12 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 10 , வல்லின மெய்களை இட்டும் , நீக்கியும் எழுதுக - வினா & விடை / 12 th TAMIL - REFRESHER COURSE MODULE - 10 , QUESTION & ANSWER

 


12 ஆம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

செயல்பாடு 10 - வல்லின மெய்களை

இட்டும் நீக்கியும் எழுதுக

கற்றல் விளைவுகள்

* *;சந்திப் பிழைகளை அறியச் செய்தல் .

*  சந்தி எழுத்துகள் எவை என்பதை அறியச் செய்தல்.

*  பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்து கொள்ளல்.

*  சந்தி மிகுதலாலும் குறைதலாலும் ஏற்படும் பொருள் வேறுபாட்டை அறியச் செய்தல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல்

        மருந்துக்கடை / மருந்து கடை இரண்டு சொற்களுக்குமான வேறுபாடு என்ன? என்ற வினாவினைக் கேட்டு அதற்கான விடையை மாணவர்களிடம் பெற்று அதற்கான விளக்கம் கூறி ஆர்வமூட்டச் செய்தல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு:1

        தமிழில் சந்தி என்று சொல்லப்படுகின்ற ஒற்று மிகுதலாலும் குறைதலாலும் சில நேரங்களில் பொருள் வேறுபடுதலும் உண்டு. அவற்றைக் கூர்ந்து கவனித்து நோக்கினால் பொருள் வேறுபாட்டு நுட்பத்தை உணர்ந்து கொள்ளலாம்.

    சந்தி என்பதற்கு இணைப்புச் சொல் என்று பெயர் ஆங்கிலத்தில் Conjuction word என்று அழைப்பர்.

     தமிழின் சந்தி எழுத்துகள் க, ச, த, ப ஆகிய நான்கு வல்லின எழுத்துகளாகும்.

   வல்லினம் மிகும் இடங்கள் மிகா இடங்கள் எவை என்பதை அறிந்து கொண்டால் தமிழைப் பிழையின்றி எழுதலாம்.

எ.கா

அந்தக் கடை - க், அந்தச் சாலை - ச், இந்தத் தேர்தல் -த், எந்தப் பக்கம் - ப்

செயல்பாடு: 2

வல்லின ஒற்று மிகும் இடங்கள்:

             அந்த , இந்த என்ற சுட்டுப் பெயரடைகளின் பின்பும் எந்த என்ற வினாப் பெயரடையின் பின்பும் வல்லினம் மிகும்.

சான்று :

அந்த + கடை =  அந்தக்கடை

இந்த + சொல்  =  இந்தச்சொல்

எந்த + கேள்வி  =  எந்தக்கேள்வி


* செய' என்னும் வினையெச்சங்களின் பின் வலிமிகும்.

சான்று :

போக + கண்டேன் போகக்கண்டேன்
வர + சொல் = வரச்சொல்
படிக்க + படிக்க = படிக்கப்படிக்க

*  ' ஆக' என்ற வினையடையின் பின் வலிமிகும்.

சான்று :

வருவதாக + சொல் = வருவதாகச்சொல்
அழகாக + பேச = அழகாகப்பேச

* சில தொகைச் சொற்களில் வலிமிகும். அதாவது இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வலிமிகும்.

சான்று :

பலா + பழம்  =   பலாப்பழம்
வாழை + பழம் = வாழைப்பழம்
மல்லிகை + பூ = மல்லிகைப்பூ

* ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலி மிகும்.

சான்று:

நிறைவேறா + கனவு = நிறைவேறாக்கனவு.

வாடா + பூ = வாடாப்பூ.

         இரண்டாம் வேற்றுமை விரியிலும் , இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்
தொக்கத்தொகையிலும் வலிமிகும்.

சான்று :

கதவை + தட்டு = கதவைத் தட்டு
கையை + பிடி = கையைப் பிடி
தயிர் + கடை தயிர்க்கடை (தயிர் விற்கும் கடை)
மருந்து கடை= மருந்துக்கடை (மருந்து விற்கும் கடை)

செயல்பாடு: 3

வல்லினம் மிகா இடங்கள் :

வினைத்தொகையில் வல்லினம் மிகாது.

