9 - தமிழ் ஒப்படைப்பு 2 - இயல் 2 உயிருக்கு வேர் - வினாக்களும் விடைகளும் / 9th TAMIL - ASSIGNMENT 2 - EYAL 2 - QUESTION & ANSWER

 


                      பாடம்: தமிழ்

                 வகுப்பு: ஒன்பது

           ஒப்படைப்பு - விடைகள் 

                          இயல் - 2 

       இயற்கை , சுற்றுச்சூழல்


1. ஒரு மதிப்பெண் வினாக்கள்


1. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் “ என்று பாடியவர் யார் ?

               இளங்கோவடிகள்

2. தௌலீஸ்வரம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

               கோதாவரி ஆறு 


3. 'மே தினமே வருக' இந்நூலின் ஆசிரியர் யார் ?

                 கவிஞர்.தமிழ்ஒளி 


4. கந்தம் என்ற சொல்லின் பொருள் யாது ?

                             மணம் 


5. நீர்நாடு என்று அழைக்கப்படும் நாடு எது?

                            சோழநாடு 


6. பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?

                           சேக்கிழார்


7. திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை எழுதியவர் யார்?

                   நம்பியாண்டார் நம்பி.


8. பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் எது?

                    புறநானூறு


9. மல்லல் மூதூர் வயவேந்தே! - எவ்வகைத் தொடர்?

                  விளித்தொடர்.


10.அடுபோர். இலக்கணக் குறிப்பு தருக.

                        வினைத்தொகை


                          பகுதி - ஆ 


I1 குறுவினா


11. உறைக்கிணறு என்றால் என்ன?

               மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு உறைக்கிணறு எனப்படும்.


12. கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளுள் இரண்டினை எழுதுக.

                  * நிலைபெற்ற சிலை 

                  * மே தினமே வருக

                  * குருவிப்பட்டி 


13. களை பறிக்கும் பருவம் எது?

                     நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின முதலிலை சுருள் விரிந்தது.  அப்பருவத்தைக் கண்ட உழவர் இதுதான் களைபறிக்கும் பருவம் என்றனர்.


14. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே-குறிப்பு தருக.

                  நீர் இன்றி அமையாத  உடல் உணவால் அமைவது ; உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே , உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.


15. கூவல் என்று அழைக்கப்படுவது எது?

                உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை.


                                     பகுதி-இ


III. நெடுவினா


16. பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?

பட்டமரத்தின் வருத்தங்கள் :

* மழைநீர் இன்மையால், மரங்கள் பட்டமரங்களாகக் காய்ந்து போகின்றன.

* இலை, தழைகளை யெல்லாம் பெற்றிருந்த மரம், பட்டமரமாகியதால், வெட்டப்படும் நாள் என்று வருமோ என வருந்தி நிற்கிறது.

* அழகிய மலர்களும் பசுமையான இலைகளுமாக நிழல் தந்த மரம், வெந்து வெம்பிக் குமைந்தது.

* மேல்பட்டையாகிய ஆடைகள் எல்லாம் விழுந்தன.

* பாடும் பறவை இனங்கள், வாழ வழியற்றுத் தவித்துப் போயின.

*கிளைகளில் ஏறிக் குதிரை ஆடும் சிறார்கள், விளையாட முடியாமல் ஏங்கினர்.

* இவை அனைத்தும் வெறும் கனவாகிப் போயினவே என்பன, பட்டமரம் வருந்தியது.

**************     ***********     *************

17. சோழர் காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது ?

சோழர்காலக் 'குமிழித்தூம்பின்  பயன்கள்

* அணையில் வழிந்தோடும் நீரின் அளவை அதிகரிக்கவும், அணையின் முன் தேங்கும் நீரின் சேற்றைக் குறைக்கவும் தமிழன் கையாண்ட அற்புதமான யுக்தி ‘குமிழித் தூம்பு'.

* மழைக்காலங்களில் ஏரியில் நீர் நிரம்பும்போது நீந்துவதில் வல்லவரான ஒருவர் தண்ணீருக்குள் சென்று கழிமுகத்தை அடைந்து, குமிழித்தூம்பை மேலே தூக்குவார்.

* அடியில் இருக்கும் இரு துளைகளின் வழியே, மேலே இருக்கும் நீர் ஓடித் துளையிலிருந்து வெளியேறும்.

* கீழே உள்ள சேறும் சகதியும், துளையில் இருந்து நீருடன் சேர்ந்து வெளியேறும். தூர் வாரவேண்டிய அவசியம் இருக்காது.

***************    ************    *************


                                       பகுதி-ஈ


IV.செயல்பாடு


படத்தைப் பார்த்துக் கவிதை படைக்க. பசுமை யான மரம்-  ஒருவீடு

மாணவக் கவிஞர்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கவிதையாக வடிக்கவும்.




Greentamil.in


*************    **************   *************

வாழ்த்துகளுடன் , 

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

*******************   ***************  ********

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ************




Post a Comment

1 Comments