முதுமுனைவர்.தமிழ்த்திரு.இரா.இளங்குமரனார் ஐயா அவர்களுக்கு பைந்தமிழின் கவிதாஞ்சலி / TAMILTHIRU ERA.ELANKUMARANAR

 

தமிழின் தவப்புதல்வருக்கு கவிதாஞ்சலி

முதுமுனைவர். ஐயா.இரா.இளங்குமரனார்

காலமானார்  ( 26 - 07 - 2021 )

****************    ************   ************


நெல்லை  தந்த  முல்லையே  - தமிழ்ச்

சொல்லைக்  காத்த  கிள்ளையே..!

தமிழே ! கடலே !

படரும்  சுடரே !


ஆசிரியப்  பாதையில்  இலக்கியப் 

பயணம்  கண்ட  மொழி ஞாயிறின் முத்தே !

இயற்கையை இன்பமாக்க கனிச்சுவை  தந்த 

தேனருவியே...!


பைந்தமிழைப் பயிற்றுவித்த தமிழே!

வள்ளுவனுக்கோர்  தவச்சாலை...!

பாவாணருக்கோ  நூலகம் ..!

தந்து மகிழ்ந்தது  உமதுள்ளம்...!

இப்போது உமைப் பிரிந்து

தத்தளிக்கிறதே தமிழர் இல்லம் !


எந்நாளும்  திருநாளாய்..

தமிழ்  வளர்ப்பே சிந்தனையாய்..

திருக்குறளின்  மேன்மை  போற்றி 

திருமணச்  சடங்கையும் 

தமிழாக்கி அகமகிழ்ந்த

தவமைந்தரே  ! 


தமிழாய்ந்த  இளங்கதிரே...!

எங்கே  அஸ்தமனம் ஆனீரோ...!


சதிராடும்  உமது  தமிழ்

சாகாவரம்  பெற்ற சரித்திரம்  அன்றோ..!


மீளாத்  துயர் தந்த

மேன்மைத்  தமிழே - எம்மை

ஆள  இனியாரோ..!


உலகப்  பெருந்தமிழே !

உமது  பாதச்  சுவடுகளில் 

தமிழுலகம்  பயணிக்கும்..! - என்றும்

உமது பணியை வணங்கும் ..!


செந்தமிழே ! இனி

தமிழன்னை  திருவடியில்  இளைப்பாறி  அமைதி  கொள்க..!

ஆழ்ந்த  வருத்தங்களுடன் - பைந்தமிழ் குழு

🙏🙏😭😭🙏🙏


தமிழ்வழித் திருமணம் நடத்தி ,  உரைநிகழ்த்திய இளங்குமரனார் ஐயா அவர்கள்.






Post a Comment

0 Comments