சர்வதேச சதுரங்க நாள்
( International chess day - 20 - 07 - 21 )
பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் ( FIDE) வழிக்காட்டலின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 20 - ஆம் நாள் அனைத்துலக சதுரங்க நாள் கொண்டாடப் படுகிறது.
1924 - ஆம் ஆண்டு ஜுலை 20 - இல் உலக சதுரங்க கூட்டமைப்பு " பாரிசு " நகரில் நிறுவப்பட்டது. ஜுலை 20 - ஆம் நாளை சர்வதேச சதுரங்க நாளாக 1966 - ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பால் அறிவிக்கப் பட்டது.
" ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா - கூடி
விளையாடு பாப்பா" -- என பாப்பா வை விளையாட அழைக்கும் மகாகவி விளையாட்டின் மேன்மையை தெளிவாக்கி ,மேலும் " மாலை முழுதும் விளையாட்டு" என்று கூறி ஊக்கமூட்டுகிறார்.
அனைவரும் விரும்பும் செயல்பாடு இந்த விளையாட்டு.இவை சிறந்த மனிதப் பண்புகளை வளர்க்கிறது. தலைமைப்பண்பு, ஒற்றுமை,சமாதானம்,வெற்றித் தோல்விகளைச் சமமாகக் கொள்ளும் திறன் , விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு போன்ற பல ஏராள நன்மைகளைப் பெற்று விளங்குகிறது.
விளையாட்டுகளில் உள்ளக விளையாட்டு, வெளிவிளையாட்டு என இரு வகையான விளையாட்டுகள் உள்ளன .அவற்றில் உள்ளக விளையாட்டாக விளங்குவது சதுரங்கம்.
சதுரங்கம் 1500 - ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட விளையாடு. 6 - ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இந்தியாவில் விளையாடப் பட்டு வந்த சதுரங்கம் பின் வளர்ச்சியடைந்தது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகிறது.
இங்கிருந்து தோன்றிய சதுரங்கம் ஐரோப்பா முதல் கொரியா வரை பல வேறுபாடுகளோடு பரவியது. பின் மங்கோலியா வழியாக ரஷ்யா வுக்கு பரவியது.இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவியது. பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின் இஸ்லாமிய நாடுகள் பலவற்றுக்கும் பரவியது.இஸ்லாமிய ர்களால் பத்தாம் நூற்றாண்டில் ஸ்பெயினில் அறிமுகமானது.
13 - ஆம் நூற்றாண்டில் காஸ்ட்டில்லின் அல்போன்சோ X - இன் ஆதரவில் செஸ் ,பாக்கம்மொன் ,டைஸ் என்னும் விளையாட்டு நூல் ஒன்று எழுதப்பட்டது. 11 - ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை எட்டியது .அங்கே அது கூரியர் முதலிய வேறுபட்ட வடிவங்களாக உருவெடுத்தது.
இந்த விளையாட்டை இருவர் ஆடலாம் .ஒவ்வொருவருக்கும் பதினாறு காய்கள் உண்டு ராஜா(king), இராணி( queen) , யானை (அ) கோட்டை(Rook),மந்திரி(Bishop), குதிரை(knight), மற்றும் சிப்பாய்(pawn) போன்றவையாகும்.ஒருவர் கறுப்பு நிறக் காய்களையும்,மற்றவர் வெள்ளை நிறக் காய்களையும் வைத்துக் கொள்ளலாம்.
15 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் சதுரங்க காய்களின் நகர்தல் களுக்கான வரைமுறைகள் இத்தாலியில் பயன்பாட்டுக்கு வந்தன .
" போன்" கள் (வீரர்) முதல் நகர்தலின் போது இரண்டு கட்டங்கள் முன் நகரலாம் என்ற விதி ஏற்பட்டது. " பிஷப்" சிறந்த கட்டங்களின் மூலைவிட்டம் வழியாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதியும் புழக்கத்துக்கு வந்தது.
மூலை விட்டம் வழியாக ஒரு கட்டம் மட்டுமே நகரலாம் என " இராணி" க்கிருந்த சக்தி கூட்டப்பட்டு திறந்த கட்டங்களினூடாக எத்திசையிலும், எவ்வளவு தூரமும் நகரலாம் என அனுமதிக்கப் பட்டு ' இராணி ' ஒரு மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப் பட்டது.
மேற்படி மாற்றங்கள் செஸ்ஸை கூடுதலாகப் பகுப்பாய்வு செய்வதற்கு வழிவகுத்ததின் மூலம் பல ஈடுபாடு ள்ள செஸ் ஆர்வலர் களை உருவாக்கியது.
அந்தக் காலம் முதல் செஸ் அதிக மாற்றங்களைக் காணாமல் இன்று விளையாடுவது போலவே இருந்து வருகிறது.சமநிலைக்கான நிபந்தனைகள் தவிர்த்து ஏனைய தற்போது புழக்கத்திலுள்ள வரைமுறைகள் எல்லாம் 19 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிவு செய்யப் பட்டன.
பல வகை சதுரங்கம்
பல வகையான சதுரங்க விளையாட்டுகள் உலகமெங்கும் விளையாடப்பட்டு வருகின்றன.இவற்றோடு தொடர்புடைய விளையாட்டுகளில் சில சீனாவின் ஷியாங்கி, ஜப்பானின் ஷோகி, நேபாளத்தின் புத்தி சல் என்பன அவற்றுள் புகழ் பெற்றவை ஆகும்.