சான்று:

திருவளர் + செல்வன் = திருவளர் செல்வன்

குடி + தண்ணீர் = குடிதண்ணீர்

* உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.
சான்று :

செடி + கொடி = செடிகொடி
இரவு + பகல் = இரவு பகல்

* நல்ல, இன்ன, இன்றைய போன்ற பெயரடைகளின் பின்னும் படித்த, எழுதாத போன்ற பெயரெச்சங்களின் பின்னும் ஒற்று மிகாது.

சான்று :

நல்ல + கதை நல்ல கதை
இன்ன + பெயர் = இன்ன பெயர்
படித்த + புத்தகம் = படித்த புத்தகம்

* மென் தொடர்க் குற்றியலுகரத்தில் வலி மிகாது.

சான்று :

பகிர்ந்து + கொண்டான் = பகிர்ந்து கொண்டான்

வந்து + சென்றான் வந்து சென்றான்

* இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

சான்று :

மருந்து + கடை = மருந்து கடை (மருந்தைக் கடை )

தயிர் + கடை  = தயிர் கடை ( தயிரைக் கடை )

* செய்த என்னும் வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகாது.

சான்று :

செய்த + போது  =   செய்தபோது
சொன்ன + படி = சொன்னபடி

மாணவர் செயல்பாடு

*  வன்தொடர் குற்றியலுகரச் சொல்லைக் கூறச் செய்தல்.

*  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும் சொற்களைக் கூறச் செய்தல்

*  வல்லினம் மிகும், மிகா இடத்திற்குச் சில சான்றுகளைக் கரும்பலகையில் எழுதச் செய்து பயிற்சி கொடுத்தல்.

***************    *************  *************

                          மதிப்பீடு

1. வல்லினம் மிகும் சொற்கள் எவை?

      க , ச , த , ப முன் வல்லினம் மிகும்.

2. வல்லினம் மிகும் இடங்கள் இரண்டு கூறி அதற்கான எடுத்துக்காட்டுகள் தருக.

    *   அந்த , இந்த என்பதற்குப் பின் வல்லினம் மிகும் . ( சுட்டுப்பெயரடை ) 

சான்று :

  அந்த + கடை = அந்தக்கடை 

  இந்த + சொல் = இந்தச்சொல்

* ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலி மிகும்.

    சான்று :   வாடா + பூ  = வாடாப்பூ

3. வல்லினம் மிகா இடங்கள் எவை? சான்று தருக.


வினைத்தொகையில் வல்லினம் மிகாது.

சான்று:

திருவளர் + செல்வன் = திருவளர் செல்வன்

குடி + தண்ணீர் = குடிதண்ணீர்

* உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.
சான்று :

செடி + கொடி = செடிகொடி
இரவு + பகல் = இரவு பகல்

* நல்ல, இன்ன, இன்றைய போன்ற பெயரடைகளின் பின்னும் படித்த, எழுதாத போன்ற பெயரெச்சங்களின் பின்னும் ஒற்று மிகாது.

சான்று :

நல்ல + கதை நல்ல கதை
இன்ன + பெயர் = இன்ன பெயர்
படித்த + புத்தகம் = படித்த புத்தகம்

* மென் தொடர்க் குற்றியலுகரத்தில் வலி மிகாது.

சான்று :

பகிர்ந்து + கொண்டான் = பகிர்ந்து கொண்டான்

வந்து + சென்றான் வந்து சென்றான்

* இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

சான்று :

மருந்து + கடை = மருந்து கடை (மருந்தைக் கடை )

தயிர் + கடை  = தயிர் கடை ( தயிரைக் கடை )

* செய்த என்னும் வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகாது.

சான்று :

செய்த + போது  =   செய்தபோது
சொன்ன + படி = சொன்னபடி

**************   ****************    **********

Post a Comment

0 Comments