ஒப்படைப்பு - விடைகள்
வகுப்பு: 10
பாடம்: சமூக அறிவியல்
வரலாறு
அலகு -1
முதல் உலகப்போரின் வெடிப்பும்
அதன் பின்விளைவுகளும்,
பகுதி - அ
1. ஒரு மதிப்பெண் வினாக்கள்:
1. எந்த ஆண்டு ஜப்பான் சீனாவின் மீது வலுக்கட்டாயமாகப் போரை மேற்கொண்டது?
அ) 1870 பொ.ஆ ஆ) 1894 பொ.ஆ.
இ) 1881 பொ. ஆ. ஈ) 1890 பொ. ஆ
விடை : ஆ ) 1894
2. இரண்டாம் பால்கன் போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவடைந்தது ?
அ) இலண்டன் உடன்படிக்கை
ஆ) வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை
இ) பிரெஸ்ட் -லிடோவஸ்க் உடன்படிக்கை
ஈ) புகாரெஸ்ட் உடன்படிக்கை
விடை : ஈ ) புகாரெஸ்ட் உடன்படிக்கை
3. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
அ) ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, உதுமானியர்
ஆ) ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, ரஷ்யா
இ) ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி
ஈ) ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி
விடை : அ ) ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, உதுமானியர்
4. 19ஆம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது ?
அ) சீனா ஆ ) ஜப்பான்
இ) கொரியா ஈ) மங்கோலியா
விடை : ஆ ) ஜப்பான்
5. 'ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் ' எனக் கூறியவர் யார் ?
அ) லெனின் ஆ) மார்க்ஸ்
இ) சன்யாட் சென் F) மா சேதுங்
விடை : அ ) லெனின்
பகுதி - ஆ
III. சிறுவினா:-
1. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
* இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூன்றும் மூவர் கூட்டு நாடுகள்.
* இவைகள் நட்புறவு நாடுகள் அல்லது நேச நாடுகள் எனப்படுகின்றன.
2. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் யாவை?
* இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று - Jingoism
* பிரான்சின் அதிதீவிர நாட்டுப்பற்று - Chauvinism
* ஜெர்மனியின் வெறிகொண்ட நாட்டுப்பற்று - Kultur
3. பதுங்குக்குழிப்போர் முறை குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
* பதுங்கு குழிகள் உயிர் பிழைக்கப் போர் வீரர்களால் தோண்டப்படுவது.
* எதிரிகளின் சுடுதலில் இருந்து பாதுகாத்துக் கொண்டு நிற்க உதவின.
* முதல் உலகப் போரின் போது பதுங்கு குழிகள் அதிகம் பயன்பட்டன.
பகுதி - இ
III. குறுவினா
1. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதிக்க.
(i) ஐரோப்பிய நாடுகளின் அணி சேர்க்கைகளும் எதிரணி சேர்க்கைகளும் :
* மூவர் உடன்படிக்கை - ஜெர்மனி, ஆஸ்திரியா - ஹங்கேரி, இத்தாலி.
1 Comments
Thank you so much. Very very useful
ReplyDelete