பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - இயற்கை - நிற்க அதற்குத் தக - எழுத்து & காட்சிப்பதிவில் பாடப்பகுதி வினாக்களும் விடைகளும்.

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

இயல் - 2 , இயற்கை

நிற்க அதற்குத் தக வானொலி அறிவிப்பு

                      ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று
இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


புயலின்போது வெளியே செல்ல வேண்டாம்.


புயலின்போது வெளியே வெளியேற நேர்ந்தால் ஆரம்பகட்ட எச்சரிக்கையின்போதே
வெளியேறவும்.


தொலைபேசி, மின்சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

 மாடியில் இருப்பதைத் தவிர்த்துத் தளப் பகுதியிலேயே  தங்கவும்.


வானொலி அறிவிப்பைக் கேட்டுப் பின்பற்றவும்.

காற்று அடிப்பது நின்றாலும் எதிர்த்திசையிலிருந்து மறுபடி வேகமாக வீச ஆரம்பிக்கும். எனவே, காற்றடிப்பது
முடிந்துவிட்டதாக நினைக்கவேண்டாம்.


மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.


வாகனத்தை ஓட்ட நேர்ந்தால் கடற்கரைப் பகுதிகளுக்குத் தொலைவிலும், மரங்கள் மின்கம்பிப் பாதைகள், நீர்
வழிகள் ஆகியவற்றிலிருந்து விலகியும் வாகனத்தின் உள்ளேயே தங்கியிருக்கவும்.

மேற்கண்ட அறிவிப்பைக் கேட்ட நீங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.

1 ) பாதுகாப்பான இடங்களுக்குக் கூட்டிச் செல்வேன்.

2 ) மின்சார விளக்குகளை அணைத்துவிடுவேன்.

3 ) மேடான பகுதிகளில் தங்க வைப்பேன்.

4 ) வீட்டிலுள்ள கதவு , ஜன்னல்களை மூடிவைப்பேன்.

5 ) முதலுதவிப் பொருட்களைத் தயார் நிலையில் வைப்பேன்.

6 ) சில நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைச் சேகரித்து வைப்பேன்.


கலைச்சொல் அறிவோம்


1 ) Storm - புயல்

2 ) Land Breeze  - நிலக்காற்று

3 ) Tornado - சூறாவளி

4 ) Sea Breeze - கடற்காற்று

5 ) Tempest பெருங்காற்று 

6 ) Whirlwind - சுழல்காற்று

 

நண்பர்களே ! முதல் மற்றும் இரண்டாம் இயல்களில் உள்ள கலைச்சொல் அறிவோம் & ஆங்கில மொழி பெயர்ப்புகளைக் காட்சிப் பதிவில் கண்டு மகிழ்வோமா ?
அறிவை விரிவு செய்


1 )குயில்பாட்டு - பாரதியார் 

2 ) அதோ அந்தப் பறவை போல - ச.முகமது அலி

3 ) உலகின் மிகச்சிறிய தவளை - 
எஸ்.ராமகிருஷ்ணன்

இணையத்தில் காண்க


1. https://ta.wikipedia.org/wiki/காற்றுத் திறன்

2. https://ta.wikipedia.org/wiki/வளி_மாசடைதல்

3. http://agritech.tnau.ac.in/ta/environment/envi_pollution_intro_air_ta.html

****************    *************   ***********

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* *********

Post a Comment

0 Comments