பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - திருக்குறள் - கண்ணோட்டம் - முன்னுரிமைப் பாடத்திட்டம் 2021 - 22 / 10th TAMIL - THIRUKKURAL - KANNOTTAM - REDUCED SYLLABUS - 2021 - 22

 

              பத்தாம் வகுப்பு - தமிழ் 

    இயல் - 3 , வாழ்வியல் இலக்கியம் 

                         திருக்குறள் 

                     கண்ணோட்டம்


****************    ***********   ***********

              வணக்கம் அன்பு நண்பர்களே !  வாழ்வியல் இலக்கியமாம் திருக்குறளை நாம் கடந்த நான்கு   வகுப்புகளில் கற்றோம் . இன்னும் மூன்றுங  வகுப்புகளில் திருக்குறள்தான் கற்க உள்ளோம்.

            இன்றைய வகுப்பில் கண்ணோட்டம் என்ற அதிகாரத்திலுள்ள  மூன்று  குறட்பாக்களுக்கான விளக்கத்தைக் காண்போம்.

          முதலில் நம்முடைய பெரும்புலவர்.திரு. மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தைக் காட்சிப் பதிவில் காண்போம்.




காட்சிப் பதிவில் கண்ட குறட்பாக்களுக்கான பொருளை வரி வடிவத்தில் காண்போம்.

11 ) பண்என்னாம் பாடற் கியைபின்றேல்  கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

பொருள் : 

                  பாடலோடு பொருந்தவில்லை எனில் இசையால் என்ன பயன் ? அது போலவே இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் என்ன பயன் ? 

அணி : எடுத்துக்காட்டு உவமையணி

12 ) கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்

குரிமை உடைத்திவ் வுலகு.

பொருள் : 

                  நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையாதாகும்.

13 ) பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

பொருள் : 

                  விரும்பத் தகுந்த இரக்க  இயல்பைக் கொண்டவர்கள் , பிறர் நன்மை கருதித் தமக்கு நஞ்சைக் கொடுத்தாலும் அதனை உண்ணும் பண்பாளர் ஆவார்.

**************     ***************   **********

Post a Comment

0 Comments