10 - சமூக அறிவியல் - புவியியல் ஒப்படைப்பு - அலகு 1 - விடைகள் / 10th SOCIAL SCIENCE - ASSIGNMENT - UNIT 1 - QUESTION & ANSWER

 

             ஒப்படைப்பு   -  விடைகள் 

           பத்தாம் வகுப்பு -  சமூக அறிவியல் 

                                புவியியல்

          அலகு -1 இந்தியா நிலத்தோற்றம் 

                     மற்றும் வடிகாலமைப்பு

                               பகுதி-அ

1. ஒரு மதிப்பெண் வினாக்கள்:

1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்----

(அ) 2500கி.மீ   ஆ) 2933 கி.மீ 

இ) 3214 கி.மீ      ஈ ) 2814

விடை :  இ ) 3214

2. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு  -------

(அ) நர்மதா         ஆ) கோதாவரி

(இ) கோசி             ஈ) தாமோதர்

விடை  :  இ ) கோசி 

3. மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்ட பகுதி ------   என அழைக்கப்படுகிறது.

(அ) கடற்கரை         ஆ) தீபகற்பம்

(இ) தீவு                (ஈ) நீர்சந்தி

விடை :  ஆ ) தீபகற்பம்

4. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்

(அ) ஊட்டி           ஆ) ஆனைமுடி 

இ) தொட்டபெட்டா       (ஈ) ஜிண்டாகடா

விடை :  ஆ ) ஆனைமுடி

5.பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி  ---------

(அ) பாபர்         ஆ) தராய் 

இ) பாங்கர்         (ஈ) காதர்

விடை :  இ ) பாங்கர்

பொருத்துக:-

1.சாங்போ  --   பிரம்மபுத்திரா

2. யமுனை  -- கங்கை ஆற்றின் துணை ஆறு

3. புதிய வண்டல் படிவுகள் - காதர்

4.காட்வின் ஆஸ்டின் ( K2 ) - இந்தியாவின் உயர்ந்த சிகரம்

5.சோழமண்டலக் கடற்கரை -  தென்கிழக்கு கடற்கரைச் சமவெளி

                       பகுதி -  ஆ

1. சிறு வினா:-

1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.

* பாகிஸ்தான்

* ஆப்கானிஸ்தான் 

* பங்களாதேஷ்

* சீனா

* நேபாளம்

*பூடான்

* மியான்மர்,

* இலங்கை

* மாலத்தீவு

2. இந்திய திட்ட நேரத்தின் ( IST ) முக்கியத்துவம் பற்றிக் கூறுக.

* இந்திய மாநிலங்களுக்கு இடையிலான நேர வேறுபாட்டை தவிர்க்கிறது.

* இந்தியா முழுவதும் ஒரே நேரம் கடைபிடிக்க வழிவகுக்கிறது.

* இந்தியாவிற்கான கிரீன்விச் நேரத்தை கணக்கிடுவது எளிதாகிறது.

3. தக்காணப் பீடபூமி - குறிப்பு வரைக.

* தக்காண பீடபூமி முக்கோண வடிவிலானது. அதன் பரப்பளவு ஏழு லட்சம் ச.கி.மீ.

* மலைகள், ஆறுகள், காடுகள் என மிகப்பெரிய இயற்கை அமைப்பை கொண்டுள்ளது.

                            பகுதி  -   இ

III. குறு வினா

1. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவத்தையும் விவரி.

இமயமலையின் உட்பிரிவுகள் :

* ட்ரான்ஸ் இமயமலை - ஜம்மு காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.

* இமயமலை இது ஒரு இளம் மடிப்புமலை. இது 3 பிரிவுகளை கொண்டது. இங்கு உயரமான சிகரங்கள் உள்ளன.

* பூர்வாஞ்சல் குன்றுகள் - இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது.

இமயமலையின் முக்கியத்துவம் 

* தென்மேற்கு பருவக் காற்றைத் தடுத்து கனமழையைக் கொடுக்கிறது.

* இந்திய துணைக் கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது.

* வற்றாத நதிகளின் பிறப்பிடமாகவும் பல்லுயிர் மண்டலமாகவும் உள்ளது.

* மத்திய ஆசியாவில் இருந்து வீசும் கடும் குளிர் காற்றைத் தடுக்கிறது.

* கோடை வாழிடங்கள், சுற்றுலா தலங்கள், புனித தலங்கள் அமைந்துள்ளன.

*************    **************     **********

2. தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி.

* பெரும்பாலான ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன.

* இவை பருவகால (அ) வற்றும் ஆறுகள் ஆகும். இவை இரு வகைப்படும். அவை,

1. கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்

 2. மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்

1. கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்: (வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகள்)

மகாநதி : 

* 85 இ.மிநீளம், சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் - சிகாவில் உற்பத்தி.

கோதாவரி (நீளமான ஆறு)

* 7465 இ.மீ. நீளம், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம். மேற்கு தொடர்ச்சிமலையில்
உற்பத்தி

கிருஷ்ணா

* 7400 இ.மீநீளம், மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி.

காவேரி (தென்கங்கா)

* 500 இ.மீ நீளம், கர்நாடகா- குடகுமலை, தலைக்காவேரியில் உற்பத்தி.

2, மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்; (அரபிக்கடலில் கலக்கும்)

நர்மதை :

* 73/2 க.மீநீளம், மத்திய பிரதேசம்-அமர்கண்டாக் பீடபூமி உற்பத்தி.

தபதி

* 724 இ.மி நீளம், மத்திய பிரதேசம் முல்டாயில் உற்பத்தி.


3. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக,

1. உற்பத்தி - உத்தரகாண் மாநிலம், உத்தர்காசி மாவட்டம், கங்கோத்ரி.

2. நீளம்-2525 கி.மீ

3. துணை ஆறுகள்- கோமதி, காகீரா, கோசி, யமுனை, சோன், சாம்பல்.

4. கலக்கும் இடம் - வங்காள விரிகுடா கடல்

3. இதன் தொகுப்பு இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பு

6. இதன் ஆற்றங்கரையில் மக்களடர்த்தி மிக்க பலநகரங்கள்.

7. கங்கை, பிரம்மபுத்திரா சேர்ந்து இந்தியாவில் மிகப்பெரிய டெல்டாவை உருவாக்குகின்றன.

4. வங்கதேசத்தில் கங்கை பத்மா என அழைக்கப்படுகிறது.

                     பகுதி - இ 

IV ) கீழ்க்காணும் பகுதிகளை இந்திய வரைபடத்தில் குறிக்க.

1 ) ஆரவல்லி மலைத்தொடர்

2 ) கிழக்குத்தொடர்ச்சி மலைகள் 

3 ) மேற்குத்தொடர்ச்சி மலைகள்

4 ) குருசிகார் சிகரம்

5 ) மாளவ பீடபூமி

6 ) தக்காணப்பீடபூமி 

7 ) சிலிக்கா ஏரி 

8 ) நர்மதை ஆறு

9 ) அந்தமான் நிக்கோபார் தீவுகள்

10 ) சோழமண்டலக் கடற்கரை

***************     ***********    ************

விடைத்தயாரிப்பு : 

திருமதி.ச.இராணி , ப.ஆசிரியை

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

**************   **************   ***************

Post a Comment

1 Comments