ஒப்படைப்பு விடைகள்
வகுப்பு : 7
பாடம் : சமூக அறிவியல்
பொருளியல் இயல்-1
பகுதி - அ
1. ஒரு மதிப்பெண் வினாக்கள்:
1.உற்பத்திக்கு உதவுகின்றன உள்ளீட்டு பொருள்கள் யாவை?
அ. நிலம் ஆ. உழைப்பு
இ. முதலீடு ஈ மேற்கூறிய அனைத்தும்
விடை : ஈ ) மேற்கூறிய அனைத்தும்
2. --------- செயலற்ற ஓர் உற்பத்தி காரணி
அ. மூலதனம் ஆ. நிலம்
இ. ஈ உழைப்பு ஈ. காலம்
விடை : அ.மூலதனம்
3. நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பவை ---------- உற்பத்தி
அ. முதன்மை நிலை ஆ. இரண்டாம் நிலை
இ. மூன்றாம் நிலை ஈ. நான்காம் நிலை
விடை : இ ) மூன்றாம் நிலை
4. தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்
அ. பரிமாற்றம் செய்பவர் ஆ. முகவர்
இ) அமைப்பாளர் ஈ. தொடர்பாளர்
விடை : இ ) அமைப்பாளர்
5. பயன்பாட்டின் வகைகளாவன
அ. வட்ட வடிவ பயன்பாடு
ஆ. கால பயன்பாடு
இ. இட பயன்பாடு
ஈ. மேற்கண்ட அனைத்தும்
விடை : ஈ ) மேற்கண்ட அனைத்தும்
6. நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு என்ற நூலினை எழுதியவர் யார்?
அ. மார்ஷல்
ஆ) ஆடம் ஸ்மித்
இ. ராபின்சன்
ஈ. ஆல்பர்ட்
விடை : ஆ ) ஆடம் ஸ்மித்
7. பொருளாதாரத்தில் --------என்ற சொல், மாற்றத்தக்க மதிப்புடைய பொருள்களையும் சேவைகளையும் உருவாக்குவதை குறிக்கின்றது
அ) உற்பத்தி ஆ. மூலதனம்
இ. நிலம் ஈ. உழைப்பு
விடை : அ ) உற்பத்தி
8. பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர்
அ. ஆடம் ஸ்மித் ஆ. மார்ஷல்
இ. ஆல்பர்ட் ஈ. ராபின்சன்
விடை : ஆ ) ஆடம் ஸ்மித்
9. முதன்மைக் காரணிகள் என்பன ----------
அ. நிலம், மூலதனம்
ஆ. மூலதனம், உழைப்பு
இ) நிலம், உழைப்பு
ஈ. இவற்றில் எதுவுமில்லை
விடை : இ ) நிலம் , உழைப்பு
10.பொருளாதாரத்தில் தனியார் துறை நிறுவனங்களும், பொதுத்துறை
நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுவது
அ. வணிக பொருளாதாரம்
ஆ) கலப்பு பொருளாதாரம்
இ. அரசியல் பொருளாதாரம்
ஈ. சந்தைப் பொருளாதாரம்
விடை : ஆ ) கலப்புப் பொருளாதாரம்
பகுதி -ஆ
II. குறுவினா
11. மார்ஷலின் கூற்றுப்படி மூலதனம் என்றால் என்ன?
இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகைச்செல்வங்களே மூலதனம் ஆகும்.
12. காலப் பயன்பாடு என்றால் என்ன?
ஒரு பொருளை எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைக்கும் போது அதன் பயன்பாடு மிகுகிறது.
எடுத்துக்காட்டு : நெல் , கோதுமை சேமித்தல்.
13. வேலை பகுப்பு முறை - வரையறு
ஒரு உற்பத்தியை நன்கு வரையறுக்கப்பட்ட வெவ்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து , அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவிடம் ஒப்படைத்தலே வேலை பகுப்பு முறை எனப்படும்.
14. பயன்பாடு என்றால் என்ன?
பயன்பாடு என்பது நமது தேவைகளையும் , விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும்.
15. இரண்டாம் நிலை உற்பத்தி என்றால் என்ன?
முதன்மை நிலையிலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி , புதிய உற்பத்திப் பொருளை உருவாக்கும் செயல்பாட்டை இரண்டாம் நிலை உற்பத்தி என்கிறோம்.
எடுத்துக்காட்டு : கரும்பு - சர்க்கரை
பகுதி - இ
III. பெருவினா
16. வேலை பகுப்பு முறையின் நன்மைகள் மற்றும் தீமைகளை விளக்குக?
நன்மைகள்
* உழைப்பாளி ஒருவர் , ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதனால் அந்த வேலையில் திறமை உடையவராக ஆகிறார்.
* இம்முறை நவீன இயந்திரங்களை உற்பத்தயில் அதிகமாக ஈடுபடுத்துவதற்கு வழி வகுக்கிறது. உதாரணம் கம்பியில்ராத் தந்தியின் கண்டுபிடிப்பு.
* காலமும் , மூலப்பொருள்களும் மிகத்திறமையாகப் பயன்படுத்தப் படுகின்றன.
தீமைகள்
* தொழிலாளி , ஒரே வேலையைத் திரும்ப , திரும்பச் செய்வதால் , சுவையற்ற , களிப்பற்ற தன்மையை அடைகிறார். இது , மனிதத் தன்மையை அழிக்கிறது.
* ஒரு பகுதி பணியினை மட்டும் ஒரு தொழிலாளி மேற்கொள்வதால் , அவர் குறுகிய தேர்ச்சியை மட்டுமே பெறுகிறார் . இதனால் வேலை வாய்ப்பின்மை பெருகும் நிலை உருவாகிறது.
* கைவினைப் பொருள்களின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. ஒரு தொழிலாளி , ஒரு பொருளினை முழுவதுமாக உருவாக்கிய மன நிறைவனைப் பெறுவதில்லை.
பகுதி - ஈ
IV.கீழ்க்காணும் படத்திற்கான உற்பத்தி நிலைகளைக் குறிப்பிடுக.
i. முதன்மை நிலை உற்பத்தி
வேளாண்மை , சுரங்கம் , காடு வளர்ப்பு.
ii. இரண்டாம் நிலை உற்பத்தி
பருத்தித் தொழிற்சாலை , பொறியியல் மற்றும் கட்டுமானத்துறை
iii. மூன்றாம் நிலை உற்பத்தி
கல்வித்துறை , வங்கித்துறை , பாதுகாப்புத்துறை
************** *********** *************
விடைத்தயாரிப்பு
திருமதி.ச.இராணி அவர்கள் ,
பட்டதாரி ஆசிரியை ,
அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி ,
இளமனூர் , மதுரை.
******************* ******** **************
0 Comments