ஒப்படைப்பு - விடைகள்
வகுப்பு - 10
பாடம்:தமிழ்
இயல் - 3 பண்பாடு
பகுதி - அ
1.ஒரு மதிப்பெண்வினாக்கள்
1. விருந்தொடு உண்- இத்தொடரில் இடம்பெற்றுள்ள வேற்றுமை உருபு எது?
அ) ஐ
ஆ) இன்
இ) ஒடு
ஈ) ஆல்
விடை : இ ) ஒடு
2. உபசரித்தல் என்பதற்கான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ) உணவிடுதல்
ஆ) உரையாடுதல்
ஆ) தங்கவைத்தல்
ஈ) விருந்தோம்பல்
விடை : ஈ ) விருந்தோம்பல்
3. உயர்பண்பு என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்க
அ) பண்புத் தொகை
ஆ) வினைத்தொகை
இ) வேற்றுமைத்தொகை
ஈ) அன்மொழித்தொகை
விடை : ஆ) வினைத்தொகை
4. விருந்தே புதுமை எனக்கூறியவர் யார்?
அ) ஔவையார்
ஆ) தொல்காப்பியர்
இ) கம்பர்
ஈ) இளங்கோவடிகள்
விடை : ஆ ) தொல்காப்பியர்
5. தனித்து உண்ணாமை என்பது
அ) தமிழர் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை செயல்
ஆ) உணவளிக்கும் முறை
இ) விருந்தினரைச் சிறப்பிக்கும் செயல்
ஈ) விருந்தினரை வரவேற்றல்
விடை : அ ) தமிழர் விருந்தோம்பல் பண்பின் அடிப்படைச் செயல்.
6. Classical Literature என்பது
அ) வட்டார இலக்கியம்
ஆ) நாட்டுப்புற இலக்கியம்
இ) செவ்விலக்கியம்
ஈ) பண்டைய இலக்கியம்
விடை : இ ) செவ்விலக்கியம்
7. செப்பல் என்பதன் பொருள்
அ) வருதல்
ஆ) அழுதுதல்
இ) சிந்துதல்
ஈ) உரைத்தல்
விடை : ஈ ) உரைத்தல்
8. கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல்
அ) குறுந்தொகை
ஆ) திருமுருகாற்றுப்படை
இ) மலைபடுகடாம்
ஈ) நற்றிணை
விடை : இ ) மலைபடுகடாம்
9. நும் இல் போல நில்லாது புக்கு -இவ்வடியில் இல் என்பதன் பொருள் யாது?
அ) இலவம் ஆ) இலை
இ) இல்லம் ஈ) இல்லை
விடை : இ ) இல்லம்
10. பெயரெச்சத் தொடரை தேர்தெடுக்க
அ) கேட்டவர் பாடல் ஆ)கேட்டபாடல்
இ) கேட்டுப் பாடினார் ஈ) கேட்டார் பாடினார்
விடை : ஆ ) கேட்ட பாடல்
பகுதி - ஆ
II. குறுவினா
11. குடும்பத் தலைவியின் விருந்தோம்பல் பண்பு குறித்து நற்றிணை குறிப்பிடுவது யாது?
விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு . இதை ,
" அல்லில் ஆயினும் விருந்து வரின்
உவக்கும் "
- என்று நற்றிணை குறிப்பிடுகிறது.
12. பெரியபுராணம் வழியே புலப்படுத்தப்படும் விருந்தோம்பல் பற்றிய செய்தியைக் கூறுக.
இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை. எனவே , அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து வந்து , பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது.
13. அதிவீரராம பாண்டியர் - குறிப்பு வரைக.
* முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.
* தமிழ்ப்புலவராகவும் திகழ்ந்தார்.
* சீவலமாறன் என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு.
* காசிக்காண்டம் , வெற்றி வேற்கை , நைடதம் , லிங்கபுராணம் , வாயுசம்கிதை , திருக்கருவை அந்தாதி , கூர்ம புராணம் ஆகிய நூல்கள் இவர் இயற்றியவை.
14. தொகாநிலைத் தொடர் என்றால் என்ன?
ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே , பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
15. வினையெச்சத் தொடரை எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக.
முற்றுப் பெறாத வினை , வினைச்சொல்லைத் தொடர்வது வினையெச்சத்தொடர் ஆகும்.
பாடி மகிழ்ந்தனர் - ' பாடி ' என்னும் எச்சவினை ' மகிழ்ந்தனர் ' என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.
பகுதி-இ
III. சிறுவினா
16. விருந்தோம்பல் குறித்து காசிக்காண்டம் கூறும் ஒன்பது நல்லொழுக்கங்களை விவரிக்க.
> விருந்தினரைக் காணின் வியத்தல்
> இனிமையாகப் பேசுதல்
> முகமலர்ச்சியுடன் நோக்குதல்
> வருக வருக என வரவேற்றல்
> அவர் எதிரில் நிற்றல்
> மனம் மகிழும்படி பேசுதல்
> அவர் அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல்
> விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை தொடர்ந்து செல்லுதல்
> அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல்.
ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் பற்றிக் காசிக்காண்டம் உணர்த்தும் செய்திகளாகும். -
17. பரிசில் பெற்ற கூத்தர் மற்ற கூத்தருக்கு ஆற்றுப்படுத்தும் செய்திகளை விளக்குக.
* பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்;
இரவில் சேர்ந்து தங்குங்கள்
* எரியும் நெருப்பைப் போல ஒளிரும்
பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு
அணிந்துகொள்ளுங்கள்.
* சிவந்த பூக்கள்கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்
* அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும்
கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில்
சிற்றூரை அடையுங்கள்.
* அங்குள்ளவர்களிடம், பகைவரைப்
பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும்
மானமும் வெற்றியும் உடைய நன்னனின்
கூத்தர்கள்' என்று சொல்லுங்கள்.
* அதன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்குள்
போவது போலவே அவர்களுடைய
வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள்.
* உறவினர் போலவே அவர்கள் உங்களுடன்
பழகுவர்.
* நீண்ட வழியைக் கடந்து வந்த
உங்களின் துன்பம்தீர இனிய சொற்களைக்
கூறுவர்.
* அங்கே, நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்."
************* ************* ************
வாழ்த்துகளுடன் ,
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் ,
இளமனூர் , மதுரை.
**************** *************** ***********
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ************
0 Comments