11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 8 - அலகிட்டு வாய்பாடு கண்டறிதல் - வினா & விடை / 11th TAMIL - REFRESHER COURSE MODULE - ACTIVITY 8 - QUESTION & ANSWER

 


11 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

செயல்பாடு - 8

 அலகிட்டு வாய்பாடு கண்டறிதல்

கற்றல் விளைவுகள்

* யாப்பின் உறுப்புகள் பற்றி அறிதல்.

* எழுத்து, அசை பற்றித் தெரிந்து கொள்ளுதல்.

* சீர் பிரித்தலை அறிந்து கொள்ளுதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல் :

         அலகிடுதல் என்பதற்கு பொருள் என்ன? என்று மாணவர்களிடம் கேள்வி கேட்டு செய்யுளில் அசை சீர் பிரித்துக் காட்டல் என்ற பதிலைக் கூறி தெளிவுபடுத்தவேண்டும். அலகிட்டு வாய்பாடு கண்டறிதல் எவ்வாறு என்பதைக் கூறும் யாப்பு இலக்கணத்தைப் பற்றி பார்ப்போம் என்று மாணவர்களுக்குக் கூறி ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு : 1

                      செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிப்பது யாப்பிலக்கணம். இதில் உறுப்பியல், செய்யுளியல் என இருவகைகள் உள்ளன. உறுப்பியலில் செய்யுளின் உறுப்புகள் பற்றிக் கூறப்படுகின்றன.

         எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை செய்யுளின் உறுப்புகள் ஆகும்.

எழுத்து :

    யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் குறில், நெடில், ஒற்று என மூன்று வகைப்படும்.

அசை:

          எழுத்துகளால் ஆனது அசை எனப்படும். ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது அசை ஆகும். இது நேரசை, நிரையசை என இருவகைப்படும். அசைப் பிரிப்பில் ஒற்றெழுத்தைக் கணக்கிடுவதில்லை.

நேரசை 

தனிக்குறில்  -  க

தனிக்குறில் ஒற்று  -  கல்

தனிநெடில்   -  கா

தனி நெடில் ஒற்று  -  கால் 

நிரையசை 

இருகுறில் - குடி

இருகுறில் ஒற்று - குடில்

குறில் நெடில்  - கலா

குறில் நெடில் ஒற்று - கலாம்

செயல்பாடு : 2

சீர் :

ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் சேர்க்கை சீர் ஆகும். ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் எனச் சீர்கள் நான்கு வகைப்படும்.



* காய்ச்சீர்களை "வெண்சீர்கள்" என்று கூறுவர்.

* மூவசைச் சீர்களை அடுத்து நேரசையோ அல்லது நிரையசையோ சேர்கின்ற பொழுது
நாலசைச்சீர் தோன்றும்.

செயல்பாடு :3

*  நாம் எளிய முறையில் திருக்குறளை இங்கு அலகிடலாம்.

* திருக்குறள் வெண்பாவின் வகைகளுள் ஒன்றான குறள்வெண்பா வகையைச் சார்ந்தது.

* முதலாம் அடியில் நான்கு சீர்களும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் ஆக மொத்தம் ஏழு சீர்களே இடம்பெறும்.

*  ஈரசைச் சீர்கள் நான்கும் வரும் (மாச்சீர் 2, விளச்சீர் 2). மூவசைச் சீர்களில் காய்ச்சீர்கள் நான்கும் வரும், கனிச்சீர் வராது. மூவசைச் சீர்கள் நேரசையில் தான் முடியும்.

அலகிடுதல் :

சீர்களை அவற்றிலுள்ள அசைகளின் அடிப்படையில் பிரிப்பதே அலகிடுதல் எனப்படுகிறது. ஒரு சீரை அசை பிரிக்கும் போது பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்க.

1. மெய்யெழுத்தின் பக்கத்தில் கோடிடுக.
2. நெடில் பக்கத்தில்/ கோடிடுக.
3. இருகுறில் அடுத்து) கோடிடுக.
4. ஒற்று, ஆய்தம் அலகு பெறாது. எனவே அவற்றை நீக்கி, ஓரெழுத்து இருப்பின் நேரசை எனவும், இரண்டு எழுத்துகள் இருப்பின் நிரையசை எனவும் கொள்க.

செயல்பாடு : 4

         சான்றுக்குச் சில திருக்குறள்களைச் சீர் பிரித்து வாய்பாடு எழுதுவது எப்படி என்பதைப் பின்வருமாறு பார்ப்போம்.

எடுத்துக்காட்டு:1

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.






மாணவர் செயல்பாடு

    பாடநூலிலுள்ள திருக்குறளுக்கு அலகிட்டு வாய்பாடு கண்டறிந்து மாணவர்களை எழுதிக் காட்டச் சொல்லுதல்.

*****************   ************   *************

                        மதிப்பீடு

1. யாப்பின் உறுப்புகள் எத்தனை? அவை யாவை?

   யாப்பின் உறுப்புகள் ஆறு ஆகும் . அவை முறையே , 

* எழுத்து 

* அசை 

* சீர் 

* தளை

* அடி 

* தொடை


2. ஓரசைச்சீருக்குரிய வாய்பாடு யாது?

அசை             வாய்பாடு

நேர்                  நாள் 

நிரை               மலர்

நேர்பு               காசு

நிரைபு             பிறப்பு 


3. அசை பிரிக்கும் போது கவனிக்க வேண்டியவை யாவை?


1. மெய்யெழுத்தின் பக்கத்தில் கோடிடுக.

2. நெடில் பக்கத்தில்/ கோடிடுக.

3. இருகுறில் அடுத்து) கோடிடுக.

4. ஒற்று, ஆய்தம் அலகு பெறாது. எனவே அவற்றை நீக்கி, ஓரெழுத்து இருப்பின் நேரசை எனவும், இரண்டு எழுத்துகள் இருப்பின் நிரையசை எனவும் கொள்ள வேண்டும்.


4. பின்வரும் திருக்குறளை அலகிட்டு வாய்பாடு கூறுக.

'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

வ.எ.       சீர்                 அசை              வாய்பாடு

1 .  எண்/ணென்/ப   நேநேநே      தேமாங்காய்

2 .  ஏ / னை                  நேர்நேர்       தேமா

3. எழுத்/தென்/ப        நிநேநே       புளிமாங்காய்

4. இவ்/விரண்/டும்   நேநிநே       கூவிளங்காய்

5. கண்/ணென்/ப     நேநேநே      தேமாங்காய்

6. வா/ழும்                    நேர் நேர்      தேமா

7. உயிர்க்/கு                நிரைநேர்   பிறப்பு 

        பிறப்பு எனும் வாய்பாடு கொண்டு இக்குறட்பா முடிவடைந்துள்ளது.

****************     ************    *************




Post a Comment

0 Comments