11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
இயங்கலைத் தேர்வு - பகுதி - 3
வினாக்களும் விடைகளும்
************* ********* **************
1) கவர்மென்ட் காலேஜ் என்பதன் தமிழ்ச்சொல்
அ) தன்னாட்சிக்கல்லூரி
ஆ) பல்கலைக்கழகம்
இ) சுயநிதிக்கல்லூரி
ஈ) அரசுக்கல்லூரி
விடை : ஈ ) அரசுக்கல்லூரி
2 )' பெட்டிசன்' என்பதன் தமிழ்ச்சொல்
அ) கடிதம்
ஆ) புகார்
இ) மனுநீதி
ஈ) வரையறை
விடை : ஆ ) புகார்
3) ' அட்டண்டெண்ட்ஸ்' என்பதற்கு நிகரான
தமிழ்ச்சொல்
அ) இருப்புப் பதிவேடு
ஆ) தன்பதிவேடு
இ) வருகைப்பதிவேடு
ஈ) சம்பளப்பட்டுவாடா
விடை : இ ) வருகைப்பதிவேடு
4) வினை , பயன், வடிவம் , உரு இவற்றின்
அடிப்படையில்தோன்றுவது -----
அ) உவமை
ஆ) உருவகம்
இ ) பண்பு
ஈ) தொழில்
விடை : அ ) உவமை
5) பாண்டிய நெடுஞ்செழியன் உயிர் நீத்த
உடனே கோப்பெருந்தேவி ------ போல மண் மிசை சாய்ந்து உயிர் நீத்தாள்
அ) இலவு காத்த கிளி
ஆ) அடியற்ற மரம்
இ) பூவும் நாரும்
ஈ) உள்ளங்கை நெல்லிக்கனி
விடை : ஆ ) அடியற்ற மரம்
6) எலியும் பூனையும் போல என்பதில்
தோன்றும் உணர்ச்சி
அ) அன்பு
ஆ) கோவம்
இ) பகை
ஈ) பொறாமை
விடை : இ ) பகை
7) ஆழம் தெரியாமல் காலை விட்டது போல என்ற உவமையின் பொருள்
அ) தவிப்பு
ஆ) திட்டமிடாமை
இ) தெள்ளத் தெளிவு
ஈ) விழித்தல்
விடை : ஆ ) திட்டமிடாமை
8) கண்டான் என்பதன் வேர்ச்சொல்
அ) காண்
ஆ) கண்
இ) கண்டு
ஈ) கண்ட
விடை : அ ) காண்
9) பாஸ்போர்ட் என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ்ச்சொல்
அ ) ஏற்றுமதி
ஆ) நுழைவு இசைவு
இ ) பயணச்சீட்டு
ஈ) கடவுச்சீட்டு
விடை : ஈ ) கடவுச்சீட்டு
10) மூனு ' என்பதன் திருந்திய வடிவம்
அ) மூன்று
ஆ)மூனு
இ) மூண்று
ஈ) 3
விடை : அ ) மூன்று
11) பனை இலையால் கூரை போட்டனர் -
மரபுப் பிழை நீக்குக.
அ) ஓலை வேய்ந்தனர்
ஆ) இலை மேய்ந்தனர்
இ) ஓலை போட்டனர்
ஈ) ஓலை போர்த்தினர்
விடை : அ ) ஓலை வேய்ந்தனர்
12) ஆந்தை - ஒலி மரபு -----
அ) பிளிறும்
ஆ) அலறும்
இ) அலப்பும்
ஈ) கதறும்
விடை : ஆ ) அலறும்
13) ' சூரியனைக் கண்ட பனி போல ' -
என்பதன் பொருள்
அ) காத்திருந்து ஏமாறுதல்
ஆ) அரிதாக
இ) ஒட்டி உறவாக இருத்தல்
ஈ) பெருந்துன்பம் நீங்குதல்
விடை : ஈ ) பெருந்துன்பம் நீங்குதல்
14) ' போல ' என்ற உவம உ உருபு
வெளிப்படையாக வருவது ------ தொடர்
அ ) உருவக
ஆ) உவமை
இ) வினை
ஈ) இடை
விடை : ஆ ) உவமை
15 ) ' பசுத்தோல் போர்த்திய புலி' - இதில்
பயின்று வந்துள்ள உவமை
அ) பயன் உவமை
ஆ) பண்பு உவமை
இ) தொழில் உவமை
ஈ ) எதுவுமில்லை
விடை : இ ) தொழில் உவமை
16) கண்ணால் கண்டு உணருமாறு
வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது
அ) எழுத்து மொழி
ஆ) உடல்மொழி
இ) நிலைமொழி
ஈ) பேச்சுமொழி
விடை : அ ) எழுத்து மொழி
17) ' எண்ணெ ' என்பதன் வரிவடிவம்
அ ) என்ன
ஆ) எண்ணெய்
இ) எந்நெய்
ஈ ) எண்ணெ
விடை : ஆ ) எண்ணெய்
18) பிரிக்க முடியாத அடிப்படைச் சொல்
அ) பகுதி
ஆ) இடைநிலை
இ) விகாரம்
ஈ) விகுதி
விடை : அ ) பகுதி
19) க, இய, இயர் இவற்றைக் கொண்டு
முடியும் சொல்
அ) வினைச்சொல்
ஆ) வியங்கோள் வினைமுற்று
இ) ஆகுபெயர்
ஈ) உருவகம்
விடை : ஆ ) வியங்கோள் வினைமுற்று
20 ) கருப்படு , பொருளை - அறிந்தவை ,
அறிக - இவற்றில் பயின்று வந்துள்ள
தொடை நயம்
அ) சீர் எதுகை
ஆ) அடி மோனை
இ) இயைபு
ஈ) முரண்
விடை : சீர் எதுகை
*************** *************** **********
வினா உருவாக்கம்
திருமதி.இரா.மனோன்மணி ,
முதுகலைத் தமிழாசிரியை ,
அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி ,
திண்டுக்கல்
*************** *************** *********
0 Comments