ஒப்படைப்பு - விடைகள்
வகுப்பு - 10 சமூக அறிவியல்
குடிமையியல்
அலகு-1 இந்திய அரசியலமைப்பு
பகுதி - அ
1. ஒரு மதிப்பெண் வினாக்கள்
1. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
அ) ஒரு முறை ஆ) இரு முறை
இ) மூன்று முறை ஈ) நான்கு முறை
விடை : அ ) ஒரு முறை
2. ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறமுடியும்?
அ) வம்சாவளி ஆ) பதிவு
இ) இயல்புரிமை ஈ)மேற்கண்ட அனைத்தும்.
விடை : இ ) இயல்புரிமை
3. அடிப்படைக் கடமைகள் எந்தச் சட்டத் திருத்ததின்படி ஏற்றுக் கொள்ளப்பட்டன ?
அ ) 42 ஆ) 44
இ ) 43 ஈ ) 45
விடை : அ ) 42
4. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?
அ) உச்சநீதி மன்றம் விரும்பினால்
ஆ) பிரதம மந்திரியின் ஆணையினால்
இ) தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை : இ ) தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்
5. மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
அ) சமத்துவ உரிமை
ஆ) சுரண்டலுக்கெதிரான உரிமை
இ) சொத்துரிமை
ஈ) கல்வி மற்றும் கலாச்சார உரிமை
விடை : இ ) சொத்துரிமை
பகுதி - ஆ
1. சிறுவினா
1. இந்திய அரசியலமைப்பின் முகவுரை பற்றி சுருக்கமாக எழுதுக.
* முகவுரை' என்ற சொல் அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதைக் குறிக்கிறது.
* இது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களை உள்ளடக்கியது.
* இந்திய மக்களாகிய நாம்' என்ற சொற்களுடன் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடங்குகிறது.
* இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு என நமது அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது.
2. குடியுரிமை பெறுதலுக்கான வழிமுறைகள் எவை?
* பிறப்பின் மூலம் குடியுரிமை பெறுதல்.
* வம்சாவளி மூலம் குடியுரிமை பெறுதல்.
* பதிவின் மூலம் குடியுரிமை பெறுதல்.
* இயல்புரிமை மூலம் குடியுரிமை பெறுதல்
* பிரதேச நாடுகள்) இணைவின் மூலம் குடியுரிமை பெறுதல்.
3. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளைப் பட்டியலிடுக?
1. சமத்துவ உரிமை
2. சுதந்திர உரிமை
3. சுரண்டலுக்கெதிரான உரிமை
4. சமயசார்பு உரிமை
5. கல்வி, கலாச்சார உரிமை
6. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
III. குறுவினா
1. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.
1. உலகிலுள்ள எழுதப்பட்ட எல்லா அரசியலமைப்புகளிலும் மிகவும் நீளமானது.
2. இதன் பெரும்பாலான கருத்துக்கள் பல்வேறு நாடுகளிடமிருந்து பெறப்பட்டன.
3. இது நெகிழும் மற்றும் நெகிழாத் தன்மை கொண்டதாக உள்ளது.
4. சிறு கூட்டாச்சி அரசாங்கத்தை ஏற்படுத்துகிறது.
3. மாநிலங்களிலும் பாராளுமன்ற முறையை தோற்றுவிக்கிறது.
6, இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக்குகிறது.
7. சுதந்திரமான நீதித்துறையை ஏற்படுத்துகிறது.
8. ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது.
9. 18-வயது நிரம்பிய அனைவரும் பாகுபாடின்றி வாக்குரிமை.
10 . சிறுபான்மையினர் , பட்டியல் இனத்தவர் பழங்குடியினர் சலுகைகள்.
2. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை பற்றி எழுதுக.
* இது சட்டப்பிரிவு 32 ஆகும்.
* நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை (அ) ஆணை
நீதிப்பேராணை எனப்படும்.
* இந்த ஆணைகள் மூலம் மக்களை காப்பதினால் உச்சநீதிமன்றம் 'அரசியலமைப்பின்" பாதுகாவலன் எனப்படுகிறது.
* சட்டப்பிரிவு 32- இந்திய அரசியலமைப்பின் 'இதயம் மற்றும் ஆன்மா' ஆகும்.
* உச்ச உயர்நீதிமன்றங்கள் 5 வகையான நீதிப்பேராணைகளை வெளியிடுகின்றன.
