10 ஆம் வகுப்பு - தமிழ் - ஒப்படைப்பு 2 - இயல் 2 - வினாக்களும் விடைகளும் - ( முன்னுரிமைப் பாடத்திட்டம் 2021 - 22 ) / 10th TAMIL -ASSIGNMENT 2 - EYAL 2 - REDUCED SYLLABUS - QUESTION & ANSWER

 

 


                           பத்தாம் வகுப்பு

                    தமிழ்  -    ஒப்படைப்பு - 2

              இயல் 2 - வினா & விடைகள்

( பள்ளிக் கல்வித்துறை வழங்கிய முன்னுரிமைப் பாடத்திட்டத்தின் ( 2021 - 22 ) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு வினாக்களும் விடைகளும் . ) 




                                  பகுதி-1

I . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.'பாட்டுக்கொரு புலவன்' எனப் பாராட்டப்படுபவர்

அ.பாரதிதாசன்

ஆ.பாரதியார்

இ.வாணிதாசன்

ஈ.தேசிக விநாயகம்.

விடை : ஆ ) பாரதியார் 

2.யாப்பைத் தவிர்த்து உரைநடையும் கவிதையும் இணைந்த வடிவம்

அ.மரபுக்கவிதை

ஆ.சந்தக்கவிதை

இ.வசனகவிதை

ஈ.எதுவுமில்லை

விடை : இ ) வசன கவிதை

3:'புதுக்கவிதையின் முன்னோடி' எனப்படுபவர் யார்?

அ.பாரதியார்

ஆ.ந.பிச்சமூர்த்தி

இ.வைரமுத்து

ஈ.மு.மேத்தா

விடை : அ ) பாரதியார்

4.பொருத்தமற்றதைத் தெர்ந்தெடு.

அ.பாஞ்சாலி சபதம்

ஆ.பாண்டியன் பரிசு

இ.பாப்பா பாட்டு

ஈ.குயில் பாட்டு

விடை : ஆ ) பாண்டியன் பரிசு


5.'மயல்' என்பதன் பொருள்.

அ.பறவை

ஆ.மயக்கம்

இ.உயிர்வளி

ஈ.காற்று

விடை : ஆ ) மயக்கம்

6."உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்"
-இவ்வரிகளில் அமைந்துள்ள நயங்கள்

அ.உருவகம், எதுகை

ஆ.மோனை,எதுகை

இ.முரண், இயைபு

ஈ.உவமை,எதுகை

விடை : ஆ ) மோனை , எதுகை

7.தொகைநிலைத்தொடர் எத்தனை
வகைப்படும்?

அ.நான்கு                 ஆ.ஆறு

இ.மூன்று                   ஈ.ஐந்து

விடை : ஆ ) ஆறு

8.'மதுரை சென்றார்' என்பது எவ்வகைத்
தொகைநிலைத்தொடர்?

அ.வினைத்தொகை     ஆ.பண்புத்தொகை

இ.வேற்றுமைத்தொகை  ஈ.உம்மைத்தொகை

விடை : இ ) வேற்றுமைத்தொகை

9.இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்குப் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

அ.மார்கழித்திங்கள்     ஆ.சாரைப்பாம்பு

இ.வெண்டைக்காய்       ஈ.மோர்க்குழம்பு

விடை : ஈ ) மோர்க்குழம்பு 

10.உவமைத்தொகை பயின்று
வந்துள்ள தொடர்

அ.அன்புச்செல்வன்

ஆ. செங்காந்தள்

இ.மல்லிகைப்பூ

ஈ.தங்கமீன்கள்

விடை :  ஈ ) தங்க மீன்கள்

                                பகுதி - 2

சுருக்கமாக விடை தருக

11.பாரதியார் இயற்றிய நூல்களில்
நான்கு கூறுக.

*குயில் பாட்டு

* கண்ணன் பாட்டு 

* பாப்பா பாட்டு 

* புதிய ஆத்திசூடி

12.வசன கவிதை - குறிப்பு வரைக.

             உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது.

             வசன கவிதை தமிழில் பாரதியாரால் அறிமுகப் படுத்தப்பட்டது.

13.காற்று மாசுபடுவதைத் தடுக்க
ஏதேனும் இரண்டு வழிகளைக் கூறுக.

* மரங்கள் அதிக அளவில் நட்டுவைத்துப் பராமரிக்க வேண்டும்.

* மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்த வேண்டும்.

14.கீழ்க்காணும் தொகைநிலைத்
தொடர்களை விரித்து எழுதுக

அ.தமிழ்த்தொண்டு - தமிழுக்குச் செய்யும் தொண்டு

ஆ.முத்துப்பல் - முத்துப்போன்ற பல்

15.வண்ணமிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.
ஆடுமாடு மேய்த்தல் முல்லைநில
மக்களின் தொழிலாகும்.

ஆடுமாடு - உம்மைத்தொகை

முல்லைநில - இருபெயரொட்டுப் பண்புத்தொகை.

                            பகுதி-3

16.தொகைநிலைத் தொடர்களை
எடுத்துக்காட்டுடன் எழுதுக.

     தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.

1 ) வேற்றுமைத்தொகை 

         கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்தால் அது வேற்றுமைத் தொகை எனப்படும். 

எ.கா . மதுரை சென்றார்.

     இத்தொடர் மதுரைக்குச் சென்றார் என விரிந்து நின்று பொருள் தருகிறது.

2 ) வினைத்தொகை 

          காலம் காட்டும் இடைநிலையும் , பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க , வினைப்பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது வினைத்தொகை எனப்படும்.

எ.கா. வீசுதென்றல் , கொல்களிறு

3 ) பண்புத்தொகை 

         நிறம் , வடிவம் , சுவை , அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் ' மை ' என்னும் பண்பு விகுதியும் , ஆகிய , ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

எ.கா . 

செங்காந்தள் - செம்மையாகிய காந்தள்.

4 ) உவமைத்தொகை 

             உவமைக்கும் பொருளுக்கும் ( உவமேயம் ) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.

எ.கா 

மலர்க்கை - மலர் போன்ற கை

5 ) உம்மைத்தொகை 

            இரு சொற்களுக்கு இடையிலும் , இறுதியிலும் ' உம் ' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத் தொகையாகும்.

எ.கா. அண்ணன் தம்பி 

6 ) அன்மொழி்த்தொகை 

               வேற்றுமை , வினை , பண்பு , உவமை , உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித்தொகையாகும் .

எ.கா .    சிவப்புச் சட்டை பேசினார்.

17.காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.




***************    ****************  ***********

வினா உருவாக்கம்

திரு.மணி மீனாட்சி சுந்தரம் , 

தமிழாசிரியர் , 

அ.மே.நி.பள்ளி , சருகுவலையப்பட்டி , 

மதுரை .

**************      **************    ************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ********

Post a Comment

0 Comments