பத்தாம் வகுப்பு - அறிவியல்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
பாடம் : 14 , தாவர உலகம் - தாவர செயலியல்
1. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. பின்னு கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள் -------
அ) ஒளி சார்பசைவு
ஆ) புவிசார்பசைவு
இ) தொடு சார்பசைவு
ஈ) வேதிசார்பசைவு
விடை : இ ) தொடு சார்பளவு
2. ஒளிச்சேர்க்கையின் போது நடைபெறும் வேதிவினை --------
அ) Co 2 ஒடுக்கப்பட்டு o 2 வெளியேற்றப்படுகிறது.
ஆ) நீர்ஒடுக்கமடைதல் மற்றும் Co2 ஆக்ஸிகரணம் அடைதல்.
இ)நீர் மற்றும் Co2இரண்டுமே ஆக்ஸிகரணம் அடைதல்.
ஈ) Co2 மற்றும் நீர் இரண்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
விடை : அ) Co 2 ஒடுக்கப்பட்டு o 2 வெளியேற்றப்படுகிறது.
3. நீர் தூண்டலுக்கு ஏற்பதாவர வேர் வளைவது ------- எனப்படும்.
அ) நடுக்கமுறு வளைதல்
ஆ) ஒளிசார்பசைவு
இ) நீர்சார்பசைவு
ஈ) ஒளியுறு வளைதல்
விடை : இ ) நீர்சார்பசைவு
4. இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும்..இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு?
அ) வேதி சார்பசைவு
ஆ) நடுக்கமுறு வளைதல்
இ) ஒளி சார்பசைவு
ஈ) புவிஈர்ப்பு சார்பசைவு
விடை : இ ) ஒளி சார்பசைவு
5. வெப்பத்தூண்டுதலுக்கு ஏற்பதாவரஉறுப்பு திசை சாராதூண்டல் அசைவுகளை உருவாக்குவது ------- எனப்படும்.
அ) வெப்பசார்பசைவு
ஆ) வெப்பமுறு வளைதல்
இ) வேதி சார்பசைவு
ஈ) நடுக்கமுறு வளைதல்
விடை : ஆ ) வெப்பமுறு வளைதல்
6. இலையில் காணப்படும் பச்சையம் ------ க்கு தேவைப்படும்.
அ) ஒளிச்சேர்க்கை
ஆ) நீராவிப்போக்கு
இ)சார்பசைவு
ஈ)திசை சாரா தூண்டல் அசைவு
விடை : அ ) ஒளிச்சேர்க்கை
7. நீராவிப்போக்கு -------- ல் நடைபெறும்.
அ) பழம்
ஆ)விதை
இ) மலர்
ஈ) இலைத்துளை
விடை : ஈ ) இலைத்துளை
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
1. -------- இன் துலங்கலால் தண்டுத் தொகுப்பு மேல்நோக்கி வளர்கிறது.
விடை : ஒளி
2. -------- நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது.
விடை : வேர்
3. சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது -------- எனப்படும்.
விடை : ஒளிச்சார்பசைவு
4. புவிஈர்ப்பு விசைக்கு ஏற்பதாவரம் வளைவது ------- எனப்படும்.
விடை : புவிசார்பசைவு
5. ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் CO2வை உள்ளிழுத்துக்கொள்கின்றன.
ஆனால் அவற்றின் உயிர் வாழ்தலுக்கு -------=
தேவைப்படும்.
விடை : ஆக்சிஜன்
V.மிகச் சுருக்கமாக விடையளி.
1. திசைச் சாராதூண்டல் அசைவு என்றால் என்ன?
துண்டல் ஏற்படும் திசையை நோக்கி ஏற்படும் அசைவுகளுக்கு திசைச்சாரா தூண்டல் அசைவு என்று பெயர்.
2. பின்வரும் வாக்கியத்தைக் கொண்டு, தாவரப் பாகத்தின் பெயரிடவும்.
அ) புவிஈர்ப்பு விசையின் திசையை நோக்கியும் ஆனால் ஒளி இருக்கும் திசைக்கு
எதிராகவும் இது வளைகிறது.
ஆ) ஒளி இருக்கும் திசையை நோக்கியும்,
புவிஈர்ப்பு விசையின் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.
விடை : அ ) வேர் ஆ ) தண்டு
3. ஒளிசார்பசைவு (phototropism) ஒளியுறு வளைதல் (photonasty) வேறுபடுத்துக.
ஒளிசார்பசைவு
* ஒளி உள்ள திசையை நோக்கி அசைவுகள் நடைபெறும்.
* வளர்ச்சியைச் சார்ந்து அமையும்
* அனைத்துத் தாவரங்களிலும் காணப்படும்.
ஒளியுறு வளைதல்
* அசைவுகள் திசை தூண்டலின் ஒரு திசையைச் சார்ந்து அமையாது.
* வளர்ச்சி சார்ந்து அமையாது.
* ஒரு சில குறிப்பிட்ட சிறப்பு தன்மை பெற்ற தாவரங்களில் மட்டுமே காணப்படும்.
4. ஒளிச்சேர்க்கையின் போது ஆற்றல் X ஆனது Y ஆற்றலாக மாறுகிறது அ) X
மற்றும் Y என்றால் என்ன? ஆ) பசுந்தாவரங்கள் தற்சார்பு உணவு ஊட்ட
முறையைக் கொண்டவை? ஏன்?
அ ) X - ஒளி ஆற்றல் Y - வேதி ஆற்றல்
5. நீராவிப் போக்கு - வரையறு.
தாவரப்பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையான தண்டுகளின் மூலமாக நீரானது ஆவியாக வெளியேற்றப்படுவது நீராவிப் போக்கு எனப்படும்.
6. இலைத்துளையைச் சூழ்ந்துள்ள
செல் எது?
காப்பு செல்கள் இலைத்துளைகளின் இருமருங்கிலும் காணப்படும். இவை இலைத்துளையை மூடவும் , திறக்கவும் செய்கின்றன.
************** ************ *************
விடைத்தயாரிப்பு :
திரு.S.பிரேம் குமார் ,
பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ,
அப்பர் மே.நி.பள்ளி , கருப்பாயூரணி , மதுரை.
*************** ************* ************
0 Comments