பத்தாம் வகுப்பு - அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 1 ) அளவீடு - மதிப்பீடு - வினாக்களும் - விடைகளும் / 10th SCIENCE - REFRESHER COURSE MODULE - LESSON 1 - QUESTION & ANSWER

 


              பத்தாம் வகுப்பு - அறிவியல் 

          புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

               பாடத்தலைப்பு : அளவீடு

             வினாக்களும் விடைகளும் 

மதிப்பீடு;

1. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவைக் குறிப்பது  வெப்பநிலை ஆகும்.

2. நிறையின் SI அலகு கிலோகிராம் 

3, ஒரு மோல் என்பது 6.023 × 10ன் அடுக்கு 23 அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது.

4. அணுவினுள் ஏற்படும் அதிர்வுகளின் அடிப்படையில் செயல்படும் கடிகாரங்கள் அணுக்கடிகாரங்கள்.

5. ஒளிச்செறிவு கேண்டிலா ஒளிமானி / ஒளிச்செறிவு மானி ஆல் அளவிடப்படுகின்றது.

6. ஒரு பொருளுக்கு வெப்பத்தை அளிக்கும் போது அதன் வெப்பநிலை அதிகரிக்கும்.

7 . நீளத்தின் அலகு மீட்டர் ஆகும்.

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

8. ஒரு கடத்தியின் வழியே ஒரு வினாடியில் பாயும் மின்னூட்டங்களின் அளவு  ------எனப்படும்.

(அ)மின்னோட்டம்

(ஆ) மின்தடை ( இ ) மின்னழுத்தம்

விடை : அ ) மின்னோட்டம்

9. வெப்பநிலையின் SI அலகு

(அ) செல்சியஸ்

(ஆ) பாரன்ஹீட்

(இ)கெல்வின்

விடை : இ ) கெல்வின் 

10. ஒளிச்செறிவின் SI அலகு

அ ) மோல் (ஆ) கேண்டிலா  இ) ஆம்பியர்

விடை :  ஆ ) கேண்டிலா 

III. சரியா தவறா எனக் குறிப்பிடவும்.

1 ) மின்னோட்டத்தின் SI அலகு கிலோகிராம் (சரி/தவறு)

விடை :  தவறு 

2. இயற்பியல் தராசு, சாதாரண தராசை விடத் துல்லியமானது. (சரி/தவறு)

விடை :  சரி 

3. மின்னோட்டத்தை அளவிடும் கருவி அம்மீட்டர் ஆகும். (சரி/தவறு)

விடை : சரி 

4. அணுக்கடிகாரங்கள் GPS கருவிகளில் பயன்படுகின்றன. (சரி/தவறு)

விடை : சரி 

IV. பொருத்துக

1. இயற்பியல் அளவு  -  SI அலகு 

அ) நீளம்                       -  மீட்டர் 

ஆ) நிறை                     - கிலோகிராம்

இ )  காலம்                   - விநாடி

ஈ) வெப்பநிலை         - கெல்வின் 


2. கருவி                      அளவிடப்படும் பொருள்

அ) திருகு அளவி   -  நாணயம் 

ஆ)வெர்னியர் அளவி  -  கிரிக்கெட் பந்து 

இ ) சாதாரணத்தராசு   - காய்கறிகள்

ஈ)மின்னணுத்தராசு  - தங்க நகைகள் 


V. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி,

1. இந்தியத் திட்ட நேரத்தை (IST) எவ்வாறு கணக்கிடலாம்?

               இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீர்சாபூர் எனும் இடத்தின் வழியாகச் செல்லும் தீர்க்கக் கோட்டைத் தோராயாமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது. இக்கோடானது 825 டிகிரி தீர்க்கக் கோட்டில் அமைந்துள்ளது.

2. வெப்பநிலையின் அளவீடுகள் யாவை?

      டிகிரி , செல்சியஸ் , ஃபாரன்ஹீட் , கெல்வின்.

3. ஒப்புமை வகைக் கடிகாரங்களில் நேரத்தைக் காட்டும் மூன்று குறிமுட்கள் யாவை ? 

            மணிமுள் , நிமிடமுள் , வினாடிமுள் 

4. கடிகாரத்தில் ஒரு மணி நேரத்தில் நிமிட முள் எத்தனை முறை சுற்றி வரும் ? 

            ஒருமுறை சுற்றி வரும்.

5 . உங்கள் கருவிப் பெட்டியிலுள்ள அளவுகோலைப் பயன்படுத்தி ஒரு காகிதத்தின் விட்டததைக் கண்டுபிடிக்க முடியுமா ?

        முடியாது. கருவிப் பெட்டியிலிருக்கும் அளவுகோல் மூலம் கம்பியின் விட்டத்தினைக் காண முடியாது . திருகு அளவியினைப் பயன்படுத்தி காகிதத்தின் விட்டத்தைக் கண்டு பிடிக்க முடியும்.

*************    *************    **************

விடைத்தயாரிப்பு

திரு. பிரேம் குமார் , அறிவியல் ஆசிரியர் ,

அப்பர் மே.நி.பள்ளி , 

கருப்பாயூரணி , மதுரை.

************    ***************   ****************




Post a Comment

0 Comments