பஸ் டிசிப்பிளின்
"அம்மா அம்மா" என்று நான்காம் வகுப்பு படிக்கும் மகன் அவனது அம்மாவை அழைத்தான்
."என்ன தம்பி ,ஏன் இப்படி கத்துற" என்று அம்மா கேட்டாள்.
"அம்மா நேத்து பாப்பாவை ஸ்கூல் பஸ்ல பஸ் லீடர் திட்டுனாங்கமா" என்று கூறினான்.
"ஏன் பாப்பா தூங்கிட்டாளா?சின்ன பொண்ணுதான,யுகேஜி தான படிக்கிறா எதுக்கு திட்டுனாங்க?"என்று அம்மா கேட்டாள்.
பஸ்ல ஸ்னாக்ஸ் சாப்பிட்டாமா.அதான் பஸ் லீடர் திட்டுனாங்க" என்று கூறினான்.
"இதுல என்ன இருக்கு பசிச்சு இருக்கும் சாப்பிட்டு இருப்பாள். இதுக்கு ஏன் திட்டனும்" என்று அம்மா கேட்டாள்.
"அம்மா பஸ் டிசிபிளின மதிக்கணும் இல்லியாமா. பள்ளிகூடத்துல சொல்லி கொடுக்குற எல்லா நல்ல பழக்க வழக்கங்களையும் மதிக்கணும்னு நீங்க சொல்லி கொடுத்து இருக்கீங்க. பஸ்ல ஸ்னாக்ஸ் சாப்பிட கூடாதுமா"என்று கூறினான்.
"சரி தம்பி,பஸ் லீடர் எந்த வகுப்பு படிக்கிறாங்க"என்று கேட்டாள்.
"எட்டாம் வகுப்பு"என்று கூறினான்.
"பாப்பா இங்க வாடா"என்று அவனது அம்மா அழைத்தாள். "என்னம்மா ?" என்று மகள் கேட்டாள்.
"நேத்து பஸ்ல ஸ்னாக்ஸ் சாப்பிட்டயடா?"என்று செல்லத்துடன் கூடிய கோபத்தில் அம்மா கேட்டாள்.
"ஆமாமா"என்று மகள் கூறினாள்.
"ஏன் சாப்பிட்ட.பஸ் ஒழுக்கத்தை மதிக்கணும்னு சொல்லி கொடுத்து இருக்கேன்ல"என்று அம்மா கேட்டாள்.
"ஆமாம் அம்மா"என்று மகள் கூறினாள்."அ
ப்புறம் ஏன்டா பாப்பா சாப்பிட்ட" என்று அம்மா கேட்டாள்.
"அம்மா பஸ் லீடெரே பஸ்ல ஸ்னாக்ஸ் சாப்பிட்டாஙக அதான் நானும் சாப்பிட்டேன்.அவுங்களுக்கு மட்டும் தான் பசிக்குமா? எனக்கு பசிக்காதா?என்னைச் சாப்பிட கூடாதுனு சொன்னா அந்த அக்காவும் சாப்பிட கூடாதுலமா"என்று கூறிவிட்டு விளையாடச் சென்று விட்டாள்.
அம்மா மகனை பார்த்து"அட அதான ,தம்பி பாப்பா சொல்றதும் சரிதான,நாம ஒருத்தவுங்களுக்கு அறிவுரை கூறுவதற்கு முன்னாடி நாம சரியாக இருக்கனும்.ஒரு பொறுப்புல இருக்குறோம்னா அந்த பொறுப்புக்கு தகுதியானவுங்களா இருக்கணும்.இல்லனா தகுதியானவுங்களா மாத்திக்கணும்" என்று கூறினாள்.
"ஆமாம் அம்மா.புரிஞ்சுக்கிட்டேன்.நான் பாப்பா கூட விளையாட போறேன்மா" என்று கூறி அம்மா கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு தங்கையுடன் விளையாடச் சென்றான்.. இருவரும் விளையாடுவதை ரசித்துக் கொண்டே குழந்தையின் உலகம் கூட எவ்ளோ பாடங்களைக் கற்று தருகிறது என புன்முறுவலோடு சிரித்துக் கொண்டே யோசித்தாள்....
அன்பாசிரியர். கவிஞர். ரா. ஷீலா,
இடைநிலை ஆசிரியை,
தேனி.....
1 Comments
எளிமையான வடிவில் ஆழமான உண்மை.
ReplyDelete