TNPSC - ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - IV மற்றும் கிராம நிர்வாக அலுவலர்.
பொதுத்தமிழ் - பகுதி - அ
இலக்கணம்
1 ) பொருத்துதல்
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
பகுதி - 2
************** ************* *************
1 - பொருத்துதல்
50 வார்த்தைகள் - பொருள் - இதில் 20 வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இரவில் ஆன்லைன் தேர்வு & சான்றிதழ் வழங்கப்படும்.
இரவி - சூரியன்
இடங்கர் - முதலை
இந்து - சந்திரன்
இல் - வீடு
இரைதல் - ஒலித்தல்
இருந்தி - பெருஞ்செல்வம்
இருசு - மூங்கில்
இறகர் - இறகு
இரணியம் - பொன்
இலம் - வறுமை
இடையல் - துகில்
இலகன் - பகைவன்
ஈகை - கொடை
ஈதல் - பிறர்க்குக் கொடுத்தல்
ஈரம் - அன்பு
ஈட்டம் - கூட்டம்
ஈம் - தண்ணீர்
ஈனல் - கதிர்
ஈகம் - சந்தனமரம்
ஈஞ்சு - ஈச்சமரம்
ஈறு - அழிவு
ஈந்த - கொடுத்த
ஈட்டம் - தொகுதி
ஈண்டிய - நிறைந்த
ஈண்டு - இங்கே
ஈன்றார் - தாய் தந்தையர்
ஈறிலி - கடவுள்
ஈங்கதிர் - சந்திரன்
உள்ள - நினைக்க
உத்தரம் - விடை , மறுமொழி
உரன் - திண்ணிய அறிவு
உள்ளம் - ஊக்கம்
உழை - ஒருவகை மான்
உளை - வருத்தம்
உழி - இடம்
உழுவை - ஆண்புலி
உறுதல் - அடைதல்
உறைவது - ஒழுகுவது
உற்றுழி - தேவையான பொருள்
உறவினர் - சொந்தக்காரர்
உசா - ஆராய்தல்
உடுக்கை - ஆடை
உகுநீர் - ஒழுகும் நீர்
உண்டி - உணவு
உவரி - கடல்
உடைமை - செல்வம்
உய்வு - வாழ்க்கை
உழை - மீன்
உண்டி - உணவு
உவகை - மகிழ்ச்சி
************ ************* *************
வாழ்த்துகள் நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
0 Comments