ஆறாம் வகுப்பு - தமிழ்
இயல் - 2
பயிற்சித்தாள் - 10 - மதிப்பீடு
************* *************** **********
1 ) பாரதியாரின் இயற்பெயரை எடுத்தெழுதுக.
அ) சுப்புரத்தினம்
ஆ ) சுப்பிரமணியன்
இ ) இராமலிங்கம்
ஈ) இராசகோபாலன்
விடை: ஆ.சுப்பிரமணியன்
2. சாண்டியாகோவுக்கு மீன்கள் எத்தனை நாட்களாகக் கிடைக்கவில்லை?
அ) 24
ஆ) 56
இ ) 84
ஈ) 96
விடை : இ. 84
3. ) விடுபட்ட சீர்களை நிரப்புக.
இனிய உளவாக இன்னாத. கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந் தற்று.
4. சரியா? தவறா?
அ) பாரதியாருக்குப் 'பாரதி' என்ற பட்டத்தை வழங்கியவர் எட்டயபுர மன்னர்.
( சரி )
ஆ) பாரதியார் மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்,
( சரி )
5. கீழ்க்காணும் பத்தியைப் படித்து, கோடிட்ட இடங்களை நிரப்புக.
உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.
வினாக்கள்
அ) உயிர் எழுத்துகளின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்.
ஆ) உயிர் எழுத்துகளும் மெய்யெழுத்துகளும் முதல் எழுத்துகளாகும்.
6. கொடுக்கப்பட்ட பாடலில் விடுபட்ட சொற்களை நிரப்புக.
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்குக்
கேணி அருகினிலே-தென்னை மரம்
கீற்றும் இள நீரும்
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும்.
7. கோடிட்ட இடத்தை நிரப்புக.
சாண்டியாகோவின் தூண்டிலில் மாட்டியிருந்த மீனின் பெயர் சூரைமீன்
8. கீழ்க்காணும் குறளின் பொருளை உன் சொந்த நடையில் எழுதுக.
"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற".
விடை: பணிவும் இன்சொல்லுமே ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன்கள் ஆகும். மற்றவை அணிகலன்கள் ஆகாது,
9. அருஞ்சொற்பொருள் தருக.
அ. ஈன்ற பொழுது - பெற்றபொழுது
ஆ) பெரிதுவக்கும் - பெருமகிழ்ச்சி
10. உயிர்மெய் எழுத்துகள் எவ்வகையுள் அடங்கும்? ஏன்?
விடை: உயிர்மெய் எழுத்துகள் சார்பெழுத்து வகையுள் அடங்கம், முதல் எடுத்தினைச் சார்ந்து வருவதால்.
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments