பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புவியியல் - ஜூலை மாத ஒப்படைப்பு 2 - அலகு 2 - இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் / 10th SOCIAL SCIENCE - JULY ASSIGNMENT 2 -

 


         ஜூலை மாத ஒப்படைப்பு - 2 

                         வகுப்பு 10

        சமூக அறிவியல் (புவியியல்)

                         அலகு -2 

இந்தியா-காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

                    பகுதி - அ

1.ஒருமதிப்பெண்வினா

1.புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்லவளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் --------  என்றஅளவில் வெப்பநிலை குறைகிறது,

(அ)7.5•C                 ஆ)6.5°C

(இ)5.5°C                    ஈ)9.5°C

விடை : ஆ ) 6.5°C

2.கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு -------  காற்றுகள் உதவுகின்றன

(அ )   லூ              ஆ)நார்வெஸ்டர்ஸ்

 இ)  மாஞ்சாரல்        (ஈ)ஜெட் காற்றோட்டம்

விடை : இ) மாஞ்சாரல் 

3.பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

(அ)அயன மண்டல பசுமைமாறாக்காடுகள்

 (ஆ) இலையுதிர்க்காடுகள்

(இ) மாங்குரோவ்காடுகள்

(ஈ) மலைக்காடுகள்

விடை :  ஆ ) இலையுதிர்க்காடுகள்

4.சேஷாசலம் உயிர்க் கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ----------

(அ) தமிழ்நாடு

(ஆ)ஆந்திரப்பிரதேசம்

(இ)மத்தியப்பிரதேசம்

(ஈ) கர்நாடகா

விடை :  ஆ ) ஆந்திரப்பிரதேசம்

5.ஒரே அளவு மழை பெறும் இடங்களை இணைக்கும் கோடு -------  ஆகும்

(அ) சமவெப்பகோடுகள்

(ஆ) சமமழைக்கோடுகள்

(இ) சமஅழுத்தக்கோடுகள்

(ஈ) அட்சக்கோடுகள்

விடை :  ஆ ) சமமழைக்கோடுகள்

                      பகுதி - ஆ

II . குறுவினா

1.வானிலை மற்றும்காலநிலைவேறுபடுத்துக

வானிலை 

* ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையைக் குறிக்கும்.

* ஓர் இடத்தின் குறுகிய கால வளி மண்டலத்தின் வெப்பம் , மேகமூட்டம் , வறட்சி ,சூரிய ஒளி , காற்று , மழை ஆகிய நிலையைக் குறிப்பது.

* இது ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும்.

காலநிலை 

* ஒரு பகுதியின் நீண்ட கால வானிலை சராசரியே காலநிலையாகும்.

* காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் 30 - 35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

* இது மாறாதது.


2.வடகிழக்கு பருவக்காற்றுமற்றும் தென்மேற்குபருவக்காற்றுவேறுபடுத்துக.

வடகிழக்குப் பருவக்காற்று

* வடகிழக்குப் பருவக்காற்று அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வீசுகிறது.

* வடகிழக்குப் பருவக்காற்று நிலப்பகுதியிலிருந்து வீசுகிறது.

* இக்காற்று சோழ மண்டலக் கடற்கரைக்கு நல்ல மழையைக் கொடுக்கிறது.

* இந்தியாவின் மொத்த மழைப்பொழிவில் 25% க்கும் குறைவாக வடகிழக்குப் பருவக்காற்றினால் கிடைக்கிறது.


தென்மேற்குப் பருவக்காற்று

*தென்மேற்குப் பருவக்காற்று ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசுகிறது.

* தென்மேற்குப் பருவக்காற்று இந்தியப் பெருங்கடலிலிருந்து நிலப்பகுதியை நோக்கி வீசுகிறது.

* இக்காற்று இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கும் மற்றும் அநேக பகுதிகளுக்கும் மழையைக் கொடுக்கிறது.

* இந்தியாவின் மொத்த மழைப்பொழிவில் 75% தென்மேற்குப் பருவக்காற்றினால் கிடைக்கிறது.


3.மலைப்பகுதிகள் சமவெளிகளைவிட குளிரானவை காரணம்கூறுக?

                புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறைகிறது. வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.5 டிகிரி C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது.

                    பகுதி - இ 

III ) சிறுவினா 

1 ) பருவக்காற்று குறித்து குறிப்பு வரைக.

           " மான்சூன் " என்ற சொல் " மௌசிம் " என்ற அரபுச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பருவகாலம்  ஆகும்.பருவ காலம் என்ற சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரபு மாலுமிகளால் இந்தியப் பெருங்கடல் கடற்கரைப் பகுதிகளில் குறிப்பாக அரபிக்கடலில் பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளை குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.


2 ) இந்திய வனவிலங்கு வாரியம் பற்றி குறிப்பிடுக.

          1952 ஆம் ஆண்டு வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்க நிறுவப்பட்ட அமைப்பு இதுவாகும்.


3 ) இந்தியாவின் நான்கு பருவகாலங்களைக் குறிப்பிடுக.

