6 - அறிவியல் - ஒப்படைப்பு - அலகு 1 - வினாக்களுக்கான விடைகள் - அளவீடுகள் / 6th - SCIENCE - ASSIGNMENNT - UNIT 1 - QUESTION & ANSWER

 

                              ஒப்படைப்பு

            வகுப்பு: 6       பாடம்: அறிவியல்

                                 அலகு-1

                                 பகுதி - அ


1.சரியான விடையைத் தேர்ந்தெடு:

1.அளவீடு என்பது ------ ------- பகுதிகளைக் கொண்டது.

அ. தரம் மற்றும் அளவு

ஆ.செயல் மற்றும் கருவி

இ.துல்லியம் மற்றும் பிழை 

ஈ) எண் மற்றும் அலகு

விடை : ஈ ) எண் மற்றும் அலகு 

2.நிறையின் மேல் செயல்படும் புவிஈர்ப்பு விசையே --------

அ.நிறை       ஆ . நீளம் 

இ . எடை      ஈ.அடர்த்தி

விடை : இ.எடை 

3.பரப்பளவின் SI அலகு

அ. m3     ஆ. m2     இ.m   ஈ. Km 

விடை : ஆ .m2


4.மீட்டர் அளவு கோலின் தடிமனை -------
ஆல் அளக்கலாம்.

அ . mm  ஆ . cm      இ ) Metre   ஈ. Km

விடை : அ . mm


5. மில்லியின் துணைப் பன்மடங்கு

அ. 1/10   ஆ. 1/100   இ .1/1000   ஈ. 1/10000

விடை : இ . 1 / 1000

6. தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவை கணக்கிட --------- கருவி பயன்படுகிறது.

அ. அம்மீட்டர்      ஆ. தெர்மோமீட்டர்
இ. வேகமானி     ஈ. ஓடோமீட்டர்

விடை : ஈ . ஓடோமீட்டர்

7. ஒரு நேனோ என்பது  --------

அ. 10-3    ஆ. 10-6     இ 10-9    ஈ.10-12

விடை : இ.10-9

8.வளைகோட்டின் நீளத்தை ------- ஐ பயன்படுத்தி அளக்கலாம்.

அ. அளவிடும் நாடா   ஆ. கவை

இ. கவை அல்லது அளவிடும் நாடா 

ஈ) கவை மற்றும் அளவிடும் நாடா இரண்டும்

விடை : ஈ . ) கவை மற்றும் அளவிடும் நாடா இரண்டும்

9.ஒரு டன் என்பது------கிலோகிராம்

அ. 100    ஆ) 1000   இ. 10     ஈ. 0.1

விடை : ஆ . 1000

10. முற்காலத்தில் மக்கள் காலத்தை அளவிடப் பயன்படுத்திய கருவி

அ. மணற்கடிகாரம்

இ. அணுக்கடிகாரம்

ஆ. மின்னணுக் கடிகாரம்

ஈ. ஊசல் கடிகாரம்

விடை : அ . மணற்கடிகாரம்

                           பகுதி - ஆ

II. குறு வினா.

1. அளவீடு -வரையறு?

                      தெரிந்த ஒரு அளவுடன் , தெரியாத ஒரு அளவை ஒப்பிடுவது அளவீடு எனப்படும். அளவீடு என்பது எண்மதிப்பு மற்றும் அலகு என இரண்டு பகுதிகளைக் கொண்டது.

2. நிறை- வரையறு?

                       நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு ஆகும். நிறையின் SI அலகு கிலோகிராம் ஆகும்.

3. ஒழுங்கற்ற பொருட்களின் பருமனை எவ்வாறு அளவிடுவாய்?

                       ஒழுங்கற்ற பொருட்களின்  பருமனை ஒரு அளவிடும் குவளை மற்றும் நீரைக்கொண்டு அளவிடலாம்.

4. நீளம் -வரையறு?

                         ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு நீளம் எனப்படும். நீளத்தின் SI அலகு மீட்டர் ஆகும்.

5. மின்னனு தராசின் பயன் யாது?

                          உணவு , மளிகைப் பொருள்கள் , ஆபரணங்கள் மற்றும் வேதிப்பொருள்களின் துல்லியமான எடையைக் கணக்கிட மின்னணுத் தராசு பயன்படுகிறது.


                                         பகுதி - இ

III. பெரு வினா.

1. வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.

                              ஒரு தாளில் AB என்ற ஒரு வளைகோடு வரைந்தேன். அந்த வளைகோட்டின் மீது ஒரு கம்பியை வைத்தேன். கம்பியானது வளைகோட்டின் அனைத்துப் பகுதியையும் தொடுவதை உறுதி செய்தேன். வளைகோட்டின் தொடக்கப் புள்ளியையும், முடிவுப் புள்ளியையும் கம்பியின் மீது குறித்தேன். இப்பொழுது கம்பியை நேராக நீட்டினேன். குறிக்கப்பட்ட தொடக்கப் பள்ளிக்கும், முடிவுப்  புள்ளிக்கும் இடையிலான தொலைவை அளவுகோல் அல்லது அளவு நாடாவைக் கொண்டு அளவிட்டேன். இதுவே வளைகோட்டின் நீளமாகும்.

2, வளைகோட்டின் நீளத்தை கவையைப் பயன்படுத்தி அளவிடுதல் :

                  ஒரு தாளின் மீது AB என்ற வளைகோட்டினை வரைந்தேன். கவையின் இரு முனைகளையும் 0.5 செ.மீ. அல்லது 1 செ.மீ. இடை வெளி உள்ளவாறு பிரித்தேன். வளைகோட்டின் ஒரு முனையில் கவையை வைத்து அளவீட்டைத் தொடங்கினேன். அவ்வாறு மறுமுனை வரை அளந்து  குறித்தேன். வளைகோட்டின் மேல் சம அறவு பாகங்களாகப் பிரித்தேன். குறைவாக  உள்ள கடைசிப் பாகத்தை அளவுகோல் பயன்படுத்தி அளவிட்டேன்.

      வளைகோட்டின் நீளம் =  ( பாகங்களின் எண்ணிக்கை x ஒரு பாகத்தின் நீளம்) + மீதம் கடைசி பாகத்தின் நீளம். இதுவே வளைகோட்டின் நீளமாகும்.

                               பகுதி - ஈ

IV. செயல்பாடு

பொதுத் தராசு ஒன்றினைத் தயாரித்து, அவை வேலை செய்யும் விதத்தினை விளக்கவும்.        

************     **************    *************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

0 Comments