பன்னிரண்டாம் வகுப்பு
பொதுத்தமிழ் - அலகுத்தேர்வு
மதிப்பெண்கள் : 50
நேரம் : 1:30 நிமிடங்கள்
***************** ************ *********
I ) பலவுள் தெரிக 5 × 1 = 5
1) நுந்தை தந்தைக்கு இவன் தந்தை " என்று பாடும் நூல் -----
அ) நற்றிணை
ஆபுறநானூறு
இ) அறநானூறு
(ஈ) கலித்தொகை
2 ) தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்கு முதன்மை ஆதரமாக விளங்குவது எது?
ஆ) சங்க இலக்கியம்
ஆ) புறநானூறு
இ ) காப்பியம்
ஈ) இதிகாசம்
3 ) பல்+ துளி என்பது எவ்வாறு புணரும் ?
அ) பஃறுளி
ஆ ) பல்துளி
இ ) பல்றுளி
ஈ ) பலதுளி
4 ) பிழையான தொடரைக் கண்டறிக.
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
இ ) நெற்பயிர்கள் மழை நீரில் முழ்கின
5 ) ஓங்கலிடை எனத் தொடங்கும் தண்டியின்
பாடலுக்குரிய பா வகை ----------
ஆ ) இன்னிசை வெண்பா
ஆ) நேரிசை வெண்பா
இ) ஆசிரியப்பா
ஈ ) வஞ்சிப்பா
II ) எவையேனும் ஐந்தனுக்கு விடை தருக:- (5x2 =10)
6 ) கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?
7 ) நடை அழகியல் பற்றித் தொல்காப்பியத்தின் கருத்தைக் குறிப்பிடுக.
8 ) கலைச்சொற்களுக்கேற்ற தமிழ்ச்சொல் எழுதுக .
அ) Biography
ஆ) Bibliography
9 ) ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக:-
அ) சாய்ப்பான்
ஆ ) வந்து
10 ) ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
அ ) செந்தமிழே
ஆ ) ஆங்கவற்றுள்
11 ) பொருள் வேறுபாடு அறிந்து எழுதுக.
அ) களம்
ஆ ) கலம்
III ) எவையேனும் ஐந்தனுக்கு விடைதருக:-
( 5 × 3 = 15 )
12 ) நடையியல் குறித்து விளக்கம் தருக
13 ) ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - இடம் சுட்டிப் பொருள் தருக?
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** **********
1 Comments
சிறப்பாகப் பணியாற்றி வரும் மகேந்திரன் ஐயாவுக்கு கூடு ஆய்விதழின் வாழ்த்துகள்
ReplyDelete