   * குளிர்காலம் - ஜனவரி முதல் பிப்ரவரி                                            வரை

   * கோடைகாலம் - மார்ச் முதல் மே வரை 

   * தென்மேற்குப் பருவக்காற்று காலம் - ஜூன் முதல் செப்டம்பர் வரை

    * வடகிழக்கு பருவக்காற்று காலம் - அக்டோபர் முதல் டிசம்பர் வரை .


                          பகுதி - ஈ 

IV ) பெருவினா

1 ) தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.

தென்மேற்குப் பருவக்காற்று :

இந்திய காலநிலையின் முக்கிய அம்சமாக தென்மேற்குப் பருவக்காற்று விளங்குகியது.

> பருவக்காற்று பொதுவாக இந்தியாவின் தென்பகுதியில் ஜூன் முதல் வாரம் தொடங்குகிறது. அனைத்து இந்தியப் பகுதிகளிலும் ஜூன் 15ல் முன்னேறுகிறது.

> தென்மேற்குப் பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 40°C வரை உயருகிறது. இப்பருவக்காற்றின் இடி, மின்னலுடன் கூடிய துவக்கம் 'பருவமழை வெடிப்பு' எனப்படுகிறது. இது இந்தியாவின் வெப்புநிலையை பெருமளவு குறைக்கிறது.

> இக்காற்று இந்தியாவின் தென்முனையை அடையும் பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிக்கிறது.

> ஒரு கிளை அரபிக்கடல் வழியாகவும் மற்றாரு கிளை வங்காள விரிகுடா வழியாகவும் வீசுகிறது.

அரபிக்கடல் கிளை: தென்மேற்குப் பருவக்காற்றின் அரபிக்கடல கிளை மேற்கத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப் பொழிவைத் தருகிறது. வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையால் தடுக்கப்பட்டு வடஇந்தியா முழுவதும் கனமழையைத் தோற்றுவிக்கிறது. ஆரவல்லி மலைத் தொடர் காற்று வீசும் திசைக்கு இணையாக அமைந்துள்ளதால் இராஜஸ்தான் மற்றும் வடஇந்தியாவின் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவைத் தருவதில்லை.

வங்காள விரிகுடா கிளை: வங்காள விரிகுடா கிளை. வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது. இது காசி காரோ. ஜெயந்தியா குன்றுகளால் தடுக்கப்பட்டு மேகாலயாவில் உள்ள மௌசின்ராமில் மிகக் கனமழையைத் தருகிறது. இக்காற்று பின்னர் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும் போது மழைப் பொழிவின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.

> இந்தியாவின் ஒட்டு மொத்த மழைப்பொழிவில் 75% மழைப் பொழிவானது இப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது.

***************     **************   ************

2 ) இந்தியக் காடுகள் பற்றி விவரிக்கவும்.

                        காலநிலை. மண் வகைகள், மழைப்பொழிவு. நிலத்தோற்ற்கள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்திய காடுகள் பின்வருமாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன. அவை.

> அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்

> அயன மண்டல இலையுதிர் காடுகள் அயன மண்டல வறண்ட காடுகள்.

> மலைக்காடுகள் (கிழக்கு இமயமலை/மேற்கு இமயமலை காடுகள்)

> அல்பைன் காடுகள்

> ஓத அலைக்காடுகள்

> கடற்கரையோரக் காடுகள்

> நதி வனப்பகுதி அல்லது ஆற்றங்கரைக் காடுகள்.

இந்த எட்டு வகைக் காடுகளில் ஒரு சில பற்றி விரிவாகக் காண்போம்.

அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்:

          ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீ.க்கு மேலும். 22°Cக்கு அதிகமான வெப்பநிலை உள்ள பகுதிகளிலும் இக்காடுகள் காணப்படுகின்றன.

காணப்படும் இடங்கள்: கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா. அந்தமான் நிக்கோபர் தீவுகள். அஸ்ஸாம். மேற்கு வங்காளம். நாகலாந்து மற்றும் திரிபுரா.

காணப்படும் மரங்கள்: இரப்பர். எபனி. ரோஸ் மரம். தென்னை. மூங்கில். சின்கோனா மற்றும் சிடார்.

அயன மண்டல இலையுதிர்க்காடுகள்;

             ஆண்டு மழைப்பொழிவு 100 முதல் 200 செமீ வரை உள்ள பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன. இக்காடுகள் கோடைகாலத்தில் இலைகளை உதிர்த்து விடுகின்றன.

காணப்படும் இடங்கள்: பஞ்சாப், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய இந்தியா, மத்தியப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட்.

காணப்படும் மரங்கள்: தேக்கு, சால், சந்தன மரம். ரோஸ் மரம், குசம், மாகு, பாலாங், ஆம்லா மற்றும் மூங்கில்.

அயன மண்டல வறண்டக்காடுகள்: 

           ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ. முதல் 100 செ.மீ. வரை உள்ள பகுதிகளில் அக்காடுகள் காணப்படுகின்றன.

காணப்படும் இடங்கள் : 

           கிழக்கு இராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம், மத்தியப்
பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா.

