ஒன்பதாம் வகுப்பு - சமூக அறிவியல் - வரலாறு ஒப்படைப்பு - 2 - அலகு 2 - பண்டைய நாகரிகங்கள் வினாக்களும் விடைகளும் / 9th - SOCIAL SCIENCE - HISTORY - JULY ASSIGNMENT - QUESTION & ANSWER

 


                     ஒப்படைப்பு

                          வகுப்பு:9

      பாடம்: சமூக அறிவியல்(வரலாறு)

       அலகு-2 பண்டைய நாகரிகங்கள்

                          பகுதி-அ

1.ஒரு மதிப்பெண் வினா

1 நைல் நதியின் நன்கொடையென அழைக்கப்படுவது.........

அ)சுமேரியா

ஆ) எகிப்து

இ) மெசபடொமியா

ஈ)பாபிலோன்

விடை :  ஆ ) எகிப்து 

2. எகிப்தியர்கள் இறந்த உடலைப்பதப்படுத்தி பாதுகாத்தமுறை

அ) சர்கோபகஸ் 

ஆ ) ஹைக்சோஸ்

இ) மம்மியாக்கம்

ஈ)பலகடவுளர்களைவணங்குதல்

விடை : இ ) மம்மியாக்கம்

3. "கண்ணுக்குக்கண் " "பல்லுக்குப்பல் “என்ற சொற்றொடர் இதோடு தொடர்புடையது.

அ)சுமேரியர்களின் மருந்துவமுறை

ஆ)  சீனர்களின் தத்துவம்

இ)எகிப்தியர்களின் எழுத்துமுறை

 ஈ)ஹமுராபியின் சட்டத்தொகுப்பு

விடை : ஈ ) ஹம்ராபியின் சட்டத்தொகுப்பு 

4.ஹரப்பாமக்கள் ........ பற்றி அறிந்திருக்கவில்லை

அ) தங்கம் மற்றும் யானை 

ஆ)குதிரை மற்றும் இரும்பு

இ) ஆடு மற்றும் வெள்ளி 

ஈ) எருது மற்றும் பிளாட்டினம்

விடை : ஆ ) குதிரை மற்றும் இரும்பு 

5.சீனாவின்துயரம்எனஅழைக்கப்படுவது

அ) மஞ்சள் ஆறு ஆ) நைல் 

இ) யூரப்ரடிஸ் ஈ) டைக்ரிஸ்

விடை : அ ) மஞ்சள் ஆறு

கோடிட்ட இடத்தைநிரப்புக

1. எகிப்து அரசர்..... என அழைக்கப்பட்டார்

விடை : பாரோ 

2. எகிப்தியர்களின் எழுத்துமுறை.......

விடை : ஹைரோகிளிபிக்

3. சௌஅரசின் தலைமை ஆவணக்காப்பாளர்........ஆவார்

விடை : லா வோ ட் சு

4. மெசபடோமியா....... மற்றும் ....... நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி ஆகும்.

விடை : யூப்ரடிஸ் , டைக்ரிஸ் 

5. ஹரப்பாவின் மாடுகள்......... என்று அழைக்கப்பட்டன.

விடை : ஜெபு 

                                   பகுதி-ஆ

11. சிறுவினா

1. சிகுரட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக.

 * மதில் சுவர்களால் சூழப்பட்ட சுமேரிய நகரங்களின் மத்தியில் சிகுரட் எனப்படும் கோயில் இருக்கும்.

* கோயில் மத குருமார்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

* வரியாக வசூலித்ததைச் சேமித்து வைக்கும் கிடங்காகக் கோயில்கள் பயன்பட்டன.

2.ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் விவரி.

* பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களைக் கூறும் ஒரு முக்கியமான சட்ட ஆவணம்.

* " கண்ணுக்குக் கண் " , " பல்லுக்குப் பல் " என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது.

* 282 பிரிவுகள் உள்ளன.

3.சீனர்களின் எழுத்து முறை பற்றி கூறுக

* பண்டைய காலத்தில் ஒரு எழுத்து முறைய உருவாக்கினர். 

* முதலில் சித்திர எழுத்து முறையாக இருந்தது . பின்னர் குறியீட்டு முறையாக மாறியது.

4. சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி பற்றி கூறுக.

      பொ.ஆ.மு.1900 லிருந்து சிந்து வெளி நாகரீகம் வீழ்ச்சி பெறத்துவங்கியது. வணிகத்தில் வீழ்ச்சி , நதியின் வறட்சி அல்லது வெள்ளப் பெருக்கு , அந்நியர் படையெடுப்பு ஆகியவை இந்த நாகரீகம் வீழ்ச்சி பெற முக்கியக் காரணமாக அமைந்தன.

5.மம்மியாக்கம் என்றால் என்ன?

        எகிப்தியர்கள் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தினார்கள். இதற்கு மம்மியாக்கம் என்று பெயர்.


