அலகுத் தேர்வு - 2021
பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 1
காலம் : 45 நிமிடங்கள்
மதிப்பெண் : 25
************** ************** ***********
பகுதி - 1 6 × 1 = 6
I ) சரியான விடையைத் தேர்வு செய்க
1 ) தென்மொழி , தமிழ்ச்சிட்டு இதழ்களின் ஆசிரியர்
அ ) க.சச்சிதானந்தம்
ஆ ) பெருஞ்சித்திரனார்
இ ) இளங்குமரனார்
ஈ ) தேவநேயப்பாவாணர்
2 ) புளி , வேம்பு இவற்றின் இலை வகை
அ ) தாள்
ஆ ) இலை
இ ) ஓலை
ஈ ) தோகை
3 ) ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது
அ ) பொதுமொழி
ஆ ) தனிமொழி
இ ) தொடர்மொழி
ஈ ) எதுவுமில்லை
II ) ஓரிரு சொற்களில் விடையளி
4 ) கல் , ஆடு இவற்றின் கூட்டப் பெயர்களை எழுதுக.
5 ) கலையரசன் என்னுடன் படித்தவன் - இத்தொடரில் வினையாலணையும் பெயரை எடுத்தெழுதுக.
6 ) சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் இரண்டு தருக.
தேன் , விளக்கு , மழை , மணி
பகுதி - II 3 × 2 = 6
III ) விடை தருக.
7 ) வேங்கை என்பதைத் தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.
8 ) ' மன்னும் சிலம்பே ! மணிமேகலை வடிவே !' - என்னும் அடியில் இடம்பெறாத ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
9 ) ஒரு சீப்பில் பலதாறு வாழைப்பழங்கள் உள்ளன - இத்தொடரிலுள்ள பிழையைத் திருத்திக் காரணம் கூறுக.
பகுதி - III 3 × 3 = 9
10 ) தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை ?
11 ) தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.
12 ) அன்னை மொழியே ...... ...... முதல்
..... ..... ..... பேரரசே முடிய ' அன்னை மொழியே ' வாழ்த்துப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
பகுதி - IV 1 × 4 = 4
13 ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
வினாத் தயாரிப்பு
திரு.மணி மீனாட்சி சுந்தரம் , தமிழாசிரியர் ,
அரசு மே.நி.பள்ளி ,
சருகுவலையபட்டி , மேலூர் , மதுரை.
************** ************* ***********
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
0 Comments