ஒப்படைப்பு விடைகள்
வகுப்பு: 7
பாடம் : சமூக அறிவியல்
புவியியல்
இயல்-1 பகுதி - அ
1. ஒரு மதிப்பெண் வினாக்கள்:
1, சிமா அடுக்கு --------- மற்றும் --------கனிமக்கூறுகளால் அமைந்தது.
அ) சிலிக்கா மற்றும் அலுமினியம்
ஆ) சிலிக்கா மற்றும் துத்தநாகம்
இ) சிலிக்கா மற்றும் மெக்னீசியம்
ஈ) சிலிக்கா மற்றும் இரும்பு
விடை : இ ) சிலிக்கா மற்றும் மெக்னீசியம்
2. ----------- என்ற இடைவெளி புவிக் கருவத்திற்கும், கவசத்திற்கும் இடையே எல்லையாக அமைகின்றது.
அ) மோஹோரோவிசிக்
ஆ) வெய்சார்ட்குட்டன்பெர்க்
இ) பேரிஸ்பியர்
ஈ) சியால்
விடை : ஆ ) வெய்சார்ட்குட்டன்பெர்க்
3. புவியின் ஆரம் ------ கி.மீ. ஆகும்.
அ) 6371 கி.மீ.
ஆ) 6372 கி.மீ.
இ) 6373 கி.மீ.
ஈ) 6376 கி.மீ.
விடை : அ ) 6371 கி.மீ.
4. புவிமேற்பரப்பு நில அதிர்வலையின் மற்றொரு பெயர்.
அ) P - அலைகள்
ஆ) L - அலைகள்
இ) S- அலைகள்
ஈ) V- அலைகள்
விடை : ஆ) L - அலைகள்
5. 'சுனாமி' என்ற சொல் எந்த மொழியிலிருந்து தோன்றியது?
அ) லத்தீன் மொழி
ஆ) ஜப்பானிய மொழி
இ) சமஸ்கிருத மொழி
ஈ) அரேபிய மொழி
விடை : ஆ) ஜப்பானிய மொழி
6. புவியினுள் உள்ளவாயுக்களுடன் கூடிய பாறைக்குழம்பு.
அ) லாவா
ஆ) கிரேட்டர்
இ) மாக்மா
ஈ) நெருப்புவளையம்
விடை : இ ) மாக்மா
7. எரிமலைகள் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு ஆ) மூன்று
இ) நான்கு ஈ) ஐந்து
விடை : ஆ ) மூன்று
8. எரிமலையின் கூம்பு வடிவக்குன்றின் உச்சிப்பகுதியில் தோன்றும் பள்ளத்தையே --------- என்கிறோம்.
அ) எரிமலைப் பள்ளம்
ஆ) கூம்பு வடிவகுன்று
இ) எரிமலைவாய்
ஈ) லாவா
விடை : அ ) எரிமலைப்பள்ளம்
9.புவிமேலோட்டின் ஒரு பகுதியில் ஏற்படும் திடீர் நகர்வின் மூலம் அசைவோ அல்லது
நடுக்கமோ ஏற்பட்டால் அதை ----------
என்கிறோம்.
அ) மேற்பரப்பு அலைகள்
ஆ) நிலநடுக்கம்
இ) புற உந்துசக்திகள்
ஈ) முறிவு அலைகள்
விடை : ஆ ) நிலநடுக்கம்.
10. நிலநடுக்க மையத்திற்கு மேல் புவியோட்டு பகுதியில் அமைந்திருக்கும் புள்ளி -------
அ) நிலநடுக்க மேல்மையப்புள்ளி
ஆ) நிலநடுக்க மையம்
இ) நில அதிர்வலைகள்
ஈ) சுனாமி
விடை : அ ) நிலநடுக்க மேல்மையப்புள்ளி
பகுதி -ஆ
II. குறுவினா:
11. புவியின் உள்ளமைப்பு எத்தனை அடுக்குகளால் ஆனது? அவை யாவை?
மூன்று அடுக்குகளால் ஆனது.
* புவி மேலோடு
* கவசம்
* புவிக்கருவம்
12. புவியின் உட்கருவத்தை வரையறு.
* புவியின் உட்கருவம் திட நிலையில் உள்ள நிக்கல் ( Ni ) மற்றும் இரும்பால் ( Fe ) ஆனது.
* நைப் ( Nife ) என்ற உட்கருவம் 5150 முதல் 6370 கிலோமீட்டர் ஆழம் வரை பரந்துள்ளது.இதன் அடர்த்தி 13.0 கிராம் / செமீ3 ஆகும்.
13. நிலநடுக்கத்தினால் ஏற்படும் விளைவுகளில் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
* புவிப்பரப்பில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
* மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவுகளையும் , நிலப்பகுதிகளில் வீடுகள் , கட்டடங்கள் இடிந்து விழும் நிலையையும் ஏற்படுத்துகிறது.
14. உறங்கும் எரிமலை என்றால் என்ன? உதாரணம் ஒன்று தருக.
பல வருடங்களாக எரிமலைக் குழம்பை வெளியேற்றாத , எப்போது வேண்டுமானாலும் செயல்படலாம் என்ற நிலையில் உள்ள எரிமலைகள் உறங்கும் எரிமலைகள் என அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு : இத்தாலி - வெசூவியஸ்
15. ரிக்டர் அளவை - வரையறு.
புவி அதிர்வு அலைகளின் ஆற்றல் செறிவினை அளவிட ரிக்டர் அளவை பயன்படுகிறது. இதில் 0 - வில் தொடங்கி 9 வரை அளவுகள் உள்ளன.
பகுதி - இ
III. பெருவினா:
16. உலகின் முக்கிய எரிமலை நிகழ்வு பகுதிகள் யாவை? அவற்றுள் ஏதேனும்
ஒன்றினை விளக்குக.
உலகில் மூன்று முக்கிய எரிமலை நிகழ்வுப் பகுதிகள் உள்ளன. அவை ,
1 ) பசிபிக் வளையப்பகுதி
2 ) மத்திய கண்டப்பகுதி
3 ) மத்திய அட்லாண்டிக் பகுதி.
1 ) பசிபிக் வளையப்பகுதி.
இந்த எரிமலைப் பகுதியானது குவிய கடல்தட்டின் எல்லைப் பகுதியில் அமையப்பெற்றுள்ளது. பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் இப்பகுதியில் அமைந்திருப்பதால் இப்பகுதியை பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கின்றனர்.
பகுதி -ஈ
IV.செயல்பாடு
பின்வரும் படத்தில் எண்கள் 1, 2, 3, 4 மற்றும் 5 குறிப்பவை.
விடை : இ ) புவிமேலோடு , மேல்கவசம் , கவசம் ,வெளிக்கரு , புவிஉட்கரு .
************ ************* *************
விடைத்தயாரிப்பு
திருமதி.ச.இராணி அவர்கள் ,
பட்டதாரி ஆசிரியை ,
அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி ,
இளமனூர் , மதுரை.
**************** ************* ***********
0 Comments