வகுப்பு - 10 , தமிழ்
இயல் 3 - கற்கண்டு
தொகாநிலைத் தொடர்கள் - பகுதி - 3
6 ) வேற்றுமைத்தொடர்
7 ) இடைச்சொல் தொடர்
8 ) உரிச்சொல் தொடர்
9 ) அடுக்குத்தொடர்
************** ************** ***********
வணக்கம் நண்பர்களே ! இன்றைய வகுப்பில் நாம் இயல் மூன்றில் கற்கண்டாக அமைந்துள்ள தொகாநிலைத் தொடர்கள் பற்றிக் காண்போம். இதை மூன்று பகுதிகளாகக் காட்சிப் பதிவு விளக்கத்துடன் கண்டு வருகின்றோம்..
முதல் பதிவில் தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன என்பது பற்றியும் , எழுவாய்த்தொடர் என்றால் என்ன என்பது பற்றியும் விரிவாகக் கண்டோம்.
இரண்டாவது பதிவில் விளித்தொடர் , வினைமுற்றுத்தொடர் , பெயரெச்சத் தொடர் , வினையெச்சத் தொடர் பற்றி விரிவாகக் கண்டோம்.
மூன்றாவது பதிவான இப்பதிவில் வேற்றுமைத்தொடர் , இடைச்சொல் தொடர் ,உரிச்சொல் தொடர் , அடுக்குத்தொடர் பற்றிக் காண்போம்.
முதலில் நம்முடைய பெரும்புலவர். திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தைக் காண்போமா ?
6. வேற்றுமைத்தொடர்
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.
கட்டுரையைப் படித்தாள்.
இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
அன்பால் கட்டினார் - (ஆல்) மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
அறிஞருக்குப் பொன்னாடை (கு)
நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
7. இடைச்சொல் தொடர்
இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.
மற்றொன்று - மற்று + ஒன்று. "மற்று" என்னும் இடைச்சொல்லை அடுத்து "ஒன்று" என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.
8. உரிச்சொல் தொடர்
உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.
சாலச் சிறந்தது "சால" என்பது உரிச்சொல். அதனைத்தொடர்ந்து "சிறந்தது" என்ற சொல்நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகிறது.
9. அடுக்குத் தொடர்
ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.
வருக! வருக! வருக! ஒரே சொல்
உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.
************* *************** *************
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
0 Comments