இ) இருட்டு

ஈ) அறிவுச்சுடர்

விடை : ஆ ) அறியாமை இருள்

2) ' சிந்துக்குத் தந்தை' எனப் பாரதியாரைப் புகழ்ந்த கவிஞர் -

அ) வாணிதாசன்

ஆ) சுப்புரத்தினதாசன்

இ) பாரதிதாசன்

ஈ) கவிமணி தேசிக விநாயகம்

விடை : இ ) பாரதிதாசன்

3) ' இசை கொண்டு வாழியவே
இவ்வடியில் இசை என்னும் சொல் குறிப்பது

அ) புகழ்

ஆ) இகழ்

இ) சத்தம்

 ஈ) ஒலி

விடை : அ ) புகழ் 

4) தொல்லையகன்று - பிரித்து
எழுதுக.

அ) தொல்லை + யகன்று

ஆ) தொல்லை + அகன்று

இ) தொல் + அகன்று

 ஈ) தொல்லை + கன்று

விடை : ஆ )  தொல்லை + அகன்று

5) பாரதியார் - ------பாடல்கள்
மூலம் விடுதலை உணர்வை
ஏற்படுத்தினார்.

அ) தேசபக்திப் பாடல்

ஆ) நாட்டுப்புறப்பாடல்

இ) குழந்தைப்பாடல்கள்

ஈ) கண்ணன் பாடல்கள்

விடை : அ ) தேசபக்திப்பாடல்கள்

6) வான மளந்தது அனைத்தும்
அளந்திடு ----- வாழியவே.

அ) செம்மொழி

ஆ) நம்மொழி

இ) வண்மொழி

ஈ) நன்மொழி

விடை : இ ) வண்மொழி 

7) பாரதியார் நடத்திய இதழ் ----

அ) விகடன்

ஆ) விஜயா

இ) தினமணி

ஈ) சுதேசமித்திரன்

விடை : அ ) விஜயா

8) பாரதி எழுதிய உரைநடை
நூல் சந்திரிகையின் கதை
மற்றும் -----

அ) என்கதை

ஆ) என் சரித்திரம்

இ )  விடுதலைக்கதை

ஈ) தராசு

விடை : ஈ ) தராசு 

9) பாரதியார் பிறந்த ஊர்------

அ) பொன்னையாபுரம்

ஆ) எட்டயபுரம்

இ ) பண்ணைப்புரம்

ஈ) நம்பிபுரம்

விடை : ஆ ) எட்டயபுரம்

10) கல்வெட்டுகளில் உள்ள எந்த
எழுத்துகளுக்கு குறில் , நெடில்
வேறுபாடு இல்லை?

அ) இகர , உகரம்

ஆ) உகர, எகரம்

இ) எகர , உகரம்

ஈ) அகர, இகரம்

விடை : இ ) எகர உகரம்

11) தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தங்கள் செய்தவர் -----

அ ) பாரதியார்

ஆ) திரு.வி.கல்யாணசுத்தரனார்

இ ) உ.வே.சாமிநாதர்

ஈ) வீரமாமுனிவர்

விடை : ஈ ) வீரமாமுனிவர்

12) வட்டெழுத்து என்பது ------ 
கோடுகளால் அமைந்தமிகப்பழைய தமிழ் எழுத்து

அ) வளைந்த கோடு

ஆ) நேர்கோடு

இ) குறுக்குக்கோடு

ஈ) கிடைக்கோடு

விடை : அ ) வளைந்த கோடு

13 ) மனிதன் தன் கருத்தைப்
பிறருக்குத் தெரிவிக்க கண்டுபிடித்தது

அ) விழி

ஆ) மொழி

இ) ஆயுதம்

ஈ) புத்தகம்

விடை : ஆ ) மொழி 

14)  ------ கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் நிலையான வடிவத்தைப்
பெற்றன.

அ ) அச்சுக்கலை

ஆ) சிற்பக்கலை

இ) நடனக்கலை

ஈ) பேச்சுக்கலை

விடை : அ ) அச்சுக்கலை

15 ) ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என
உருவான நிலை

அ) தொடக்க நிலை

ஆ) ஒலி எழுத்து நிலை

இ) குறியீட்டு நிலை

ஈ) ஓவிய எழுத்து நிலை

விடை : ஆ ) ஒலிஎழுத்துநிலை

16) எழுத்துகளின் பிறப்பு ------ 
வகைப்படும்

அ ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஆறு

விடை : அ ) இரண்டு 

17 ) மெல்லின மெய்யெழுத்துகள் ------
ஐ இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

அ) கழுத்து

ஆ) மார்பு

இ ) மூக்கு

ஈ) எதுவுமில்லை

விடை : இ ) மூக்கு 

18) மார்பை இடமாகக் கொண்டு
பிறக்கும் எழுத்துகள்

அ) வல்லினம்

ஆ) மெல்லினம்

இ ) இடையினம்

ஈ) மேலே உள்ள மூன்றும்

விடை : அ ) வல்லினம்

19 ) கழுத்தை இடமாகக் கொண்டு -
பிறக்கும் எழுத்துகள்

அ ) உயிர் எழுத்துகள்

ஆ) வல்லினமெய்

இ) மெல்லின மெய்

ஈ) ஆய்தம்

விடை : அ ) உயிர்எழுத்துகள்

20) ஆய்த எழுத்து ------ இடமாகக் கொண்டு
பிறக்கின்றன.

அ) மார்பு

ஆ) கழுத்து

இ) மூக்கு

ஈ) தலை

விடை : ஈ) தலை 


Post a Comment

0 Comments