அறிவியல் அறிஞர்
அலெக்சாண்டர் கிரகாம் பெல்
நினைவு தினம் - 2 - 8 - 2021
மீளாத் துயரின் மீளும் நினைவுகள்
~~~~~~~~~~~~~~~
அலைபேசியின்
அழைப்பு மணி ஒலிக்கையில்
அகிலம் நினைக்கிறது உன்னை !
இன்னும்
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும்
அலைபேசியே ஆளும் இம்மண்ணை !
பள்ளி செல்ல நாட்டமில்லை
கிரேக்கம் , இலத்தீன் பிடிக்கவில்லை
பியானோ வாசிப்பதோ உனதின்பம்..!
பெருகும் ஒலியலைகளை சுவைத்ததினால்
பேசும் ஒலியை மின்னொலியாய்
மாற்றிக் காண்பதில் மகிழ்வு கண்டாய்...!
இனிதாய் விரும்பி செயல்பட்டு
மாறா முயற்சியை மேற்கொண்டாய்...!
தந்தை தந்தது நாவண்மை....! அதில்
நீ கண்டதோ பேராண்மை...!
தொலைவில் குரல்கள் பேசுவதை
தெளிவாய் கேட்க வகைசெய்தாய் ...!
ஒலியே உலகை ஆளுமென
ஒப்பற்ற தொலைபேசியின் வடிவம் கண்டாய்...!
செவியுணர்வில்லா பெண்ணை விரும்பி
அவள் வாழ ஒளியும் நீ ஆனாய் ...!
ஒலியை உணரா செவியுடைய
தாயும் தாரமும் நீ பெற்றாய் ...!
அந்தோ! சாபம் என்றெண்ணாமல்
அதையே படியாய் அமைத்துக் கொண்டு
அகிலம் போற்றும் அறிஞன் ஆனாய்...!
உலகம் முழுதும் உவகை கொள்ள
உள்ளம் தோறும் மகிழ்ச்சி பொங்க..!
எங்கும் எங்கும் ஒலியின் ஆட்சி -- உன்
தொலை பேசியின் பல வடிவக் காட்சி..!
எங்கும் எதிலும் தொலை பேசியே.!
உலக இயக்கமும் தொலைபேசியே..!
இனி தொடரும் ஆய்வின் பயனும்
தொலைபேசியே ...!
விஞ்ஞானியாய்...!
பொறியாளராய்...!
பேராசிரியனாய்...!
பிரிட்டன் கண்ட பொக்கிஷமே ...
கனடாவில் காணாமல் போனதேனோ...!
பயிற்சியும் முயற்சியும் உமது ஞானமோ...?
இன்று நீ தொலைத்தே போனது ஞாயமா....?
உலகம் முழுவதும் நினைக்கும் உன்னை
நினைவு நாளில் நினைக்கிறது
GREEN TAMIL.IN மு.மகேந்திர பாபு.
************** ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** **********
0 Comments