காணப்படும் மரங்கள்: 

           இலுப்பை. ஆலமரம், ஆவாரம்பூ மரம், பலா, மஞ்சக்கடம்பு, கருவேலம்
மற்றும் மூங்கில்.

மலைக்காடுகள்:

i) கிழக்கு இமயமலைக்காடுகள்:

        200 செ.மீ.க்கு அதிகமாக மழைப்பொழிவு உள்ள இடங்களில் இக்காடுகள் காணப்படுகின்றன.

காணப்படும் இடங்கள் : 

            வடகிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ளகிழக்கு இமயமலைச்சரிவுகளில்
இக்காடுகள் காணப்படுகின்றன.

காணப்படும் மரங்கள்: 

            சால். ஓக், லாரஸ், அமுரா, செஸ்ட்நெட் மற்றும் சினனமன்.

ii) மேற்கு இமயமலைக்காடுகள்: 

             மிதமான மழைப்பொழிவு உள்ள இடங்களில் இக்காடுகள்
காணப்படுகின்றன.

காணப்படும் இடங்கள்: 

           ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்ரகாண்ட். காணப்படும் மரங்கள் சிறு புதர் செடிகள், சிறு மரங்கள், சிர், தியோதர், நீல பைன், பாப்புலர். பிர்ச் மற்றும் எல்டர்.

அல்பைன் காடுகள்:

காணப்படும் இடங்கள்: 

           இமய மலையின் 2400 மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகளில் இக்காடுகள்
காணப்படுகின்றன.

காணப்படும் மரங்கள் : 

     ஓக். சில்வர் பிர், பைன் மற்றும் ஜூனிபர்.

ஒத அலைக்காடுகள்:

காணப்படும் இடங்கள்: 

      டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகள். கங்கை. பிரம்ம புத்ரா, மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டாப் பகுதிகளில்
காணப்படுகின்றன. இங்குள்ள காடுகள் மாங்குரோவ் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

*****************      ************    ***********

3 ) காலநிலையைப் பாதிக்கும் காரணிகளைப் பட்டியலிட்டு விளக்குக.

 காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்

அட்சங்கள் கடல் மட்டத்திலிருந்து உயரம், கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு, பருவக்காற்று, நிலத்தோற்றம், ஜெட் காற்றுகள் போன்றவை இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகளாகும்.

1 ) அட்சங்கள்

        இந்தியா 8°4' வட அட்சம் முதல் 376' வட அட்சம் வரை அமைந்துள்ளது. 23°30' வட அட்சமான கடகரேகை நாட்டை இருசமபாகங்களாக பிரிக்கிறது. கடகரேகைக்கு தெற்கே அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் அதிகவெப்பமும் மிக குளிரற்ற சூழலும் நிலவுகிறது. கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகள் மித வெப்ப காலநிலையைக் கொண்டுள்ளது.

2 ) உயரம்

            புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு மீட்டர் உயரத்திற்கும் 6.500 என்ற அளவில் வெப்பநிலைகுறைகிறது. 

3 ) கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு

       இந்தியாவின் பெரும்பகுதி குறிப்பாக தீபகற்ப இந்தியா கடலிலிருந்து வெகுதொலைவில் இல்லை. இதன் காரணமாக இப்பகுதி முழுவதும் நிலவும் காலநிலை கடல் சார் ஆதிக்கத்தை கொண்டுள்ளது. இப்பகுதியில் குளிர்காலம் குளிரற்று காணப்பட்டு வருடம் முழுவதும் சீரான வெப்பநிலையைக் கொண்டுள்ளது.

4 ) பருவக்கால காற்று

       இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கிய காரணி பருவக்கால காற்றாகும். இவை பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளாகும்.

5 ) நிலத்தோற்றம்

             இந்தியாவின் நிலத்தோற்றம், காலநிலையின் வடஇந்தியா முக்கிய கூறுகளான வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம், காற்றின் திசை மற்றும் மழையளவை பெருமளவில் பாதிக்கின்றது.

6 ) ஜெட் காற்றோட்டங்கள்,

          வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் " ஜெட்காற்றுகள்" என்கிறோம். ஜெட் காற்றோட்ட கோட்பாட்டின் படி, துணை அயன  மேலை காற்றோட்டம் வடபெரும் சமவெளிகளிலிருந்து திபெத்திய பீடபூமியை நோக்கி இடம்பெயர்வதால் தென்மேற்கு பருவக்காற்று உருவாகின்றது.கீழை ஜெட் காற்றோட்டங்கள் மற்றும் பின்னடையும் தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் வெப்ப மண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன.

**************    ******************   **********

விடைத்தயாரிப்பு :

திருமதி.ச.இராணி அவர்கள் , 

பட்டதாரி ஆசிரியை , 

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் ,  மதுரை.

**************    ******************   **********

வாழ்த்துகளுடன் , 

மு.மகேந்திர பாபு  , தமிழாசிரியர் , 

இளமனூர் , மதுரை.

****************   ***************   ***********

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ************

Post a Comment

0 Comments