பகுதி-இ

III. பெருவினா

1.சிந்துவெளிநாகரிகத்தின் மறைந்த பொக்கிஷங்களைப் பற்றி எழுதுக.

                 ஹரப்பர்களின் எழுத்துகளுக்கான
பொருள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், ஹரப்பா நாகரிகம் பற்றி முழுமையாக அறிய முடியாமல் உள்ளது. அவர்கள் திராவிட மொழியைப் பேசினார்கள் என்று அறிஞர்களில் ஒரு சாரார் கூறுகிறார்கள். தொல்லியல் ஆய்வுகள் நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு
அவர்கள் கிழக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் இடம் பெயர்ந்ததைக் காட்டுகின்றன. ஹரப்பா மக்களில் சிலர் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் குடிபெயர்ந்திருக்க வாய்ப்புகள்
உண்டு. அவர்களது எழுத்துகளுக்குப்
பொருள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே பல
கேள்விகளுக்கு உறுதியான பதில் கிடைக்கும்.


2. தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது
என்பதைக்கூறு.

       லாவோ ட் சு , கன்பூசியஸ் , மென்சியஸ் , மோ டி  ( மோட் ஜூ ) , தாவோ சின் ( பொ.ஆ.  365-427) போன்ற தத்துவ ஞானிகளும், சீனக் கவிஞர்களும் சீன நாகரிகத்திற்கு ஏராளமாகப் பங்களித்துள்ளார்கள். இராணுவ உத்தியாளரான சன் ட்சூ 'போர்க் கலை' என்ற நூலை எழுதினார். தி ஸ்பிரிங் அண்ட் ஆடோம் அனல்ஸ் (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டுகுறிப்புகள்) என்ற நூல் அதிகாரபூர்வ சீன அரசு நூலாக அங்கீகரிக்கப்பட்டது. 

          மஞ்சள் பேரரசரின் கேனன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்) என்ற நூல் சீனாவின்பழமையான மருத்துவ நூலாகக் கருதப்படுகிறது. அது ஹான் வம்ச காலத்தில் முறைப்படுத்தப்பட்டது.)

         லாவோ ட்சு (பொ.ஆ.மு. 604 521)
சௌ அரசின் தலைமை ஆவணக் காப்பாளராக இருந்தார். இவர்தான் (தாவோயிசத்தைத் தோற்றுவித்தார்.
ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கும் மூலகாரணம் என்று இவர் வாதிட்டார்.


(கன்பூசியஸ் (பொ.ஆ.மு. 551-497) ஒரு
புகழ்பெற்றசீனதத்துவஞானி.அவர் ஒரு அரசியல் சீர் திருத்தவாதி) ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தப்பட்டால், அவரது குடும்ப வாழ்க்கை முறைப்படுத்தப்படும். குடும்பம் முறைப்படுத்தப்பட்டு விட்டால் தேச
வாழ்வு முறைப்படுத்தப்பட்டுவிடும்," என்று
குறிப்பிடுகிறார்.)


           மென்சியஸ் (பொ.ஆ.மு. 372-289)
மற்றொரு புகழ்பெற்ற சீன தத்துவஞானியாவார்.)

***************    **********    *************

                                    பகுதி-ஈ

IV.செயல்பாடு

ஆசிய வரை படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களின் அடிப்படையில் நாகரீகங்கள்
தோன்றகாரணமான நதிகளை அடையளம் காண்க.

அ)  மெசபடோமியா யூப்ரடீஸ் & டைக்ரீஸ்,ஹராப்பா சிந்து, சீனா மஞ்சள் நதி, எகிப்திய நாகரிகம் -நைல் நதி

ஆ) சீனா - மஞ்சள் நதி,ஹராப்பா - சிந்து, மெசபடோமியா - யூப்ரடீஸ்&டை க்ரீஸ், எகிப்திய நாகரிகம்-நைல் நதி

இ) சீனா - மஞ்சள் நதி, ஹராப்பா - சிந்து, எகிப்திய நாகரிகம் - நைல் நதி, மெசபடோமியா- யூப்ரடீஸ் & டைக்ரீஸ்

ஈ)ஹராப்பா- சிந்து, எகிப்திய நாகரிகம் - நைல் நதி மெசபடோமியா - யூப்ர டீஸ்& டைக்ரீஸ்,  சீனா-மஞ்சள் நதி

விடை :  

ஆ) சீனா - மஞ்சள் நதி,ஹராப்பா - சிந்து, மெசபடோமியா - யூப்ரடீஸ்&டை க்ரீஸ், எகிப்திய நாகரிகம்-நைல் நதி

************     **************     ************

விடைத்தயாரிப்பு :

திருமதி.ச.இராணி அவர்கள் , 

பட்டதாரி ஆசிரியர் ,

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி . 

இளமனூர் , மதுரை.

****************    **********      *************




Post a Comment

1 Comments