1: ஆட்கொணர் நீதிப்பேராணை :
* சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்வதை பாதுகாத்தல்
2. கட்டளை நீதிப்பேராணை :
* ஒருவர் சட்ட உதவியுடன் தனது பணியை நிறைவு செய்தல்.
3. தடையுறுத்தும் நீதிப்பேராணை :
* கீழ்நீதிமன்றம் சட்ட எல்லையை மீறாமல் தடுக்கிறது.
4. ஆவணக் கேட்பு நீதிப்பேராணை :
* உயர்நீதிமன்றம் கேட்கும் ஆவணங்களை கீழ் நீதிமன்றங்கள் அனுப்ப இடும் ஆணைகள்.
3, உரிமை வினவு நீதிப்பேராணை (அ) தகுதி முறை வினவு
* சட்டத்திற்கு புறம்பாக அரசுஅலுவலகத்தைக் கைப்புற்றுவதை தடை செய்தல்.
* சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடை செய்ய நீதிமன்றத்தால் வெளியிடப்படும்
ஆணைகள்.
3. அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும்
இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.
அடிப்படை உரிமைகள் :
* அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசியலமைப்பிருந்து பெறப்பட்டது
*அரசாங்கத்தால் கூட இந்த உரிமையை
சுருக்கவோ, நீக்கவோ முடியாது
* இவற்றை நீதிமன்ற சட்டத்தால் செயல்படுத்த முடியும்.
* இவை சட்ட ஒப்புதலைப் பெற்றவை
* இவை இயற்கையான உரிமைகள்
* நாட்டின் அரசியல் ஜனநாயகத்தை வலுபடுத்துகிறது
அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்
* அயர்லாந்து நாட்டின் அரசியலமைப்பிருந்து
பெறப்பட்டது
* இவை அரசுக்கு வெறும் அறிவுறுத்தல்களே ஆகும்.
* இவற்றை எந்த வகை நீதிமன்றத்தாலும்
கட்டுப்படுத்த முடியாது
* இவை தார்மீக மற்றும் அரசியல் ஒப்புதலைப் பெற்றவை
* இவை மனித உரிமைகளை பாதுகாக்கிறது
* சமுதாயம் மற்றும் பொருளாதார ஜனநாயகம் வலுப்படுத்துகின்றன.
பகுதி - ஈ
1. பெருவினா
1. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.
* இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி (1/1) ல் சட்டப்ப்பிரிவு 12-37 வரை அடிப்படை
உரிமைகள் பற்றி கூறுகிறது.
* முதலில் 7 உரிமைகள் . தற்போது 6 உரிமைகள் உள்ளன. இது இந்தியாவின் மகாசாசனம்.
1. சமத்துவ உரிமை (பிரிவு 14-78)
* சட்டத்தின் முன் அனைவரும் சமம், சாதிமத, இன, பால் பாகுபாடு இல்லை, பொது
வேலையில் சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, சில பட்டங்களை நீக்கல்.
2. சுதந்திர உரிமை (பிரிவு 79-23).
* பேச்சுரிமை, கருத்துரிமை, சங்கம் அமைக்க உரிமை, குற்றவாளிகள் பாதுகாப்பு பெறும்
உரிமை, வாழ்க்கை மற்றும் தனிபட்ட சுதந்திர பாதுகாப்பு, தொடக்க கல்வி பெறும்
உரிமை, கைது செய்து காவலில் வைப்பது பதறி பாதுகாப்பு உரிமை.
3. சுரண்டலுக்கெதிரான உரிமை (பிரிவு 23,24)
* கட்டாய வேலை, கொத்தடிமை முறை, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு.
4. சமயச்சார்பு உரிமை (பிரிவு 25-26 )
* எந்த ஒரு சமயத்தையும் ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும், நிர்வாகிக்கவும் உரிமை.
5. கல்வி, கலாச்சார உரிமை (பிரிவு 29-30)
* சிறுபான்மையினரின் எழுத்து, மொழி, கலாச்சார பாதுகாப்பு, கல்வி நிறுவனங்கள் நிறுவி நிர்வகிக்கும் உரிமை.
6. அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை (பிரிவு 22)
* அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது நீதிமன்றத்தை அணுகு தீர்வு பெறுதல்.
*************** ********* **************
விடைத்தயாரிப்பு :
திருமதி.ச.இராணி , ப.ஆசிரியை ,
அ.ஆ.தி. ந.மே.நி.பள்ளி ,
இளமனூர் , மதுரை.
************* ************* *************
1 Comments
Thank you so much
ReplyDelete