9 - சமூக அறிவியல் - ஒப்படைப்பு - வரலாறு விடைகள் - அலகு 1 / 9th SOCIAL SCIENCE - ASSIGNMENT - HISTORY - UNIT 1 - QUESTION & ANSWER

 


               ஒப்படைப்பு     விடைகள்

                      சமூக அறிவியல்

                  வரலாறு           வகுப்பு : 9

                               அலகு - 1 

மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் ; வரலாற்றுக்கு முந்தைய காலம்.

பகுதி - அ

1.சரியான விடையைத் தேர்வு செய்க:

1. மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராயும் படிப்பு ---------    எனப்படும்.

அ) தொல்மானுடவியல் 

ஆ) தொல்லியல் 

இ) மானுடபுவியியல் 

ஈ) மரபணுவியல்

விடை : ஆ ) தொல்லியல்

2. மனிதனின் தோற்றம் என்ற நூலை எழுதியவர்  ---------

அ) ஹெர்பர்ட் ஸ்பென்சர் 

ஆ) ரூசோ 

இ) சார்லஸ் மர்வின் 

ஈ) சர்.இராபர்ட் புரூஸ் ஃபூட்

விடை : அ) ஹெர்பர்ட் ஸ்பென்சர் 

3. நவீன மனிதர்களோடு தொடர்புடைய பழங்குடி இனம்

அ) ஹோமோ சேப்பியன்ஸ்

ஆ) ஹோமோ ஹெபிலிஸ்

இ) ஹோமோ எரக்டஸ்

ஈ) நியாண்டர்தால்

விடை :  அ) ஹோமோ சேப்பியன்ஸ்

4. லெவலாய்சியன் என்ற சொல் இதோடு தொடர்புடையது

அ) பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய பாத்திரங்கள்

ஆ பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள்

இ) பழங்கற்கால மக்கள் வரைந்த பாறை ஓவியங்கள்

ஈ) பழங்கற்கால மக்களின் வளர்ப்பு பிராணிகள்

விடை : ஆ பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள்

5. கற்கருவிகள் செய்வதற்கு புதிய நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட காலம் ------

அ) பழங்கற்காலம் 

ஆ) இடைக்கற்காலம் 

இ) பிற்பழங்காலம் 

ஈ) புதிய கற்காலம்

விடை :  ஈ ) புதிய கற்காலம்

                        பகுதி- ஆ

11. குறுவினா

1. தொல்மானுடவியல் குறிப்பு வரைக?

                    மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து புதைப்படிமங்கள் வழி ஆய்ந்து அறிந்து கொள்ளும் இயல் ஆகும்.


2 பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு?

பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்

* டோல்மென் எனப்படும் கற்திட்டை, 

* பாறையைக் குடைந்து உருவாக்கிய குகைகள்

* சிஸ்ட் எனப்படும் கல்லறைகள்,

* மென்ஹிர் எனப்படும் நினைவுச் சின்ன குத்துக்கல், தாழி.

* சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள்


3. தேய்த்து மெருகிடுதல் என்றால் என்ன?

* புதியகற்கால மனிதர்கள் தான் முதலில் மட்பாண்டங்களைச் செய்திருக்க வேண்டும்.

* அவர்கள் மட்பாண்டங்களைச் சுடுவதற்கு முன்னால் அவற்றைக் கூழாங்கற்கள் கொண்டு மெருகேற்றினார்கள். இதனைத் தேய்த்து மெருகிடுதல் (burnishing) என்பர்.


                             பகுதி-இ

III. பெரு வினா

1. புதிய கற்கால மக்களின் பண்பாடு, இடைப்பழங்கற்கால மக்களின் பண்பாட்டிலிருந்து எவ்வாறு வேறுபட்டு காணப்படுகிறது என்பதை விளக்குக?

* இடைப்பழங்கற்கால பண்பாடு தற்காலத்திற்கு முன் 3,85,000 முதல் 1,98,000 ஆண்டுகளுக்கு இடையில் உருவானது. ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் காணப்பட்டது.

* புதிய கற்கால பண்பாடு சுமார் கி.மு. 10,000 லிருந்து கி.மு. 5,000 ற்குள் உருவானது.

* எகிப்து, மெசபடோமியா, சிந்துவெளி, கங்கை சமவெளி, சீனாவின் செழுமையான
பகுதிகளில் காணப்பட்டது.

* மேலும் புதிய கற்காலத்தில் வேளாண்மை துவங்கப்பட்டது.

* நிரந்தரமான வீடுகள் கட்டப்பட்டன. பெரிய ஊர்கள் உருவாகின.

* இவை பண்டைய நாகரிகங்களின் உருவாக்கத்திற்கு வழிகோலியது.

2. பெருங்கற்கால மக்களின் ஈமச்சின்ன வகைகள் பற்றி விளக்குக?

* டோல்மென்கள் - மேஜை போன்ற கல்லால் உருவாக்கப்பட்ட இவை ஈமச் சடங்கின்
நினைவுச் சின்னமாக நிறுவப்பட்டன.

* சிஸ்ட் - மண்ணில் புதைக்கப்படும் கல்லறை போன்றது. இவை நான்கு புறமும் நான்கு
கற்பாளங்களை நிறுத்தி, மேலே ஒரு கற்பாளத்தை வைத்து மூடி உருவாக்கப்படும்.

* தாழி - அர்ன் எனப்படும் மட்பாண்டசாடிகள். இவை இறந்தவர்களைப் புதைக்கப்
பயன்படுத்தப்பட்டவை.

* சார்க்கோபேகஸ் - சுட்ட களிமண்ணாலான சவப்பெட்டி போன்றவை. இவற்றிற்கு சில
சமயங்களில் பல கால்களை வைத்துத் தயாரிப்பார்கள்.

* மென்ஹிர் - புதைத்ததன் நினைவுச் சின்னம் போல நிறுவப்படும் தூண் போன்ற
நடுகற்கள்.

3. வேளாண்மையும், கால்நடைவளர்ப்பும் மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி  விளக்குக?

* பயிர் விளைவித்தலும். விலங்குகளைப் பழக்கப்படுத்துதலும் ஏராளமான அளவில் தானிய மற்றும் விலங்கு உணவை உற்பத்தி செய்வதற்கு இட்டுச் சென்றது.

* ஆறுகள் படியவைத்த வளமான வண்டல் மண் வேளாண்மை அதிகரிக்க உதவியது.

* சிறந்த இயற்கைத் தகவமைப்பாக இருந்ததால், மக்கள் நதிக்கரைகளில் வாழ்வதை விரும்பினர்.

* இப்புதிய செயல்பாடுகள் உணவு உபரிக்கு இட்டுச் சென்றது. இந்தஉணவு உபரிதான்
பண்டைய நாகரிகங்களின் உருவாக்கத்துக்கு ஒரு முக்கியமான கூறு ஆகும்.

* இக்காலத்தில் நிரந்தரமான வீடுகள் கட்டப்பட்டன. பெரியவர்கள் உருவாகின. எனவே, இவை புதியகற்காலப் புரட்சி என்றழைக்கப்படுகிறது.

************     *************   *************

விடைத்தயாரிப்பு 

திருமதி.ச.இராணி அவர்கள் ,

பட்டதாரி ஆசிரியை , 

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

*************   *************       ***********



Post a Comment

0 Comments