பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - இயற்கை - 1 மதிப்பெண் கூடுதல் வினா & விடைகள்.

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

இயல் - 2 , இயற்கை 

1 மதிப்பெண் கூடுதல் வினா & விடை



***************    **************    ************

கூடுதல் வினாக்கள்

கூடுதல் 1 மதிப்பெண் வினா விடைகள்

1. உயிரின வாழ்வின் அடிப்படை இயற்கை.

2. இயற்கையின் கூறுகளில் கூடுதலான பங்கு வகிப்பது காற்று.

3.தொல்காப்பியர் உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்கிறார்.

4. மனிதர்களின் இயக்கத்தையும் உலக உயிர்களின் இயக்கத்தையும் தீர்மானிப்பது காற்றின் இயக்கம்.

5. மூச்சுப்பயிற்சி உடலைப் பாதுகாக்கும் என்று கூறியவர் திருமூலர்.

6. பிற்கால ஔவையார் தம் குறளில் காற்றைப் பற்றி வாயுதாரணை என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளார்.

7. கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும் பெயருண்டு.

8.குடக்கு என்பது மேற்குத் திசையைக் குறிக்கும்.

9.வாடை என்பது வடக்குத் திசையைக் குறிக்கும்.

10. கிழக்கிலிருந்து வருகின்ற காற்று மழைக்காற்று எனப்படும்.

11. வறண்ட நிலப்பகுதியில் இருந்து வீசும் காற்று கோடைக் காற்று எனப்படும்

12. வடக்குத் திசையிலிருந்து வரும் காற்று வாடைக்காற்று எனப்படும்.

13. தென் திசையிலிருந்து வருகின்ற காற்று தென்றல் எனப்படும்.

14. “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்று பாடியவர் இளங்கோவடிகள் நூல்-சிலப்பதிகாரம்.

15. நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக என்ற பாடல் இடம் பெற்ற நூல்
புறநானூறு. இப்பாடலில் குறிப்பிடப்பட்ட மன்னன் கரிகால் வளவன்.

16. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்ற நூலை இயற்றியவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

17. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது சிற்றிலக்கிய இலக்கியம்.

18. 'நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி' என்ற சங்கப்பாடலை இயற்றிய பெண்பாற்புலவர் வெண்ணிக்
குயத்தியார்.

19. பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தியவர் ஹிப்பாலஸ்,

20. ஹிப்பாலஸ் கிரேக்க நாட்டு அறிஞர்.

21. ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும் காற்று தென் மேற்குப் பருவக்காற்று.

22. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீசும் காற்று வடகிழக்குப் பருவக்காற்று.

23. இந்தியாவின் முதுகெலும்பு வேளாண்மை.

24. இந்தியாவிற்கு அதிக அளவில் மழையைத் தருவது தென் மேற்குப் பருவக்காற்று.

25. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகிப் புயலாய் மாறும் காலம் வடகிழக்குப் பருவ காலம்.

26. 'வளிமிகின் வலி இல்லை' என்று கூறியவர் ஐயூர் முடவனார், நூல்-புறநானூறு.

27. கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கும் என்று குறிப்பிட்டவர் மதுரை இளநாகனார் நூல் புறநானூறு.

28. காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக்கொள் என்பது புதுமொழி.
காற்றின் மூலம் நமக்குக் கிடைக்கும் ஆற்றல் மின்னாற்றல்.

30. மின்னாற்றல் பெருகினால் நிலக்கரியின் தேவை குறையும்.

31. உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடம் பெற்றுள்ளது.

32. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

33. காற்றை அதிக அளவில் மாசுபடுத்துவதில் உலகிலேயே இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது

34, காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறையும் என்பதை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.

35. சூரியனிடமிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் அரண் ஓசோன் படலம்.

36. குளிர்பதனப் பெட்டி வெளியிடும் நச்சுக்காற்று குளோரோ புளோரோ கார்பன்.

37. உலகக் காற்று நாள் ஜூன் 15.

38. உரைநடையும் கவிதையும் இணைந்து உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படும்.

39. ஆங்கிலத்தில் வசன கவிதை Prose poetry என்று அழைக்கப்படும்.

40. வசன கவிதையை அறிமுகப்படுத்தியவர் பாரதியார்.

41. பாரதியார் இயற்றிய காவியங்கள் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்.

42. பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள் இந்தியா, சுதேசமித்திரன்.

43. நமக்கு இனிய உணர்வுகளைத் தூண்டுவது இயற்கைச் சூழல்.

44. வலம்புரிச்சங்கு பொறித்த கைகளையுடையவன் திருமால்.

45. வண்டுகள் யாழிசை போன்று ஒலிக்கும்.

46. 'நற்சொல்லை நாங்கள் கேட்டோம்' என்று தலைவியிடம் கூறியவர்கள் முதுபெண்கள்.

47. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.

48. தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.

49. ஒரு தொடரின் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருளை உணர்த்துவது வேற்றுமைத் தொகை
எனப்படும்

50. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது
உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.

51. காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகையாகும்

52. காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வருவது வினைத்தொகை எனப்படும்.

53. 'மை' என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

54. உவமைக்கும் பொருளுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.

55. இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகை.

56. வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை ஆகும்.

57. முறுக்கு மீசை வந்தார் அன்மொழித் தொகை.

58. போல, போன்ற, அன்ன, அற்று என்பன உவம உருபுகள்.

59. ஆகிய, ஆன என்பன பண்பு உருபுகள்.

60 . காற்றே வா கவிதையின் ஆசிரியர் 
பாரதியார்.

****************     **************    *********


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* *********

Post a Comment

0 Comments