ஒப்படைப்பு விடைகள்
வகுப்பு - 10 அறிவியல்
அலகு -12
தாவர உள்ளமைப்பியல் மற்றும்
தாவர செயலியல்
பகுதி -- அ
I . ஒரு மதிப்பெண் வினாக்கள்
1.தாவர உள்ளமைப்பியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அ) சாகஸ்
ஆ) நெகமய்யா க்ரூ
இ) மெல்வின் கால்வின்
ஈ) C.N.R. ராவ்
விடை: ஆ) நெகமய்யா க்ரூ
2. அமைப்பு மற்றும் தோற்றத்தில் ஒன்றுபட்ட அல்லது வேறுபட்ட ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும் செல்களின் தொகுப்பிற்கு என்று -------- பெயர்.
அ) உறுப்பு மண்டலம்
ஆ) வாஸ்குலார் கற்றை
இ) திசுக்கள்
ஈ) பெரிசைக்கிள்
விடை: இ) திசுக்கள்
3. புறத்தோல் அடுக்கில் காணப்படும் புறத்தோல் துளைகளின் பெயர் என்ன?
அ) ஸ்டோமேட்டா ஆ) கியூட்டிக்கிள்
இ) டிரைக்கோம் ஈ) ஸ்டீல்
விடை: அ) ஸ்டோமேட்டா
4. சைலமும், புளோயமும் வாஸ்குலார் கற்றையில் வெவ்வேறு ஆரங்களில் அமைந்துள்ள தாவரப்பகுதி எது?
அ ) வேர் ஆ) தண்டு
இ ) இலை ஈ) மலர்
விடை: அ) வேர்
5. சைலமும், புளோயமும் ஒரே ஆரத்தில் ------------- இல் அமைந்துள்ளது.
அ) ஆரப்போக்கு வாஸ்குலார் கற்றை
ஆ) ஒருங்கிணைந்த வாஸ்குலார் கற்றை
இ) சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
ஈ) புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை
விடை:
ஆ) ஒருங்கிணைந்த வாஸ்குலார் கற்றை
பகுதி - ஆ
II. குறு வினா
6.திசுக்கள் என்றால் என்ன?
அமைப்பு மற்றும் தோற்றத்தில் ஒன்றுபட்ட அல்லது வேறுபட்ட ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும் செல்களின் தொகுப்பே 'திசுக்கள்' எனப்படும்.
1 Comments
Free
ReplyDelete