ஒப்படைப்பு - அலகு - 1 - விடைகள்
வகுப்பு: 7 பாடம்: அறிவியல்
அலகு- 1 பகுதி - அ
1.ஒரு மதிப்பெண் வினாக்கள்
1. 1 மீட்டர் என்பது யாது?
அ. 50 சென்டிமீட்டர்
ஆ. 100 சென்டிமீட்டர்
இ. 150 சென்டிமீட்டர்
ஈ. 200 சென்டிமீட்டர்
விடை : ஆ . 100 சென்டிமீட்டர்.
2. அடர்த்தியின் SI அலகு என்ன?
அ. கிலோகிராம்
ஆ. கேண்டிலா
இ. கெல்வின்
ஈ. செல்சியஸ்
விடை : அ .கிலோகிராம் / மீட்டர் 3
3. இரும்பு குண்டு பாதரசத்தில் என்னவாகும்?
அ. மூழ்கும்
ஆ. கரையும்
இ. மிதக்கும்
ஈ. எதுவும் இல்லை
விடை : இ . மிதக்கும்
4. பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரி தொலைவு எவ்வளவு?
அ. ஒளி ஆண்டு
ஆ. ஒளியின் வேகம்
இ) ஒரு வானியல் அலகு
ஈ. எதுவும் இல்லை
விடை : இ . ஒரு வானியல் அலகு
5. 1 சென்ட என்பது எத்தனை சதுர அடிக்கு சமம்.
அ. 439 ச.அடி
ஆ .436 ச.அடி
ஈ. 433 ச.அடி
இ. 643 ச.அடி
விடை : ஆ .436 ச.அடி
6. லாரியில் உள்ள கரும்பை எடைபோட பயன்படுத்தும் அலகு யாது?
அ. நிறை
ஆ.கிலோ
இ. டன்
ஈ. கிலோகிராம்
விடை : இ . டன்
7. டீ.எம்.சி என்பது எதை அளவிடப்படுகிறது?
அ. நீரின் கனஅளவு
ஆ. நிலத்தின் பரப்பு
இ. நீரின் கொதிநிலை
ஈ. நீரின் நிறை
விடை : அ . நீரின் கனஅளவு
8. ஒரு பவுன் தங்கமோதிரம் செய்ய தேவைப்படும் தங்கத்தின் அளவு?
அ . 7கி. ஆ) 8கி இ . 9கி. ஈ. 10கி
விடை : ஆ.8கி
9. நிலங்களை எந்த அளவு கொண்டு அளவிடப்படுகிறது?
அ. குவிண்டால்
ஆ. ஹெக்டேர்
இ. மீட்டர்
ஈ. டன்
விடை : ஆ. ஹெக்டேர்
10. பாதரசத்தின் அடர்த்தி எவ்வளவு?
அ. 1000 கி.கி/மீ3
ஆ) 13600 கி.கி/மீ3
இ. 10500 கி.கி/மீ 3
ஈ. 10300 கி.கி/மீ 3
விடை : ஆ) 13600 கி.கி/மீ3
பகுதி -ஆ
II. குறு வினா
1. பரப்பளவு என்றால் என்ன?
பொருள் ஒன்றின் மேற்புறப் பகுதியின் அளவு அதன் பரப்பளவு எனப்படும். பரப்பளவின் SI அலகு மீட்டர்2 ஆகும்.
2. அடர்த்தி என்றால் என்ன?
ஒரு பொருளின் அடர்த்தி என்பது ஓரலகு பருமனில் அப்பொருள் பெற்றுள்ள நிறை என்று வரையறுக்கப்படுகிறது. அடர்த்தியின் SI அலகு கிலோகிராம் / மீட்டர்3 ஆகும்.
3. அலைவு நேரம் என்றால் என்ன?
ஒரு முழு அலைவிற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அலைவு நேரம் எனப்படும்.
4. தனிஊசல் என்றால் என்ன?
கெட்டியான சிறிய உலோகக் குண்டின் மீட்சியற்ற நூலினால் கட்டித் தொங்கவிடப்பட்ட அமைப்பே தனிஊசல் எனப்படும்.
5. வீச்சு என்றால் என்ன?
ஓய்வு நிலையில் இருந்து குண்டானது இழுத்து விடப்படும் தொலைவு வீச்சு எனப்படும்.
பகுதி - இ
III . பெருவினா
1. தனிஊசல்செயல்படும்விதத்தை படத்துடன் விளக்குக.
* கெட்டியான சிறிய உலோகக் குண்டின் மீட்சியற்ற நூலினால் கட்டித் தொங்கவிடப்பட்ட அமைப்பே தனிஊசல் எனப்படும்.
* குண்டானது ஒருபுறம் சற்று இழுத்து விடப்படும் போது அது முன்னும் பின்னும் அலைவுறும்.
* குண்டானது ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் சென்று மீண்டும் அதே முனைக்குத் திரும்பினால் அது ஓர் அலைவு எனப்படும்.
* ஒரு முழு அலைவிற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அலைவு நேரம் எனப்படும்.
* ஊசல் தொங்கவிடப்படும் புள்ளிக்கும் , குண்டின் மையத்திற்கும் இடைப்பட்ட தூரம் ஊசலின் நீளம் எனப்படும்.
* ஓய்வு நிலையில் இருந்து குண்டானது இழுத்து விடப்படும் தொலைவு வீச்சு எனப்படும்.
**************** ************ **********
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
3 Comments
Thank you
ReplyDeleteThank you it was more useful
ReplyDeleteThis is very useful to study
ReplyDelete