TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி - பொதுத் தமிழ் - பகுதி - அ - இலக்கணம் - 1 - பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க / TNPSC - Group IV & VAO

 

TNPSC - ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - IV  மற்றும் கிராம நிர்வாக அலுவலர்.

 பொதுத்தமிழ் - பகுதி - அ

                இலக்கணம் 

1 ) பொருத்துதல் 

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் 

                            பகுதி - 1


************     ************    **************


1. பொருத்துதல்

1. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க

சொற்களுக்கேற்ற பொருள் தரப்பட்டிருக்கும் பொருத்தமாக ஆராய்ந்து பொருள் உணர்ந்து விடை தருதல் வேண்டும்.

அகவை  - வயது

அண்டாது - நெருங்காது

அவா - ஆசை

அறு - நீங்கு

அற்ற - வற்றிய

அகம் - உள்ளே

அங்கண் - அழகிய இடம்

அகநிலா - விரிந்த நிலை

அமிர்தம் - சாகா மருந்து

அரம்பை - வாழை

அரி - திருமால், பரல், சிங்கம்

அன்னம் - சோறு, பறவை

அழல் - நெருப்பு

அந்தி - மாலை

அதர் - வழி

அடும் - கொல்லும்

அமலன் - தூயவன்

அஞ்சி - பயந்து

அவலம் - துன்பம்

அமணர் - சமணர்

அல் - இரவு

அணி - அழகு

அண்மை - பக்கம்

அஞ்சுகம் -  கிளி

அயில்  - கூர்மை

அன்றில் - பறவை

அம்புலி  - சந்திரன்

அசனம்  - உணவு

அண்டர்  -  தேவர்

அடும்பு - கொடி

அணல் - கழுத்து

அத்தம் - காடு

அரற்றி  - அழு

அல்லல்  - துன்பம்

அண்டர்  - தேவர்

அரவம்   -  பாம்பு

அரற்றி  -  அழுது

அழல்   -  நெருப்பு

ஆக்கம்  -  செல்வம்

ஆயுள்   -  வாழ்நாள்

ஆர்வம்  - விருப்பம்

ஆறு   -  வழி

ஆற்றார்  - தாங்கமாட்டார்

ஆகுலம்  - வீண் , ஆரவாரம்

ஆவி  -  உயிர்

ஆடாதார்  -  குளிக்காதார்

ஆதவன்  -  சூரியன்

ஆயம்   -  ஆட்டம்

ஆரிருள்   -  நரகம்

ஆரல்   -  மீன்

ஆகடியம்   -   ஏளனம்

ஆர்ப்ப   -  ஒலிப்ப

ஆக்கம்  -  செல்வம்

ஆவி  -  உயிர்

ஆடகம்  -  பொன்

ஆசவம்  -  தேன்

ஆன்ற  -  நிறைந்த

ஆடூஉ  -  ஆண்

ஆரணம்  -  வேதம்

ஆபயன்   -  பால்

ஆயம்   -  நீர்

ஆலி   -    மழைத்துளி

ஆளரி   -   சிங்கம்

ஆரை   -  கோட்டை மதில்

ஆமா  -  காட்டுப்பசு

ஆயம்   -  நீர்

ஆண்மை  -  பெருமை

ஆடவர்  - ஆண்கள்

ஆவணம்  -  சீட்டு

ஆயுள்  -  வாழ்நாள்

ஆழி  -  கடல், மோதிரம்

இணை  - சேர்

இடர்  -  துன்பம்

இன்மை  -  வறுமை

இறை  -  கடவுள்

இன்னா  - துன்பம்

இல்லிடம்  -   வீடு

இதயம்  -  உள்ளம்

இருநிலம்  -  பெரியழகு

இல்லம்  -  வீடு

இழுக்கு  - குற்றம்

இறைச்சி  -  வணங்கி

இவுளி  - குதிரை

இந்தனம்  - விறகு

இசை  - புகழ்

இருநிறம்  - அகன்ற நெஞ்சு


**************     **************   *************


வாழ்த்துகள் நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ********

Post a Comment

0 Comments