விளையாடும் முறை
சதுரங்கம் இருவர் விளையாடும் விளையாட்டாகும். தனது அரசனை பாதுகாத்துக் கொண்டு , எதிரியின் அரசனைப் பிடிப்பதே ஆட்டத்தின் சூட்சமம்.எதிரி தனது அரசனைப் பிடித்துவிடுவதற்கு முன்பு பிடித்து விட்டால் வெற்றிகிடைத்து விடும் . விளையாட்டு நிறைவடையும்.
வியூகம், உத்தி.
வியூகம் என்பது ஒரு விளையாட்டிற்கான நீண்ட நேர இலக்கு.உத்தி என்பது உடனடியான நகர்தலுக்கான தந்திரம் . விளையாட்டில் நீண்ட நேர வழிமுறைகளையும், உடனடி உத்திகளையும் வேறுபடுத்த முடியாது.ஏனெனில் வியூகம் சார்ந்த இலக்குகளை உத்திகள் மூலமே அடையமுடியும்.
பன்னாட்டுச் சதுரங்கக் கூட்டமைப்பு.(world chess Federation)
பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு நிறுவனமாகும்.
( பிரஞ்சு மொழியில் FIDE, ஃ பீடே என அழைக்கப்படுகின்றது.)
இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் " நாம் அனைவரும் ஒரே மக்கள் " என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகின் பல விளையாட்டுகளில் உள்ளக விளையாட்டாக சதுரங்கம் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
உலகின் புகழ்பெற்ற வீரர்கள்.
உலக ஆட்டத்தில் புகழ்பெற்ற விளங்கிய வீரர்கள் ஸ்டைநிட்ஸ் லாஸ்கர், காப்பபிளான் கா , அலேஹின், இயூல், பொட்வின்னிக், சிமிஸ்லொவ், டால், பெட்ரொசியான், ஸ்பாஸ்கி, ஃபிவிர், கார்ப்பொவ், காஸ்பரொவ், கிராம்னிக், ஆனந் ஆகியோராவர்.
விஸ்வநாதன் ஆனந்.
உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்ற " கிராம்னிக்கை " 2007 - ஆம்ஆண்டு செப்டம்பரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந் வெற்றிக் கொண்டு உலக சாம்பியன் ஆனார். சென்னையைச் சேர்ந்த இவர் டிசம்பர் - 11 - 1969 இல் பிறந்தார். இந்தியாவின் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதைய உலக சதுரங்க வெற்றி வீரர் ஆவார்.FIDE , ELO மதிப்பீட்டின் படி ஜுலை 2006 -ல் -2779 புள்ளிகள் பெற்றார். இவர் ஒருவர் மட்டுமே 2800 - புள்ளிகளைத் தாண்டிய நால்வரில் ஒருவர் . இவர் 1994 - ல் இருந்து முன்னிலை வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகிறார். செப்டம்பர் - 11 - 2007 - ல் இடம் பெற்ற இறுதிப் போட்டியில் புதிய உலக வெற்றிவீரர் ஆனார்.
விஸ்வநாத ஆனந் பெற்ற விருதுகள்.
ஆஸ்கார் விருது
1997, 1998, 2003 , மற்றும் 2004.
பத்மபூஷன் விருது.
2000
பிரிட்டானிய சதுரங்க கூட்டமைப்பின் Book of the year ,விருது.
1998
ராஜீவ் காந்தி கோர் இரத்னா விருது.
1991 -- 1992
தேசிய குடிமகனுக்கான பத்ம ஸ்ரீ விருது.
1987
தேசிய விளையாட்டு வல்லுநருக்கான சதுரங்க விருது.
1985
ஆகிய பரிசுகளைப் பெற்று தாய் நாட்டிற்கும், தனக்கும் பெருமை சேர்க்கிறார் ஆனந். இவரை , மாணவர்கள் முன் மாதிரியாகக் கொண்டு செயல் பட்டால் , பல ஆனந் களை இந்திய தேசம் கண்டு மகிழும் என்பதில் ஐயம் இல்லை.
விளையாட்டில் பல வெற்றிகளைப் பெற்ற நாம் விளையாட்டின் முக்கியத்தை நமது குழந்தைகள் அறிந்திட வகைசெய்து,அவர்களை விளையாட்டில் ஈடுபடுத்திட வேண்டும்.இன்றைய நிலையில் ஓடி ஆடமுடியாத நிலை. செயல் படவைக்க முடியாத கொடுமையான சூழல் .இது சவாலான நேரமும் கூட இவற்றை சாமர்த்தியமாக த்தான் கையாண்டு வழிக் காண வேண்டும். மாணவர்களின் ஆக்கப்பூர்வமான மாற்றத்திற்கு ஊக்கப்படுத்தி ,விளையாட்டில் ஆர்வத்தை தூண்டி மாற்றம் பல காண்போம்.பிள்ளைகளின் உடல் நலமும் ,மனவளமும் காப்போம்!!
************ ************ *************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
1 Comments
I am really glad that I chose them for my desired work and problem because they have given me the results out of this world! Magnus Carlsen vs Ian Nepomniachtchi Simply magnificent! Suggested to all!
ReplyDelete