பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - பண்பாடு - திறன் அறிவோம் பாடப்பகுதி பலவுள் தெரிக & குறுவினா - வினாக்களும் விடைகளும் / 10 TAMIL - THIRAN ARIVOM - BOOKBACK QUESTION & ANSWER

 

           வகுப்பு - 10 , தமிழ்  - இயல் - 3

            பண்பாடு - கூட்டாஞ்சோறு 

                   திறன் அறிவோம்



*************     ***************    **********

பலவுள் தெரிக

1) பின்வனவற்றுள் முறையான தொடர் -

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.

(விடை: இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு)

2. “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது -

அ) புத்தூர்

ஆ) மூதூர்

இ) பேரூர்

ஈ ) சிற்றூர்

(விடை: ஈ) சிற்றூர்)


3. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது -

அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ ) உவம உருபு
ஈ) உரிச்சொல்

[விடை: அ) வேற்றுமை உருபு)

4. காசிக்காண்டம் என்பது -

அ )காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

 (விடை: இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்)

5. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு'. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை -

அ) நிலத்திற்கேற்ற விருந்து
ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து
ஈ) உற்றாரின் விருந்து

(விடை: ஆ) இன்மையிலும் விருந்து)

குறுவினா

(1) விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்கள் :

i ) வாருங்கள்
(ii) அமருங்கள்
(iii) தண்ணீர் அருந்துங்கள்!
(iv) உங்களைப் பார்த்து நீண்ட நாட்களாகி விட்டதே! எப்படி இருக்கிறீர்கள்?
(v) உங்கள் வீட்டில் அனைவரும் நலமா?
(vi) உணவு உண்ணலாம் வாருங்கள்!
(vii) (புறப்படும்போது) அடுத்தமுறை வரும்போது இரண்டு மூன்று நாட்கள் கட்டாயம் தங்கியிருப்பது போல்
அழைத்து வாருங்கள். குழந்தைகளையும் அழைத்து வாருங்கள். உங்கள் வீட்டில் அனைவரையும் விசாரித்ததாகக் கூறுங்கள். நீங்கள் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.

2 ) ‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காகவைத்திருந்ததினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

(i) விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாதது இல்லை. செல்வத்தை மட்டும் வைத்துக் கொண்டிருப்பவனிடம் ஈகைக்குணம் இல்லையெனில் அவன் விருந்தளிக்கமாட்டான்.

(ii) விருந்தோம்பலுக்கு மிகவும் இன்றியமையாதது நல்ல உள்ளம், இன்சொல் பேசுதல், அன்பு பாராட்டும் பண்பு, பிறர் பசியைப் போக்க வேண்டும் என்ற எண்ணம், கருணைக்குணம் போன்றவைகளாகும்.

(ii) தனக்கு இல்லையெனினும் பிறர்க்கு உணவளித்து அவர்களின் மகிழ்வில் திளைத்தல் வேண்டும்.


3 ) ' எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக ‘எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது.
‘சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?

சிரித்துச் சிரித்துப் பேசினார்! என்று கூறும்போது அடுக்குத் தொடராகும்.

4 ) இறடிப் பொம்மல் பெறுகுவீர்' - இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

'இறடிப் பொம்மல் பெறுகுவீர்' - தொடர் உணர்த்தும் பொருள் : தினைச் சோற்றை உணவாகப் பெறுவீர்கள்.

5 ) பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

(i) பாரதியார் கவிஞர்  : பெயர்ச்சொல்
(ii) நூலகம் சென்றார்  : வினைச்சொல்
(iii) அவர் யார்?               :  வினாச் சொல்


*************     ***************   ***********


வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    **********


Post a Comment

0 Comments