பத்தாம் வகுப்பு - அறிவியல்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
பாடம் : 6 , வெப்பம்
மதிப்பீடு :
1.சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. கலோரி என்பது எதனுடைய அலகு?
அ)வெப்பம்
ஆ)வேலை
இ)வெப்பநிலை
ஈ) உணவு
விடை : அ ) வெப்பம்
2. வெப்பநிலையின் SI அலகு
அ) ஃபாரன்ஹீட்
ஆ)ஜூல்
இ)செல்சியஸ்
ஈ)கெல்வின்
விடை : ஈ ) கெல்வின்
3. மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?
அ)வெப்பக்கதிர்வீச்சு
ஆ) வெப்பக்கடத்தல்
இ)வெப்பச்சலனம்
ஈ) ஆ மற்றும் இ
விடை : ஆ ) வெப்பக்கடத்தல்
II.கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. வேகமாக வெப்பத்தைக் கடத்தும் முறை -----------
விடை : வெப்பக்கதிர்வீச்சு
2. பகல் நேரங்களில், காற்று -------- லிருந்து ------ க்கு பாயும்.
விடை : கடலிலிருந்து நிலத்துக்குப்
3. திரவங்களும், வாயுக்களும் --------முறையில் வெப்பத்தைக் கடத்தும்.
விடை : வெப்பச்சலனம்
4. வெப்பநிலை மாறாமல் பொருளொன்று ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதை --------- என்கிறோம்.
விடை : உள்ளுறை வெப்பம்
III. சுருக்கமாக விடையளி.
1. வெப்பக் கடத்தல்-வரையறு.
அதிக வெப்ப நிலையில் உள்ள ஒரு பொருளிலிருந்து குறைவான வெப்ப நிலையில் உள்ள ஒரு பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கமின்றிப் பரவும் நிகழ்வு வெப்பக் கடத்தல் எனப்படும்.
2. பனிக்கட்டியானது இரட்டைச் சுவர் கொள்கலன்களில் வைக்கப்படுவது ஏன்?
இரட்டைச் சுவர்களுக்கிடையே உள்ள இடைவெளியில் வெற்றிடம் உள்ளது.வெற்றிடம் வெப்பத்தைக் கடத்தாது. எனவே , வெப்பம் கொள்கலனுள் கடத்தப்படுவதில்லை. ஆதலால் பனிக்கட்டியானது இரட்டைச்சுவர் கொள்கலனில் வைக்கப் படுகிறது.
3. மண்பானையில் வைத்திருக்கும் தண்ணீர் எப்போதும் குளிராக இருப்பது ஏன்?
மண்பானையில் உள்ள நுண்துகள்கள் வழியே கசியும் நீர் ஆவியாகிக் கொண்டே இருக்கும். இதனால் வெப்பம் வெளியேற்றப் படுவதால் பானைக்குள் உள்ள நீர் குளிர்ச்சியாக இருக்கும்.
4. வெப்பச்சலனம் -வெப்பகதிர்வீச்சு இரண்டையும் வேறுபடுத்துக.
வெப்பச்சலனம்
* ஒரு திரவத்தின் அதிக வெப்பமுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பமுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுதல்.
* பருப்பொருட்கள் ( ஊடகம் ) தேவை.
வெப்பக்கதிர்வீச்சு
* வெப்ப ஆற்றல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின்காந்த அலைகள் மூலம் பரவும்.
* பருப்பொருட்கள் தேவையில்லை. வெற்றிடத்தில் பரவும்.
5. கோடைகாலங்களில் மக்கள் ஏன் வெள்ளை நிற ஆடை அணிவதை விரும்புகிறார்கள்?
கோடைகாலங்களில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை வெள்ளை நிற ஆடை பிரதிபலிக்கிறது. வெப்பத்தை ஆடையினுள் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. இதனால் கோடைக்காலங்களில் மக்கள் வெள்ளை நிற ஆடை அணிவதை விரும்புகிறார்கள்.
6. தன்வெப்ப ஏற்புத் திறன் - வரையறு.
0 Comments